Header Ads



வடக்கில் புலிகளின் மாவீரர் தினம் - சிங்களவர் கடும் எதிர்ப்பு


யுத்தத்தில் உயிரிழந்த  உறவுகளை நினைவுகூருவதாக தெரிவித்து வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களின்  முன்பாக புலிகளின் பதாதைகள் ஏந்திக்கொண்டு புலிகள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.  இது இனவாதத்தினை வலுவாக்கும் செயற்பாடாகும். எனவே வடக்கில் இவ்வாறு புலிகளை நினைவு கூர்ந்தவர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 157 ஆ. சட்டமூலத்திற்கு அமைவாக பிரிவினை வாதத்தினை தூண்டுவது தவறான செயற்பாடாகும்.  எனவே மேற்குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களை சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம்  கோரிக்கை விடுக்கின்றோம்.
தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2

வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற உயிரிழந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர்கள் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் எவ்விதமாக அமைய போகின்றது என கேள்வி எழுப்பியுள்ள ராவணா பலய , நாட்டை துண்டாடும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசயிலமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

ராவணா பலயவின் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாது தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில் ,

வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனிக்கின்ற நிலையில் தென்னிலங்கையில் சிறிய சம்பவம் என்றாலும் கைதுகள் இடம்பெறுகின்றன. வடக்கில் 270 திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் காணப்படுகின்றன. அதனை விக்ணேஷவரன் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. அவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கில் காணப்படும் விகாரைகள் தொடர்பில் கண்காணித்து அவற்றை மறுசீரமைத்து விகாராதிபதிகளை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யவிடின் தொல்பொருள் ஆராச்சி தினைக்களத்தினால் அவை ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு அழிக்கப்படலாம்.

மேலும் மாவீரர் அனுஷ்டிப்புகளில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாட்டினையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

3

விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? எனக் கேள்வி எழுப்பும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப்பதை எதிர்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.  
இது தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பியான வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர்.  இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர்நீத்த தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு ?  இதில் தவறேதும் இல்லை. ஜே.வி.பி. யும்   ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.   
பிரபாகரன் இறந்த தினம் அனுஷ்டிக்கப்படலாம்.  அதேவேளை யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை அனுஷ்டிப்பது தார்மீக கடமை. அதற்கு தடைவிதிக்கலாகாது. ஆனால் இதன் போர்வையில் இலங்கைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை நினைவு கூருவதும், தனித் தமிழீழத்தை நினைவு கூருவதும் ஏற்றுக் கொள்ளப்பட  முடியாது. 
இந்த இரண்டு விடயங்களும்  நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன   என்றார்.  


2 comments:

  1. விஜயவீர பொது இடத்தில குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்யவும் இல்லை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் உடமைகளை திருடிக்கொண்டு அவர்களை துரத்திவிடவும் இல்லை. ஆனால் பிரபாகரன் இதையெல்லாம் செய்தான்

    ReplyDelete
  2. மற்றவர்களை கொண்றுவிற்று நீ மட்டும் உயிர்வாழ நினைத்தது தான் தப்பாபோச்சு.

    ReplyDelete

Powered by Blogger.