November 19, 2016

விஜயதாசாவுக்கு முஸ்லிம்கள், வழங்கப்போகும் பதில் என்ன..?


-M.JAWFER.JP-

நாட்டில் தற்போதுள்ள இனவாத நடவடிக்கை அதிகரித்திருக்கும் சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சர் எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றியுள்ளார்.கடந்த காலங்களை விடவும் மிகவும் அதிகமான தரப்பினரால் முஸ்லிம்கள் மீது அவதூறுகளும் பழிகளும் சுமத்தப்படும் இக்காலகட்டத்தில் இவ்வாறான பேச்சுக்கள் இனவாதிகளை உற்சாகப்படுத்தும் விதமாகவே உள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் கூறப்பட்ட ஒரு விடயத்தை இன்றைய கட்டத்தில் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் கூறியிருப்பது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் மன வேதனை அடைய செய்துள்ளது.இதில் வேடிக்கை நான்கு குடும்பத்தை சேர்ந்த முப்பத்தி இரண்டு பேர் அப்படியன்றால் ஒரு குடும்பத்தில் எட்டுப்பேர் இன்றைய சூழலில் இலங்கையில் எட்டுப்பேருள்ள குடும்பம் இருப்பதும் அரிதாகவே உள்ளது அப்படி இருந்தாலும் அமைச்சரின் கூற்றுப்படி இன்றுப்பிறந்த பச்சை பாலகனும் அந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளார் என்பதுதான் கருத்தாக அமையும். இந்த அறிக்கையை ஏற்க்கனவே இராணுவத்தினரும் உளவுத்துறையும் இல்லை என்று நிராகரித்த ஒரு விடயத்தை இந்த நீதி அமைச்சர் பேசியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இனவாதிகளுக்கு உரம் இடும் கைங்கரியத்தை அரச தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தெளிவாக புரிகின்றது. பகிரங்கமாக தகாத வார்த்தைகளால் திட்டியும்,முஸ்லிம்களை அழித்து விடுவோம் என்றல்லாம் சொல்லும் காடையர்களின் குரல்கள் இவரின் காதில் விழவில்லை,வடக்கில் ஆவா படை நாளுக்கு நாள் வெட்டிக்கொண்டு இருக்கிறது ஏன் போலீசாரை வெட்டியுள்ளார்கள்   அதைப்பற்றி வாய் திறக்காத அமைச்சர் அவர்கள் முஸ்லிகளின் மீது குற்றம் சுமத்துவதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். இதில் இருந்து வெளிநாட்டு கைக்கூலிகளின் பிடியில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு இருக்கிறது என்பது புலனாகின்றது.

நல்லாட்ச்சியை கொண்டு வர அரும்பாடு பட்ட முஸ்லிம்களை பழிவாங்குவதில் இரவு பகலாக திட்டமிடும் தரப்புக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகின்றது.மத குறு என்ற காரணத்துக்காகவும் மங்சள் துணி உதித்தி இருக்கும் காரணத்துக்காகவும் அவர்களை தண்டிக்க முடியவில்லை என்றால், சகலவிதமான காடையர்களும் இவ்வாறு உடுத்துக்கொண்டு வந்து பயங்கரவாதம் செய்தால் நாடு என்னவாகும்.

மதகுரு என்பது மக்களுக்கு  வழிகாட்டிகள் இவர்கள் காட்டும் வழி எதுவோ அதைதான் மக்கள் பின்பற்றுவார்கள். இவர்கள் நாட்டில் விதைக்கும் தீய பயங்கரவாதம் நாட்டை இரத்த ஆறாக ஓட்ட வழி வகுக்கும் என்பதில் என்ன சந்தேகம்?.

அன்புக்குரிய அமைச்சர் அவர்களே நீங்கள் இந்த நாட்டில் எங்காவது முஸ்லிம் மத குருக்கல் தீய வார்த்தைகளால் பேசியதை கண்டதுண்டா? இயக்கங்களும் கொள்கைகளும் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை கொள்கையிலும் புரிந்துனர்வுகளிலும் ஒன்றாகவே இருக்கிறோம்.

இலங்கையில் மரியாதைக்குரிய மேலான சபையான பாராளுமன்றத்தில் தன்னையே ஆட்சிக்கு ஆளாக்கிய மக்கள் மீது அவதூறாக பேசி மனதை புண்படுத்தியுள்ளது மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதற்கான தகுந்த பதிலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே உயர் சபையில் வழங்க வேண்டும்.

4 கருத்துரைகள்:

Haamuduru will spoiled our beatiful nation.they proofed by killing S.W.BANDARANAYAKE.we are mulims we will face many challenges in the world

Haamuduru will spoiled our beatiful nation.they proofed by killing S.W.BANDARANAYAKE.we are mulims we will face many challenges in the world.we born for aahira.not for dunya

Muslim parliamentarians should have responded to the justice minister's statement on the same day.

Wijedasa is already a controversial man .He's already under
attack from Sarath F and the JVP . If anybody believes that
UNP is one hundred percent Muslim or Tamil friendly party,
they must check their heads . There are racists in that
party too and Rajapaksha is a cross over from MARA ! This
man has intentionally dug up an old finding which will be
helpful to back up a resurfacing anti-Muslim campaign by
Buddhist racist extremists. Yahapalana enemies are doing
everything to put them in trouble and in return
Yahapalanaya might do things to defend themselves , even
by betraying the trust of minorities . And our own leaders
will look the other side as if nothing serious!So far ,
until SLTJ was formed , our religious organizations worked only for the religion and now SLTJ goes beyond religion
with a purpose. If it is good or bad is a different
question but it has clashed with other groups in public.
This new development has raised eyebrows among all
communities , not only Buddhist extremists . Whatever
Muslims think about this , a section of Buddhists who
are mainly extremists , are raising alarm bell and
SLTJ just walked into that trap even though they
just exercised their rights . All govts are tolerating
Buddhist extremism and open racism against other
communities , especially against Muslims after Tamils.
Gnanasara started and now street gangsters are
following his foot print with his blessings. Why is
Wijedasa blind of imminent Burma like cleansing is
being orchestrated against Srilankan Muslims ?
Can he assure that there is no such threat against
Muslims ?

Post a Comment