Header Ads



வடக்கு - கிழக்கு இணைக்க உயர்மட்ட பேச்சு, இராஜதந்திர நகர்வுகள் வெற்றி - சம்பந்தன்

பெரும்பான்மை தலைவர்களின் மன நிலையில் மாற்றமேற்பட்டுள்ளதை நீண்டகால அரசியல் வரலாற்று அனுபவமுடைய தன்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக எதிர்க் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அனுபவங்களின் அடிப்படையில் இந்த மாற்றங்களை தன்னால் உணர முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு, தமிழ் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக) அவரது திருகோணமலை இல்லத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2015 தேர்தலில் தமிழர்களுக்கு நம்பிக்கையான தீர்வு கிட்டுமென எதிர்வு கூறியிருந்தோம்.

அரசியல் தீர்வுக்கான இராஜதந்திர நகர்வுகள் வெற்றிபெறும் தறுவாய்க்கு வந்துள்ளன. எனினும் சில ஊடகங்கள் எதுவும் நடைபெறவில்லையென எம்மை விமர்சித்து எழுதுகின்றன. ஜனாதிபதி, பிரதமரில் நாம் நம்பிக்கை வைத்து எமக்கான தீர்வை எதிர்பார்க்கின்றோம். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் துரிதமடைந்துள்ளன.

2017ன் முற்பகுதியிலாவது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுவிடும். எமது மக்களின் அனுமதியின்றி எதையும் நாம் செய்யப்போவதில்லை. சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும்.

வடக்கு-, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான பேச்சுக்களை உயர்மட்டளவில் நடாத்திக்கொண்டிருக்கின்ற போதிலும் இன்னும் இறுதி தீர்மானங்கள் எட்டப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இதுபற்றி நடாத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்துடன் பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படுகிறது. சட்டவாக்கம் நிர்வாகமுறை- காணிச் சட்டம், பொது பாதுகாப்பு, நிதி ஒழுங்கு என்பவை இவற்றில் பிரதானமானவை. பாராளுமன்ற ஒழுங்குபடுத்தல் குழு, உப குழு, உட்பட பல்வேறு நிபுணர்கள் குழுவுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மற்றும் விடயங்கள் குறித்தும் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக வழிமுறைகளில் வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் த. தே. கூட்டமைப்பு தெளிவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.