November 17, 2016

இலங்கை அரசு, நாடுவது இதைத்தானா..?

கடந்த கால ஆட்சியான மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத கருத்துக்களால் தனது ஆட்சியே கவிழும் அளவுக்கு முஸ்லிம்கள் கட்சி பேதம் பாராது அனைவரும் ஒற்றுமைப்பட்டு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் கூன்டை புடுங்கி எறிந்தவர்கள் சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம்கள் என்றால் மிகையாகாது. 

கடந்த ஆட்சியில்  சில காவிகளின் போர்வையால் துளிர்விட்டெழுந்த இனவாதக் கருத்துக்கள் நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசினால் நசுக்கப்படும், முஸ்லிம் விரோத போக்கு முற்றாக நீக்கப்படும், சிறுபான்மையினர் சுதந்திரமாகவும், இன ஐக்கியத்துடன் பரஸ்பரம் வாழ வழிவகுக்கும் என்னும் நப்பாசையில் நல்லாட்சி என்று அழைக்கப்படும் மைத்தரி அரசை கைகூப்பி மெச்சும் அளவுக்கு மனததர புகழ்ந்தார்கள். 

இந்நாட்டின் நல்லாட்சி வெற்றிப் பின்னணியில் முஸ்லிம் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், புத்தி ஜீவிகள் என பல்வேறு எட்டுத்திசைகளிலும் ஒருமித்த குரலாக மைத்திரி அரசை கொண்டுவர பாடுபட்டதற்கான காரணம் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இனத்தவர்கள் சுதந்திரமாக வாழ வழிவகுக்க வேண்டும் என்பதே உள்மன அவா ஆகும். 

ஆனால் தற்போது நல்லாட்சி (?) என்றழைக்கப்படும் மைத்தரி அரசு கடந்த ஆட்சியில் துழிர்விட்டெழுந்த அதே இன வாதக் கருத்துக்களுக்கு மென்மேலும் உரம்மூட்டி அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றது. இன ஒறுமைப் பாட்டுடன் சமாதானத்துக்கு வழிவகுப்பேன்” என்ற மைத்தரி ஆட்சியின் கோசத்தினால் மதிமயங்கிய சிறுபான்மையினருக்கு தற்போதயை நாட்டின் நடப்புகள் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. பழைய குருடி கதவைத் திறடி என்பதைப் போல கடந்த ஆட்சியில் அரங்கேறிய அதே இனத்துவேசக் கருத்துக்கள் தற்போதும் பன்மடங்கு மேலோங்கிக் காணப்படுகின்றது. 

மேலும் இந்நாட்டில் பெரும்பான்மையினருக்கும், சிறுபான்மையினருக்கும் தத்தமது மதநம்பிக்கைக்கு இசையும் வகையில் தனியான சட்டங்களை இந்நாட்டு அரசாங்கம் கடந்த தசாப்தங்களாக வழங்கி வருகின்றது. இந்துக்கள், பறங்கியர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மதங்களுக்கு ஏற்ப தனியார் சட்டங்களை வழங்கியுள்ளது. இத்தனியார் சட்டங்களில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வருவதாக இருந்தால் கண்டிப்பாக சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதிகளை கண்டிப்பாக உள்வாங்கியே அமுல்ப்படுத்தப்படல் வேண்டும். மாறாக வெளிநாட்டு சக்திகளுக்கோ, யூனியன்களுக்கோ கட்டுப்பட்டு கண்டமேனிக்கு தனியார் சட்டங்களில் கைவைத்தல் கூடாது. அவ்வாறு கைவைத்தால் இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பதில் அரசு கண்கானிப்பாக இருத்தல் அவசியம். 

அண்மைக் காலங்களாக GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் கைவைப்பதை எதிர்த்து இலங்கையில் பல பாகங்களில் அரசை கண்டித்தும், ஐரோப்பா தலையீடுகள் நுழைவதை தவிர்ந்து கொள்ளும் படியும் குறிப்பாக கொழும்பு, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் எதிர்ப்பு கோசங்களை SLTJ என்று சொல்லக்கூடிய அமைப்பினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த குறித்த அமைப்பினர் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் திருத்தம் அவசியமெனினும் அதை முஸ்லிம்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்னும் தொணியில் அமைந்த கோசங்கள் அரசாங்கத்திற்கு முன்வைத்தது. இவ்வார்ப்பாட்டத்தினால் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கை அரசு சிறுபான்மையினருக்கெதிரான வேலையில் களமிறங்கியுள்ளதை காணக்கிடைக்கிறது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் போதோ,  முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்படும் போதோ எவரும் சுயாதீன முறையில் இயங்கக்கூடாது அவர்களின் உரிமைக்குரலை நசுக்க வேண்டும் என்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லாட்சி (?)க்கு அழகல்ல. 

இலங்கையின் சட்டத்தை அமுல்ப்படுத்தவே அரசாங்கம். அரசாங்கம் இன ஒற்றுமைக்கும், இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கும் சவாலாக 
ஒரு சில இனவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருவதை அவதானித்திருக்கும்.இவ்வினவாத அமைப்புக்கு பெரும்பான்மை இனத்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் குறித்த இனவாத அமைப்பான பொதுபல சேனா போன்ற அமைப்புக்கு சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், கைது செய்வதற்கான முழு அதிகாரம் இருந்தும், கைது செய்வதற்குரிய தக்க காரணங்கள் இருந்தும் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாதிருப்பது சிறுபான்மை இனத்தவர்களின் நாட்டின் இருப்புத் தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. 

எனவே, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவால் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி என்று சொல்லப்படும் மைத்தரி அரசு நாட்டின் சிறுபான்மையினருக்கு கண்டிப்பாக பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும், இனவாதத்தை தூண்டும் கலகொட அத்தே ஞான சாரதேரர் போன்றவர்களை கைது செய்து இனவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் சுருக்கம். 

-முபீன் முகம்மட்-

6 கருத்துரைகள்:

Ada neenga vera...Maithiriyodum Ranilodum namma thoppi potta kutti saattangal irukkuraanugale.....avanugal eppa naamellam veratti adikkuromo appothuthaan Muslimgaluk vidivu kaalam.....
Illavittaaal..Marana adithaaan....anupavippom...!

Not only MUSLIMS VOTE.EVEN TAMIL SINHALA ENTIRE PEOPLE ELECTED YAHAPALANA.PLEASE DONT MENSIONWE ONLY BROUGHT THIS GOVT.6.1MILLION NOT ONLY MINORITY CROWD.THEREFOR DONT BE PROUD AT ALL.SUCCESS OF MUSLIMS ONLY UNITY AND GOOD AHLAQ NOT ONLY EVEN SRILANKA.ENTIRE WORLD MUSLIMS SUCCESS HAVE IN UNITY AND AHLAQ.IF WE FAIL THIS TWO THINGS WE ARE BE DEFEAT BY OUR ENEMIES

In my opinion, before we come to any conclusions. We need to ask ourself,are we flowing our religion as should be? We can find the answers, if we go to Fajir prayers to masjid.
I think we needs to change ourself before changing the others.

Mr.Mubeen Mohamed, We should avoid mentioning this threatening tone that we were reason for defeat of previous regime. Further, we should realise that the government need to balance matters with the majority population who are being induced by the previous regime. SLTJ do not represent the whole muslim population of our country, not even a tiny percentage. When they protest and shout slogans condemning and insulting other communities and their leaders, this will backlash. Those who wait for a moment to unleash atrocraties against us take advantage. So instead of blaming government we should take initiative to control these fringe elements in our society. Our Ulamas and leaders representing majority muslims shall work on any modification to our legal system.

We muslims ourselves digging our own graves! O you who believe, be persistently standing firm for Allah as witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just, for that is nearer to righteousness. Fear Allah, for verily, Allah is aware of what you do.

Surat Al-Ma’idah 5:8

Post a Comment