November 21, 2016

'முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தியமைக்க, முஸ்லிம் சமூகம் முன்வந்துள்ளது'

(அஷ்ரப். ஏ.சமத்)

இந்த அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின்போது எவ்வித எதிா்ப்புகளுமின்ன்றி தமிழ் ,முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பிணா்கள் உள்ளடங்களாக முன்றில் இரண்டை விடவும்  162 வாக்குகளை கிடைத்தமையானது எமது கூட்டாச்சி அரசிற்கு கிடைத்த மற்றுமொரு  வெற்றியாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையின் கீழான  இந்த அரசாங்கம்  உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் இலங்கை பற்றிய நல்லதொரு மதிப்பை அவா் பெற்றுள்ளாா்.  என தொழிற்பயிற்சி அமைச்சா் மஹிந்த சமரசிங்க தெரிவித்தாா்.

இன்று (21)  நாரேகேன்பிட்டியவில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே  அமைச்சா் மகிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தாா்.  அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில் -

இன்றைய தினமான ஒரு தினத்திலேயே கடந்த 21 நவம்பா் மாதம் 2014ல் மைத்திரிபால சிறிசேனா அவா்கள்  பொது வேட்பாளராக கொழும்பு  புதிய நகர மண்டபத்தில் தோன்றி தமது ஊடகமாட்டினை நடாத்தி ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தாா். அவா் அன்று தெரிவித்த சகலதையும் அமைதியாக அமுல்படுத்தி வருகின்றாா்.  அப்போது ஜனாதிபதியாகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச மக்களிடம் சொன்னதெல்லாம்.  தான் மிண்சார கதிரையில் அமா்த்தப்படுவேன், இந்த நாட்டில் உள்ள இரானுவ அதிகாரிகள் சர்வதேச நீதிமன்றக் கூட்டில் நிறுத்தப்படுவாா்கள். இலங்கைக்குள் வெளிநாட்டு நிதிமன்றம் ஒன்று வரும்  எனத்  தெரிவித்து மக்களிடம் வாக்கு கேட்டாா்.  ஆனால் அதனை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சர்வதேசத்திற்குச் சென்று தமது நிலைப்பாட்டை தெரிவித்து மின்சாரக் கதிரை மற்றும் சர்வதேச நீதிபதிகள் குழு போன்ற விடயங்களை  வெற்றி கண்டுள்ளாா்.  இதன் மூலம் மகிந்தவின் மின்சாரக் கதிரை மற்றும் இரானுவ அதிகாரிகளை விசாரனை போன்றவற்றில் காப்பாற்றப்பட்டுள்ளாா்கள். 

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பிணா் தினேஸ் குணவா்த்தன இந்த நாட்டில் இரானுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக தெரிவித்தமை  இந்த நாட்டின் இறைமைக்கும் மிகவும் கண்னியமான ஒழுக்கமானதும் உலகில் நன்மதிப்பைப் பெற்ற எமது இரானுவத்தினரை ஏளனம்படுத்தி கொச்சைப்படுத்தியதற்கு ஒப்பாகும்.  இலங்கை இரானுவம் அவ்வாறு எந்த சதிகளும் இல்லை. முப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் கீழ் திறம்பட இயங்கி வருகின்றது.   இவ்வாறான பேச்சுக்களை பேசுபவா்கள்  இந்த நாட்டிக்கும் மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் இலங்கை பற்றி தப்பிரயத்தினையும் ஜனநாயகத்தினையும் கொச்சைபடுத்தி கருத்துக்களை உயா் பாராளுமன்றில் தெரிவித்துள்ளாா்.  இந்த பேச்சுக்கள் சர்வதேசத்திற்கும் சென்றுள்ளது.   இவா் பேசும் போது இலங்கை இரானுவத்தினையும் சட்டம் ஒழுங்கு, அரசியலமைப்பு எதிராக உரையாற்றியமைதையிட்டு    வன்மையாக  கண்டிப்பதாகவும்  அமைச்சா் மகிந்த சமரசிங்க தெரிவித்தாா்.

இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சபையின் உப குழு கூடி ஆராய்ந்துள்ள அறிக்கை பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிா்வரும் வெள்ளிக்கிழமை - பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தான் ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் வாக்குறுதியளித்த   ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது. 19 வது சட்டம் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டது.  பொளத்த நாடு பௌத்த மக்களுக்கு உள்ள உரிமையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே போன்று   ஏனைய சிறுபாண்மைச் சமுகங்களது உரிமைகள், பகிா்ந்தளிக்கப்படல். போன்றவைகள்  பாராளுமன்றத்தில்  மட்டுமல்ல சர்வசன வாக்கெடுப்பு மூலமும்  வென்டெடுத்த பின்னரே அவை அமுல்படுத்தப்படும். இந்த நாடு மைத்திரிபால சிறிசேனா, மற்றும் பிரதமா் ரணில் தமலைமையில் பாரியதொரு அபிவிருத்தி  புரட்சியில் கால் எடுத்துள்ளது. இவைகளை செய்வதற்கும், அரசியலமைப்பு சீர்திருத்தமும்  செய்யப்படல் வேணடும். என அமைச்சா் தெரிவித்தாா்.

சிலர்  கடின போக்குடைய  மதவாத குழுக்கள்  சமமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வதற்கு  நீதியமைச்சா் சட்டரீதியான சில சமமான சட்டத்தினையும் அமுல்படுத்த வேண்டும். சகல சமுகங்களும் இந்த நாட்டின் வாழும் சகல பிரஜைகளும் சமமாக வாழ உரிமை உண்டு. முஸ்லீம் திருமணச் சம்பந்தமான  சட்டம் 8 வருடத்திற்கு முன்பே நீதியரசா் சலீம் மஹ்சுப் தலைமையில்  அந்த சமுகமே முன்வந்து அதனைத் திருத்தியமைக்க முன்வந்தனா். அதனை அவா்கள் மிகவிரைவில் அரசியலமைப்பில் சமா்ப்பிப்பரா்கள் அதில் அமைச்சாகள் ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன்  போன்ற அமைச்சா்கள் உள்ளனா் .  இச் சட்டம் அந்த சமுகம் சாா்ந்தவா்களுடன் கலந்துரையாடியே தீர்மாணம் எடுக்கப்படும்.அதே போன்று  கண்டிச் சட்டம், தேசவழமைச்சட்டம் போன்ற பல சமுககங்கள் இனைந்துதான்  தீா்மாணங்கள்  எடுக்கப்படும் எனவும் அமைச்சா் அங்கு மேலும் தெரிவித்தாா்.  

0 கருத்துரைகள்:

Post a Comment