November 07, 2016

'பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தாகக் கூறி, பத­விக்குவந்த அரசு முஸ்­லிம்­களை ஏமாற்றிவிட்­டது'

குரு­நாகல் நகர எல்­லைக்குள் அமைந்­தி­ருக்கும் தெலி­யா­கொன்ன ஜும்ஆ பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு 11.23 மணி­ய­ளவில் கல்­லெ­றிந்து தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லை­வ­ரினால் நள்­ளி­ரவு 1.30 மணி­ய­ளவில் பொலி­ஸா­ருக்கு சம்­பவம் தொடர்பில் அறி­விக்­கப்­ப­டவே பொலிஸார் உடன் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். பள்­ளி­வாசல் சி.சி.ரி.வி. கமரா மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கி­லுள்ள கடைகள் மற்றும் வீடு­களின் சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களை பொலிஸார் பெற்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி கண்­டனம்

பள்­ளி­வாசல் தாக்­குதல் குறித்து முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் கண்­டனம் தெரி­வித்­துள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் ‘மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டி­னார்கள்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு சமாதி கட்­டு­வ­தா­கவும் நல்­லாட்­சியில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கப்­படும் என்றும் கூறி பத­விக்கு வந்­தார்கள். ஆனால் இந்த நல்­லாட்­சியில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்பு பல பள்­ளி­வா­சல்­க­ளுக்­கெ­தி­ரான சம்­ப­வங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தாகக் கூறி பத­விக்கு வந்த அரசு முஸ்­லிம்­களை ஏமாற்றி விட்­டது. பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்கு ஜனா­தி­ப­தியும் பிரதமரும் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி உருவாகுவதற்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்ய வேண்டும்’ என்றார்.

இதேவேளை சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

7 கருத்துரைகள்:

சூழ்நிலைக்கேற்ப செயல்படும் இந்த கும்பல் நாட்டின் ஸ்த்திர தன்மைக்கு குந்தகம் விளைவிப்பவர்களே தவிர இனவாதிகள் அல்ல அதை வைத்து பிழைப்பு நடாத்துபவர்கள்..

Andru mahindawukku toppi potru ponnadai potru kurunakal palliyel waittu saththar pallihalukku yarum adikka willai. Muslimgale adiththu witru singalawar mail pali podappaduhiratu endru. Eppotum mahinda pinnal suththum aswer, saththar, mubarak maulavi pondrorin sathi yaha irukkalam inda palli halukku adippatu.arasangaththukku awappeyar wangi koduththu vittu mahinda pakkam muslingalai tiruppum oru seyal than inda vidayam.

அதைப்பற்றி முஸ்லிம்கள் தானே கவலை பட வேண்டும்

அதனைப் பற்றி பேசும் தகுதி உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு இல்லை... யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை... அல்லாவஹ்வின் பாதுகாப்பு எங்களுக்கு போதும்... இது உலக அழிவின் அடையாளங்கள்... உங்களைப் போன்று ஜால்ரா அடிக்கும் கும்பலை தலைவர்கள் ஆக்கியது எங்கள் மடமை. சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் அழிவு வெகு தொலைவில் இல்லை...

Why not Mr. Aswer make his comments in English?

ஏண்டா இனவாதி மஹிந்தவுக்கு வால்பிடிக்கும் பொறம் போக்கு முன்னணியின் செயலதிபர் முட்டாள் அஸ்வர்,

நீ சென்ற ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பல பள்ளிகள் தகர்க்க பட்டு பல சொத்துக்கள் அளிக்கப்பட்டு சமூகத்தவர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டபோது கூட
நீ இப்படி கொதிக்கவில்லயே அது எண்டா மூதேவி இப்போது யாருக்காக டா
நீ இந்தக் கொத்தி கொதிக்கிறது சமுதாய பற்றா? இல்ல பதவி பற்றா?

முன்னைய சனாதிபதிர கொணாவ பிடிச்சிக்கி இருக்கக்கொள்ள வராத துணிச்சல் இப்ப வந்து என்னசெய்ய ???

Post a Comment