Header Ads



தனியார் பஸ் உரிமையாளர்களின், போராட்டம் கைவிடப்பட்டது

தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று -14- நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நிதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வரவுசெலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த தண்டப்பணம் அறவிடுவது தொடர்பில் எவ்வித மாறுபாடுகளும் இடம்பெறாது என  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.