Header Ads



இனவாதத்திற்கு எதிராக, விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பம் - உடனடியாக கைதுசெய்யவும் நடவடிக்கை

மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த சில நபர்கள் முயன்று வருகின்றனர்.

இவ்வாறான நபர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமைத்துவத்திலான விசேட பொலிஸ் பிரிவு, நேற்றைய தினத்தில் இருந்து தங்கள் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இனங்கள் மற்றும் மதங்களை இழிவுபடுத்தி மதத்தை அடிப்படையாக வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறான கருத்து வெளியிடும் நபர்களை தராதரம் பாராமல் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் இனவாத மோதலை ஏற்படுத்துவதற்காக அமைப்பு ரீதியான குழுக்கள் முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

5 comments:

  1. வரவேற்கிறோம். மகிந்தயும் இப்படி ஒரு பிரிவை நிறுவினார். பின்னர் தான் பூகம்பம் வெடித்தது.

    ReplyDelete
  2. ஒரு அமைப்பும் இல்லை ஞான சாராவை கைது செய்து உள்ளே தள்ளுங்கள் எல்லாம் செரியாகிவிடும்.வேசம் போட்டுத்திருயும் இந்தப்பயங்கரவாதியை முதலில் கைது செய்யுங்கள்.

    ReplyDelete
  3. Auspiciously start with GNANASARA , very simple and
    effective !

    ReplyDelete
  4. பௌத்த தீவிரவாத அமைப்புகளை தவிர...

    ReplyDelete

Powered by Blogger.