November 24, 2016

கொழும்பில் அழுகின்ற பலநூறு இதயங்களில் இருந்து, ஓர் மாணவியின் உளக்குமுறல்..!

-NJ NASEER-

இனவாதத்திற்கு இறையானவர்கள் நாங்கள், பலமுறை எழுத முயன்றும் தோற்றுப்போனோம்.

உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்.

உரிமையிருந்தும் உரக்கப்பேச முடியாமல் கண்முன்னே பாரபட்சம் காட்டப்பட்டு நாம் பல சந்தர்பங்களில் நிராகரிக்கப்பட்டோம். உயர்கல்வி கனவு உண்மையானதை எண்ணி சந்தோசப்பட்டதோடு என்னைப் போன்று கல்லூரிக்கு வரும்போது மற்றைய முஸ்லிம் சகோதரிகளும் பல்லாயிரம் கனவுகளோடு உள் நுழைந்தோம். எப்போதும் எந்த சந்தர்பத்திலும் நாம் எமது மார்க்கத்தையோ அல்லது கலாச்சாரத்தையோ விட்டுக் கொடுத்தது இல்லை.ஆண் பெண் வரையறைகளை மீறியதும் கிடையாது.

கல்வி இருக்கின்ற இடத்தில் பண்பாடு இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஆனால் பண்பாடு கல்வியால் வந்தது அல்ல என்பதை இங்கு கண்டு கொண்டேன், மனிதாபிமானமும் கூடவே. முன் உதாரணமாக திகல வேண்டியவர்களே இங்கு இனவாதம் போதிக்கின்றார்கள் என்றால் அவரகளுடைய சமூகத்தின் இளைய தலைமுறையின் நடவடிக்கை பற்றி நான் கூறவேண்டியதில்லை.

முக்காடு தலையை மூடியிருப்பதாய் காரணம் காட்டி எங்களில் திறமையானவர்கள் கூட நிராகரிக்கப்பட்டோம். காரணம் முக்காடு எம் கண் அசைவை மறைத்து விட்டதாம். முக்காடு போட்டது எம் தலைக்கு மட்டுமே கண்களுக்கு அல்ல.

>நாங்கள் முன் வரிசையில் உட்கார வேண்டியதில்லை என்பதை அவர்களே தீர்மானித்து விட்டார்கள்.

>அபாயவை காணும் போதெல்லாம் அவர்களுக்கு பேய் உலகத்தை காண்பதாய் இருக்கின்றதாம்.கலாச்சாரம் கல்லூரிக்குல் வேண்டாம் என்று பகிரங்கமாய் கூறி விட்டார்கள்.

>ஒவ்வொரு விரிவுரையின் போதும் ஏச்சுக்கள் மட்டுமே மிஞ்சிப் போனது

>எப்போதும் வெறுப்பை மட்டுமே  எங்கள் மீது உமிழ்கின்றார்கள்.

>பதில் தெரிந்தும் நிர்ப்பந்தத்தின் பேரில பதில்  கூற முடியாமல் தவித்தோம்.

ஜனநாயக நாட்டில்  அரசாங்க கல்வி நிலையத்தில் கலாச்சார உடை அணிய உரிமை இன்றி தவிக்கின்றோம். முதல் வரிசை வேண்டாம் இரண்டாம் வரிசையில் கூட உட்கார  உரிமை இன்றி தவிக்கின்றோம்.முக்காடு எம் அறிவை மறைக்கவில்லை அவயங்களை மாத்திரம் தான் மறைக்கின்றது.ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நாம் அவர்களோடு ஒருபோதும் பிரச்சனைப் படவில்லை.அவர்கள் கேட்டபோதெல்லாம் உதவினோம்.சிரிக்கும் போதெல்லாம் சிரித்தோம்.இப்போதெல்லாம் அந்த சிரிப்பில் பொய் இருப்பதாய் உணர்கின்றோம்.நாம் அவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தவில்லை.ஆனால் இந்த நிமிடம் வரை காயப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்துவதும் உடையை கொச்சைப்படுத்துவதும் அவர்களுக்கு பொழுதுபோக்காய் போய்விட்டது.எங்களுக்கு  மனங்களில் ஆறாத வடுக்களையும் ரணங்களையும் ஏற்படுத்தி விட்டது.இன்றுவரை எங்களை மாணவர்களாய் பார்க்கவில்லை முஸ்லீம்கள் என்ற முறையில் மாத்திரமே பார்கின்றார்கள்.முடிவாய் நான் கேற்கின்றேன்.

>கலை நிகழ்ச்சிகளும் வைபவங்களும் வரும்போது பணம் எனும் பெயரில் சமத்துவம் பார்க்கின்றவர்கள் எமது உரிமைகளில் சமத்துவம் பார்க்கத் தவறியது ஏன்??

>இலங்கை ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களாக பிறந்தற்காய் அடிப்படை உரிமைகள் கூட இல்லையா?

>இனவாதம் என்கின்ற கொடிய நோய்க்கு பலியானது இவங்கையின் நாளைய எதிர்காலமான மாணவர்களுமா?

>எங்களுக்கே உரிமைகள் பறிபோன நிலையில் வரும் தலைமுறையின் உரிமைகளை யாரிடம் போய்க் கேற்பது?

>எமக்காகா குரல் கொடுப்பவர்கள் யார்?வரும் தலைமுறையை காப்பவர்கள் யார்?

இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்குன்றான் என்ற ஒரு நம்பிக்கையில் மாத்திரமே பல சவால்களுக்கு மத்தியிலும கல்லூரியில் எம் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

21 கருத்துரைகள்:

5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். பொறுமையுடன் இருங்கள் இன்ஸாஹ் அல்லாஹ் இறைவன் உங்களை பொருந்தி கொள்ளுவான்

Allah will bless you sister. Allah will reward you one day for your patience. I proud about many sisters they are fighting day by day for their rights. Let's wait for some years with patients for a good news from Allah.

A kind request, let's try our hijab design as per our traditional design. You are educated. You design it without contradict to Quran and sunnah. Let's avoid the black color habayas which tradition of another country. We are not in a Muslim country sister. So, we should follow a traditional dress code which belong to us without contradict to our culture as per Quran and sunnah.

SAD.. but this is the fact...
Who can answer for this...? 23+ Musi+lim koottamaippugal...?
Lots of Aasaath Saali.....s...?
Lots of Muslim name holders (like Shikh...s...Salafies....)...?
Vijedhaasa Ragapaksa...? and his lovers from Musi+lim heads...?
Musi+lim MPs...?
Ranil....?
May3....?
Bad words commentators in Jaffnamulsim.com...?

WHoooooo?

இதை போன்ற எமது இஸ்லாமிய கலாச்சாரதை பேணக்கூடிய எமது சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்க எல்லோரும் துஆ செய்வோம்

இன்ஷாஅல்லாஹ் பொறுமைஎனும்
இதேநம்பிக்கையுடன் தொடர்வோம்,

இதுஅற்ப வாழ்க்கை என ஒருசொல்லில் ஆறுதல்கூறி உங்களுடய இலட்சியஙகளையும் உணர்வுகளையும் உதாசீனப்படுத்த முடியவில்லை, நிச்சயம் மறணம் வரைக்கும் பொறமைசெயவதே ஈமானுடயோருக்கு காட்டப்பட்ட நேரிய வளி...

I think ur out of ur mind better consult a doctor

இதே போல் பல சகோதரிகள் எமுதட்டும்,அங்கு நடக்கும் நடவடிக்கை அறியட்டும்,எம் நாட்டில் பலதரப்பட்ட புத்திஜீவிகள் உள்ளார்கள்,அவர்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டார்ளோ தெரியாது,தயவு செய்து இதைப்பற்றி அவசரமாக ஆராயவும்.இதை வாசிப்பவர்கள் பயப்படுவார்கள்

இதே போல் பல சகோதரிகள் எமுதட்டும்,அங்கு நடக்கும் நடவடிக்கை அறியட்டும்,எம் நாட்டில் பலதரப்பட்ட புத்திஜீவிகள் உள்ளார்கள்,அவர்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டார்ளோ தெரியாது,தயவு செய்து இதைப்பற்றி அவசரமாக ஆராயவும்.இதை வாசிப்பவர்கள் பயப்படுவார்கள்

என் அன்பு சகோதரியே! உன் மனக்குமுறலை இவ்வளவு சுருக்கமாக கூறி விட்டாய் உன் சகோதரனாய் உன் உணர்வை மதிக்கிறேன், அத்தோடு உன் இந்த இளம் வயதில் உன் பக்குவமான, ஆழமான, சிந்தனைமிக்க கருத்துக்களை எம் ஏனைய மாணவிகளும் உணர்ந்துகொள்ள ஏதுவாய் அமைந்திருக்கின்றது. நீ கூறியது போன்று உன் பொறுமையின் முடிவில்தான் அல்லாஹ்வின் உதவியின் ஆரம்பம் என்பதை மறக்காமல், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எம் மார்கத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளை புறந்தள்ளிவிடாதே. உன்னைப் போன்ற பெண்கள் அன்னை பாத்திமா போன்று மாறி இன்னும் பல பாதிமாக்களை உருவாக்கக வேண்டும், உன் கல்வியிலும் தீனிலும் அல்லாஹ் பறகத் செய்வானாக. என் அன்புக்கினிய சகோதரிகளே! எம் முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் ஆனால் அதற்காக எந்த நிலையிலும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது, ஏனென்றால் நாம் மரணிக்கப் பிறந்தவர்கள் எம் மரணத்தின் பின் எமக்கு உதவக்கூடியது அல்லாஹ்வின் தீன் மாத்திரமே. (தொடரும்)

ஒரு ஈமானிய மாணவியின் யதார்த்த வெளிப்பாடு இது. உங்களது ஆக்கத்தின் இறுதிப்பந்தியே விடையையும் தந்துவிட்டது்
நாம் ஒவ்வொருவரும் இவ்வாறான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இஸ்லாமிய வழிகாட்டல்களைப் பொறுமையுடன் கடைப்பிடிப்போமாயின் உலகம் ஒருநாள் எமது கையில்வரும். இன்ஷாஅள்ளாஹ்!

இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும்

It bring very sadness on Muslim. But on the other hand it is our fault, not anyone else. Because if you look how many muslin schools in Colombo and other areas. There are few of them doing well, most of them underperform schools, specialy in Colombo. I don't think in Colombo any of the Muslim schools performing well, if we change this situation. I think that is the answer.

Fist we need to find our weekneses and find way to correct it.

Muslims live Colombo who can do a free afternoon classes for the schools children who haven't got right teach for certain subjects.this will help for certain extent to keep our children in our schools.

Sister your argument may be right , But I don't know which institute you are talking about, As a university student we have not came across such things,
you may be religious girl but your giving a wrong message to fellow Muslims, by reading this atleast one student can lost her courage to continue her higher studies. So please don't create a bad image on all the institute

You may be right sister. But my understanding is that you have to adhere to the culture as long as you do not go beyond the purview of Islam. I can only say if you are wearing only black abaya please change it to nice colours. Also if you are covering your face, it is better that you take the veil.if that is what causing the problem.
If you think removing the face cover not correct please seek advice from more than one Islamic scholars

Dear Mohamed Abraj, you may not come across like these situations in your institution. But she said the truth. Even though it's hard to digest, you have to accept the truth. It is the situation prevailing most of government institutions.

We youths have to think and make a solutions for our sisters.

'சிரிக்கும் போதெல்லாம் சிரித்தோம்.இப்போதெல்லாம் அந்த சிரிப்பில் பொய் இருப்பதாய் உணர்கின்றோம்.நாம் அவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தவில்லை.'

மனிதன் உணர்வுபூர்வமானவன். உள்ளத்தால் இயங்குபவன். முகத்தால் அவ்வுணர்வுகளை வெளிப்படுத்துபவன். அதற்கிணையான நியாயமான பிரதி உணர்வுகளை இயல்பாகவே எதிர்பார்ப்பவன்.

அவர்கள் சிரிக்கும்போது நீங்களும் சிரித்தீர்கள். அவற்றை நீங்கள் ரசித்தீர்கள். ஆனால், உங்கள் சிரிப்பை அவர்கள் ரசிப்பதை நீங்கள் தடுத்தீர்கள் உங்கள் முகங்கள் மூடியிருப்பதனூடாக.

இப்போது சொல்லுங்கள், நீங்கள் அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தவில்லையா?

Dear Subair Abul Hudha
Yes bro you are absolutely correct,but I & my friends of muslim brothers can take care of the challenges of our particular institute only,we too have faced some issues regarding girls habaya & all..but the true & bitter fact is the main reason for ths type of issues is our girls due to variation in wearing dresses like some are with habaya while few wearing other codes.So the abaya wearers facing problems..similarly many issues... These are unsolvable in our society...In order to speak & achieve our cultures definitely our boys must be forward.Moreover there are lack of Muslim boys in such institutions.so our girls facing difficulties in facing such problems.so we must encourage our boys to enter government institutions and make change Insha Allah

Post a Comment