Header Ads



புத்­தர்­சிலை வைப்­பதா­னால் நானும் பணம் கொடுத்து, "சாது" "சாது" எனக் கூறுவேன் - தயா­க­மகே

மாணிக்­க­மடு மலையில் புத்­தர்­சிலை வைத்­தது பற்றி எனக்குத் தெரி­யாது. இந்­நாட்டில் புத்தர் சிலை அமைக்க முடி­யாது என்று எவ­ருக்கும் கூற­மு­டி­யாது. இதற்­காக சண்டை பிடிக்­கா­தீர்கள்.

எங்கும் புத்­தர்­சிலை வைப்­ப­தனால் நானும் பணம் கொடுத்து "சாது" "சாது" எனக் கூறுவேன் என்று ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா­க­மகே தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் மாவட்டச் செய­ல­கத்தில் நடை­பெற்­றது. அப்­போது மாணிக்­க­மடு மலையில் சிலை வைப்பு தொடர்­பாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஜ.எம்.மன்சூர் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே அமைச்சர் தயா­க­மகே இவ்­வாறு கூறினார்.  அமைச்சர் தயா­க­மகே அங்கு தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்;

மாணிக்­க­மடு மலையில் புத்­தர்­சிலை வைத்­தி­ருப்­பது பற்றி இப்­போது தான் நான் அறி­கிறேன். நாட்டில் ஒரு நாளைக்கு 100க்கு மேற்­பட்ட புத்­தர்­சி­லைகள் பன்­ச­லை­க­ளிலும் மற்றும் இடங்­க­ளிலும் வைக்­கப்­ப­டு­கின்­றன.
தமிழ் கட்­சிகள், முஸ்­லிம்கள், கிறிஸ்­தவ மத தலை­வர்கள் பௌத்த மதத்­துக்கு முத­லிடம் வழங்க வேண்­டு­மெனக் கூறி­யுள்­ளார்கள். அமைச்­ச­ரவை, பிர­தமர் ரணில் அனை­வரும் இதனை அங்­கீ­க­ரித்­தி­ருக்­கி­றார்கள்.
வர­லாற்றில் தீக­வாபி பன்­ச­லைக்கு 12 ஆயிரம் ஏக்கர் காணி சொந்­த­மாக இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. அவ்­வா­றென்றால் கல்­முனை, பொத்­துவில் எல்லாம் தீக­வாபி பன்­ச­லைக்கே சொந்தம்.
எமது நாட்டின் காடு­களிலும் பாகிஸ்­தா­னிலும் நிலத்தை அகழ்ந்தால் அங்கும் புத்தர் சிலை­களே கிடைக்­கின்­றன. நான் கடந்த வாரம் பாகிஸ்­தா­னுக்குச் சென்­றி­ருந்தேன். பாகிஸ்தான் முஸ்­லிம்கள் புத்தர் சிலை­களைப் பாது­காக்­கின்­றார்கள். நீங்கள் இங்கு புத்­தர்­சி­லைக்­காக சண்டை பிடிக்­கின்­றீர்கள். 
இடையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மன்சூர் குறுக்­கிட்டார். புத்­தர்­சிலை வைக்­கின்­றீர்கள் வணங்­கு­வ­தற்கு மக்கள் இல்­லையே என்றார். "சாது","சாது" என்று  கூறி மக்கள் வரு­வார்கள் என்று அமைச்சர் தயா­க­மகே பதி­ல­ளித்தார்.
தாது கோபுரம் அமைப்பதற்கு நான் 135 சீமெந்து மூடைகளை வழங்கியிருக்கிறேன். இந்நாட்டின் அரசியல் யாப்பில் பௌத்தத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

- யூ.எல்.றியாஸ் -

2 comments:

  1. Minister Daya Gamage is one of the Muslim's representative member in the parliament

    Since Most of the Muslims in Ampara district who voted in the last election for him and his helicopter.

    Also he was one of chief guest in the Sri Lanka Muslim Congress's last public conference held in Ampara District.

    So this is Muslim's internal problem so No need to take as serious.

    Good Luck Muslims in Sri Lanka

    ReplyDelete
  2. தயாகமகே அம்பறை மீதான தனது பிடியை இறுக்குகிறார்.

    ReplyDelete

Powered by Blogger.