Header Ads



அமீர் அலியையும், றிசாத்தையும் போட்டுத்தாக்கும் யோகேஸ்வரன்


வாலே இங்கு ஆடும் போது முழுமையாக அமைச்சர் றிசாட் பதியுதீன் வந்தால் எமது மாவட்டம் என்ன நிலைமைக்கு ஆகும் என்பதை சிந்திக்க வேண்டும். அதைத்தான் எமது மக்களுக்கு சொன்னேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

மட்டக்களப்பில் ஒரு முழு அமைச்சர், ஒரு முக்கால் அமைச்சர், ஒரு அரை அமைச்சர், ஒரு கால் அமைச்சர் இருக்கின்றார்கள். மொத்தமாக இரண்டரை அமைச்சுக்கள் இருக்கின்றன. அதை விட இன்னுமொரு றிசாட் என்கின்ற முழு அமைச்சு எமது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமா? இது தான் எனது கேள்வியாக இருக்கின்றது.

ஆனால் மாவட்ட செயலகத்திற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு அமைச்சரவைச் செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கின்றது. உங்களது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் அவர்களும் கலந்து கொள்வார் என்று அதைத்தான் நான் தெரிவித்தேன்.

ஏனென்றால் அவர்களது வட மாகாணத்தில் அவரால் பிரச்சனை அவர் இங்கு வந்தால் இங்கும் பிரச்சனை. அவர் வராமலே அவரது கட்சியின் பிரதிநிதியாக இருக்கின்ற அமீரலி தேசிய கடதாசி கம்பனிக்கு இருந்த காணி 470 ஏக்கரில் 04 ஏக்கரை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு எடுத்திருக்கின்றார்.

உண்மையில் கம்பனிச் சட்டத்தின் கீழ் அந்தக் காணி இருக்கின்றது. அதை அரசாங்க அதிபரோ, பிரதேச செயலாளரோ ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒதுக்க முடியாது. எந்த வகையில் அரசாங்க அதிபர் அந்தக் காணியைக் கொடுத்தார். பிரதேச செயலாளர் எந்த வகையில் அந்தக் காணியை வழங்கினார். அது தேசிய கடதாசி கம்பனிக்கு முன்பு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட காணி.

எனவே இவ்வாறு அவரது வாலே இங்கு ஆடும் போது முழுமையாக அவர் வந்தால் எமது மாவட்டம் என்ன நிலைமைக்கு ஆகும் என்பதை சிந்திக்க வேண்டும். அதைத்தான் எமது மக்களுக்கு சொன்னேன்.

அதற்கு அவர்கள் நான் கனவு கண்டதாகச் சொல்லுகின்றார்கள். யார் யார் என்ன கனவு கண்டார்கள் என்று நான் சொல்லப் போனால் ஒரு நாள் வேண்டும். அமீர் அலி நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு வந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர். அவரை இஸ்லாம் சமயம் ஏற்றுக் கொள்கின்றதாக என்று நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.

ஒரு கட்சிக்கு நம்பிக்கையாக நடப்பேன் என்று கூறி தேசியப் பட்டியலைப் பெற்றுவிட்டு மறுகனமே மற்றக் கொப்புக்கு பாய்ந்தவர் என்னைப் பற்றிக் கதைப்பதற்கு அருகதையற்றவர் என்னைப் பற்றிக் கதைத்திருக்கின்றார் என கூறியுள்ளார்.

2 comments:

  1. Doesn't he has any other work? always talking racism and against Muslims politician, he is one of the worst politician in batticaloa district.

    ReplyDelete
  2. இந்த ஹிந்துத்துவ தமிழ் தீவிரவாதிக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளை பற்ற பேசாமல் அரசியல் செய்ய முடியாது. ஈன தமிழ் அரசியல் காலா காலமாக மக்களுக்கு எது ஒன்றையும் செய்யாமல் சிங்களவனையும் முஸ்லிமையும் திட்டி தீர்த்து மட்டும் தானே அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அமீர் அலி ரிஷாட் ஆகியோர் இந்த தீவிரவாதியை கணக்கில் எடுக்காமல் தங்களுடைய பணிகளை மேற்கொள்ளுங்கள் நீங்கள் ஏட்டிக்குப்போட்டியாக அறிக்கை விடவேண்டும் அதை கொண்டு தமிழர்களிடம் மண் ஆசை அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் இவனுடைய நோக்கம்

    ReplyDelete

Powered by Blogger.