Header Ads



இனவாதிகளை கைதுசெய்ய, அதிரடி உத்தரவு

இனவாத மற்றும் அடிப்படைவாத ஊடகப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள குழுக்களை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனங்களுக்கு எதிராக துவேஷத்தை தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட, டேன் பியசாத் என்ற நபரை கைது செய்துள்ள பொலிஸார், தவ்ஹித் ஜமாத் அமைப்பின் அப்துல் ராசிக் என்பவரையும் கைது செய்யள்ளனர்.

டேன் பியசாத் என்று அழைக்கப்படும் தெமட்டகொடையை சேர்ந்த சுரேஷ் பியசாத் என்ற நபர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 10 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டியமை, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை உருவாக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் கடும் இனவாதமாக பேசியிருந்த பியசாத் என்ற இந்த நபர் நேற்று கைது செய்யப்படும் போது தான் தவறு செய்யவில்லை என பொலிஸாரிடம் கூறினார்.

இதேவேளை இந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் வார இறுதியில் அனுராதபுரத்தில் பிக்குமார் கூடியிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீர் தேக்கங்களில் விஷத்தை கலக்கக் கூடும் என குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் மேலும் சிலருடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் வந்த பியசாத், முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து கொண்டு இனவாதத்தை கக்கி வரும் 4 பேருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கு பின்னர் இந்த கைது சம்பவம் நடந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பியசாத், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கிழக்கு உப சங்கநாயக்கர் அம்பிட்டியே சுமணரத்ன மற்றும் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக் ஆகியோருக்கு எதிராக தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


18 comments:

  1. செய்தி உண்மையாக இருந்தால் நல்ல முன்னெடுப்பு.

    சகோ. அப்துல் ராசிக் ஒரு கப்ரு வணங்கியாக இருக்கும் பட்சத்தில் அசாத்தின் நிலைப்பாடு வேறுமாதிரி இருக்கும்

    ReplyDelete
  2. Mr. Asaath Saali....nenachchan neenga ithai seiveengannu...!!!
    Its OK....Allah pothumaanavan...
    However, I was proud of you when you were commented as you said SLTJ is correct and they do for the rights of Muslims...
    But now I am shame on you...and Can you show us where SLTJ has acted as INVAATHI....?
    Do you know they are the No.1 in Sri lanka & India donating their blood for all community...??

    ReplyDelete
  3. You have done a good job Mr.Azath Sally. We must be fair enough to justify matters and thereby we can strongly justify the SLTJ and the BBS are the two elements creating problems among Sinhalese and Muslims in Sri Lanka. As Muslims, we have a very long history in Sri Lanka and lived in peace with other communities in Sri Lanka. The problems came after the import of BBS and SLTJ and both should be named as anti elements and eradicated from Sri Lanka for the betterment of Sinhalese and Muslims.

    ReplyDelete
    Replies
    1. Please don't compare BBS and SLTJ. BBS always involves in racist activities and comments... how many times bbs criticized almighty Allah,his prophet Muhammad and holy Quran. Can point out any single incidents which was done by SLTJ. What is the rights you have to called SLTJ as anti elements.. you have to withdrawn your comments.

      Delete
    2. As Muslim I have the right. We should not talk too much on this. You are a different group and going away from teachings of Islam and guidance of Prophet Mohammad (PBUH). Pl note that it is not PJ's Tamil Nadu but it is Sri Lanka.

      Delete
  4. Who is this Asad Sally Dirty Man? Please dont promote this this dirty man of our community..

    Arrest them/racist all together if the Law is fare.

    ReplyDelete
    Replies
    1. Yes,he is a big kabur.wananki n siaa,agent in srilanka.so he is the one big said than.

      Delete
  5. தவ்ஹீத் ஜமாத் செய்த தப்பு உண்மையை உரக்கச் சொன்னது.இது நமது சமுதாய கோழைகளுக்கும் பிடிக்காது இப்போது கந்திரியன்.கபுறு முட்டிகள்,எல்லோருக்கும் சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. but there is a good example in the life of rasoolullah 2 "how say truth" among non muslims

      Delete
  6. நாட்டுக்கு தேவையான நல்ல முயற்சி தான்.
    JM யிலும் பலர் பௌத்த மத குருமார்களையும், வடக்கு CM யையும் அவதூறாக பேசுவது தவிர்கவேண்டும்.

    ReplyDelete
  7. இல்லையே, ஆளும்கட்சி அமைச்சரொருவர் ' வெளிநாடுகளுக்கு செண்று இங்குள்ள விடயங்களைகூறி சில்லறைவேலை பார்க்கவேண்டாமென' இருதினங்களுக்கு முன்னால் சொல்லியிருந்தார். அதுதான் cm பற்றிய அவதூறோ.

    ReplyDelete

  8. MY3 பயம் வந்துட்டுது நம்மட ஆட்சியை இந்த மகிந்த வெறியணுக்கள் , இனவாத சண்டையை உண்டாக்கி கவிழ்த்து விடுவானுகள் எண்டு.......அதுதான் இந்த முடிவு....
    ..வேற முஸ்லிம்கள் மீது எந்த ஒரு கரிசனையும், அன்பும் , விருப்பும் இல்லை எண்டுதான் பாக்கணும்.......பொறுத்திருந்து பாப்பம். MY3மாமா என்ன செய்றார் எண்டு..
    ஆயினும், மகிந்த வந்தா நிச்சயம் பழி வாங்குவான்...அதால நாம பொறுமையாக MY3 யோட இப்போதைக்கு இருக்கணும்.. தமிழர்களுடன் ஒற்றுமையாக நல்ல உள்ளமுள்ள சிங்களவர்களிடம் ஒற்றுமையாக இருக்கணும்..... அதை விட மிக மிக மிக முக்கியம், நாம முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்கணும்.......
    BUT ,
    ALSO WE MUST BE VERY CAREFUL OF ' AWLIYA PONAM VANANGI ' LIKE ASATH SAALI........HE IS THE MAN WHO WENT AGAINST MR.RASIK IN THIS CASE.....

    ReplyDelete
  9. அஞ்'ஞானதேரர் போன்ற மாபெரும் பெரிய இனவாதிகளையும் நிரந்தரமாக
    உள்ளே தள்ள வேண்டும்!

    ReplyDelete
  10. If Mr Razik has spoken any thing communal he too must be arrested. But we do not know about what he spoke.Every body is equal before the law.
    we should be always careful not utter any thing illegal and unfair.

    ReplyDelete
  11. وقل جاءالحق وزحق الباطل ان الباطل كان زحؤقا -Waffa.

    ReplyDelete
  12. When Gnanasara is going to be arrested.? He is also sri Lankan and the law is common for all sri Lankan.. If he arrested we will accept that law and order are being imposed equally... we never mind this murthath Azath... He is a big culprit in our community...

    ReplyDelete
  13. Mari mari ella muslimkalayum kstti kodunga. Appo ellarukkum nittirai pohum.Mr RAZIK buddu vanangi alla allah wai tolupawan.

    ReplyDelete
  14. விக்கி சொல்வதையெல்லாம் நாங்கள் கேட்டுக்கொண்டு இருந்தால் உங்களுக்கு நாங்கள் நல்லவர்கள் அப்படிதானே. அஜன்.

    ReplyDelete

Powered by Blogger.