Header Ads



எம்­மிடம் இன­வாதம் இல்­லையா..? (சுயவிசாரணைக்கான அழைப்பு)

இலங்­கையில் வாழும் சிறு­பான்மைச் சமூ­கங்­களில் ஒன்­றான இஸ்­லா­மிய சமூகம் இன்று மிகவும் நிதா­னித்து அணு­க­வேண்­டிய கால­கட்­டத்தில் இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் தற்­போது பௌத்­தர்­க­ளுக்கும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கும் மத்­தியில் இன­வாதத் தீயினை மூட்டிக் குளிர்­காய ஏதோ ஒரு தரப்பு முயற்­சியை முடுக்­கி­விட்­டி­ருப்­ப­தனை உண­ர­மு­டி­கி­றது. இதன் தாற்­ப­ரி­யங்­களைப் புரிந்­து­கொள்­ளாமல் பௌத்­தர்­களில் ஒரு பகு­தி­யி­னரும் இஸ்­லா­மி­யர்­களில் ஒரு பகு­தி­யி­னரும் ஆளுக்காள் பல்­வே­று­பட்ட பரஸ்­பரக் குரோதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இக்­கட்­டு­ரையை எழுதும் நான் ஓர் இஸ்­லா­மிய சமூ­கத்தைச் சேர்ந்த இலங்­கையன் என்­ப­தனால் எமது சமூகம் பற்­றிய சுய­வி­சா­ர­ணை­யாக இந்தக் கட்­டு­ரையை நமது சகோ­த­ரர்­களை நோக்கிச் சமர்ப்­பிக்­கிறேன்.

நமக்கும் இன்­னொரு தரப்­பிற்­கு­மி­டை­யி­லான பிரச்­சி­னைக்குத் தீர்வு காணுதல் என்­கின்ற நிலைமை வரும்­போது நாம் நமது தரப்­பி­னைப்­பற்றி சுய­வி­சா­ரணை செய்­வதும் நமது பக்கம் ஏதா­வது தவ­று­களோ குறை­களோ இருப்பின் அவற்றைச் சரி செய்­வ­துமே தீர்­வுக்­கான முத­லா­வது அடித்­த­ள­மாகும். அந்த வகையில் இன்று தோன்­றி­யி­ருக்­கின்ற இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறுகல் நிலைக்கு சிறந்­த­தொரு தீர்வை எட்­டு­வ­தற்கு நாம் உண்­மை­யி­லேயே இத­ய­சுத்­தி­யுடன் ஆசைப்­ப­டு­வோமாக இருந்தால் நாம் நமது தரப்­பினைச் சுய­வி­சா­ர­ணைக்கு உட்­ப­டுத்­துதல் தலை­யாய கட­மை­யாக இருக்­கின்­றது.

எம்­மிடம் இன­வாதம் இல்­லையா?

இன்றும் எம்மில் பலர் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் கிரிக்கட் போட்டி இடம்­பெ­றும்­போது பாகிஸ்தான் அணிக்கு ஆத­ரவு வழங்கும் நிலையில் பலர் இருக்­கி­றார்கள். அதுவும் அப்­போட்டி இலங்­கையில் உள்ள மைதா­னத்தில் இடம்­பெறும் போதே தங்­க­ளது ஆத­ரவை வெளிப்­ப­டை­யாக பாகிஸ்தான் அணிக்கு காண்­பித்து பாகிஸ்தான் கொடியை அசைப்­ப­வர்கள் இன்னும் இருந்­து­கொண்­டு­தா­னி­ருக்­கி­றார்கள்.
“சிங்க லே” என்று ஸ்டிக்­கரை பௌத்த சகோ­த­ரர்கள் ஒட்­டு­வ­தற்கு முன்­னரே சவூதி அரே­பி­யாவின் வாள் சின்­னத்­துடன் கூடிய அரபு எழுத்­த­ணியை எமது இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் வாக­னங்­களில் ஒட்­டத்­தொ­டங்­கி­விட்­டார்கள் என்­பதை நாம­னை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அவ்­வா­றி­ருக்கும் போது “சிங்க லே” என்ற வாசகம் தாங்­கிய ஸ்டிக்­கரை கண்­டிக்க எமக்கு என்ன அரு­க­தை­யி­ருக்­கி­றது?

நாம் நாட்டில் எங்­கா­வது பயணம் சென்றால் எமது உணவுத் தேவைக்­காக இஸ்­லா­மி­யர்­களால் நடாத்­தப்­படும் உண­வ­கங்­களைத் தேடி­ய­லை­கிறோம். ஆனால் ஏரா­ள­மான பௌத்த சகோ­த­ரர்கள் எமது இஸ்­லா­மி­யர்­களில் உண­வ­கங்­களில் சாப்­பிட்டுச் செல்­வ­தனைக் கண்­கு­ளிரக் காண்­கிறோம். இவ்­வி­ட­யத்தை நான் சொல்லும் போது ஹறாம் ஹலால் பிரச்­சி­னையை உடனே நினை­வு­ப­டுத்­து­வீர்கள். எனவே அந்த நியா­யத்தை ஏற்­றுக்­கொண்டு உண்­மை­யி­லேயே பௌத்த சகோ­த­ரர்கள் யாவரும் இன­வா­தி­க­ளா­கவும் இஸ்­லா­மிய விரோ­தி­க­ளா­கவும் இருந்தால் அவர்கள் நமது சகோ­த­ரர்­களின் உண­வ­கங்­க­ளுக்கு வர­மாட்­டார்கள் எனும் தக­வலைச் சொல்­லிக்­கொள்­கிறேன். நாம் ஆடைக் கடை­க­ளுக்குச் செல்­வ­தாக இருந்­தாலும் பெரும்­பாலும் எமது இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களின் கடை­க­ளுக்கே நாடிச் செல்­கின்றோம். ஆனால் பௌத்த சகோ­த­ரர்­களின் ஆடை­யகங்­களில் பன்றி மற்றும் நாய் போன்ற விலங்­கு­களின் தோலினால் செய்­யப்­ப­டு­கின்ற ஆடை­க­ளில்லையே? ஆனால் பெரும்­பா­லான பௌத்த சகோ­த­ரர்­களோ எமது இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களின் முன்­னணி ஆடை­ய­கங்­க­ளில்தான் அலை­மோ­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பள்­ளி­வாசல்­களும் புத்­தர்­சி­லை­களும்

புத்தர் சிலைகள் வைக்­கப்­ப­டுதல் எனும் விடயம் இன்று பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. புத்தர் சிலைகள் வைக்­கப்­படும் முயற்­சிகள் ஆங்­காங்கே நடந்­து­கொண்­டு­தா­னி­ருக்­கின்­றன.
அதை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் அதைக்­கண்டு எமது இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களில் சிலர் கூச்­ச­லி­டு­வ­திலும் அதை வைத்து எமது இஸ்­லா­மிய அர­சியல் தலை­வர்கள் அர­சியல் செய்­வ­திலும் மனக் கசப்­புக்­களும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்­க­ளும்தான் மிஞ்­சப்­போ­கின்­றன. புத்தர் சிலைகள் இது வரைக்கும் இஸ்­லா­மி­யர்­களின் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் கொண்டு வந்து பல­வந்­த­மாக வைக்­கப்­பட்ட தக­வல்கள் எங்கும் கிடை­யாது. அது­போ­லவே எமக்குச் சொந்­த­மான நிலங்­களில் வைத்த தக­வல்­களும் கிடை­யாது.

அவற்­றையும் தாண்டி புத்தர் சிலையை வைத்­து­விட்டு அதனை பிறரும் கட்­டாயம் வணங்­கித்­தா­னாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்­டா­யப்­ப­டுத்­த­வு­மில்லை. அது­போல புத்தர் சிலை­களை அடிக்­கடி காண நேரிட்டால் மதம் மாற நேரிடும் என்­கின்ற நிலையும் இஸ்­லா­மி­யர்­க­ளி­டத்தில் இல்லை. அப்­ப­டி­யி­ருக்க இதற்கு ஏன் முரண்­பட்டுக் கொள்­ள­வேண்டும் என்று வின­வினால் சில இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் சில விளக்­கங்­களைத் தரு­கி­றார்கள்.

1. பௌத்­தர்கள் செறி­வாக வாழாத இடத்தில் எதற்கு புத்தர் சிலை? சிலர் இதனை பௌத்­தர்கள் இல்­லாத இடத்தில் எதற்கு புத்தர் சிலை என்று வின­வு­கி­றார்கள். ஆனால் அவ்­வாறு வின­வு­வது தவறு. முஸ்­லிம்கள் இல்­லாத மாவட்டம் ஒன்று எவ்­வாறு இலங்­கையில் இல்­லையோ அது­போல பௌத்­தர்கள் இல்­லாத மாவட்­டமும் இலங்­கையில் கிடை­யாது.
2. புத்தர் சிலையை வைக்கும் நோக்கம் எதிர்­கா­லத்தில் சிங்­களக் குடி­யேற்­றத்தை மேற்­கொள்­வ­தற்­கான முன்­னெ­டுப்­பே­யாகும் என்று சில இஸ்­லா­மி­யர்கள் அஞ்­சு­கி­றார்கள்.
3. இஸ்­லா­மி­யர்கள் செறிந்து வாழும் இடத்தில் எதற்கு புத்தர் சிலை? இதனால் இஸ்­லா­மி­யர்­களின் கலா­சாரம் கேள்­விக்­குள்­ளாகும் என வருந்­து­கி­றார்கள்.

இவர்­க­ளிடம் வினவ என்­னி­டமும் சில வினாக்கள் உண்டு.

1. முஸ்­லிம்கள் செறி­வாக வாழாத இடங்­களில் நாம் இது­வ­ரை­யிலும் பள்ளி வாசல்கள் அமைக்­கவே இல்­லையா? பௌத்­தர்­களின் புனித பூமி எனப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இடங்­க­ளி­லேயே எமது பள்­ளி­வா­சல்கள் அமை­யப்­பெற்­றி­ருக்­கின்­ற­னவே. இது மாத்­தி­ர­மன்றி நாம் இன்­னு­மின்னும் பள்­ளி­வா­சல்­களைக் கட்­டிக்­கொண்­டு­தானே இருக்­கின்றோம்?
2. முஸ்­லிம்கள் செறி­வாக வாழு­கின்ற இடங்­களில் புத்தர் சிலை வைப்­பது தவறு என்றால் மாற்று மத சகோ­த­ரர்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய மொழியில் அல்­குர்ஆன் பிர­தி­களை அச்­சிட்டு வழங்­கு­வதும் தவ­றா­குமோ?
3. புத்தர் சிலையை வைத்­து­விட்டு சிங்­களக் குடி­யேற்­றத்தை மேற்­கொள்­ளு­வார்கள் என்றும் எமது தனித்­து­வத்­தையும் கலா­சா­ரத்­தையும் இழந்­து­வி­டுவோம் என்றும் பயந்தால் பௌத்த சகோ­த­ரர்கள் பெரும்­பான்­மை­யாக வாழு­கின்ற நிறைய இடங்­களில் ஆங்­காங்கே இஸ்­லா­மிய சகோ­த­ரர்கள் நாடு முழு­வதும் வாழ்­கி­றார்­களே...? அந்த இஸ்­லா­மி­யர்­களால் பௌத்­தர்­களின் தனித்­து­வமும் கலா­சா­ரமும் பாதிக்­கப்­ப­டு­கி­றதா? அன்றேல் அவ்­வாறு அஞ்சி பௌத்த சகோ­த­ரர்கள் தம்­மி­டையே வாழும் இஸ்­லா­மி­யர்­களை இலங்­கையில் எங்­கா­வது வெளி­யேற்­று­கி­றார்­களா...?
4. எல்­லா­வற்­றையும் விட மேலான அல்­லாஹ்­வையும் அவ­னது அள­வற்ற சக்­தி­யையும் ஈமான் கொண்­டி­ருக்கும் நாம் ஏன் ஒரு சிலையைக் கண்டு இவ்­வ­ளவு அஞ்ச வேண்டும்?  

சில பௌத்த துற­விகள் கடும்­போக்­குடன் நடந்­து­கொள்­கி­றார்கள் என்­ப­தற்­காக அவர்­க­ளுக்­கான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தும் பொருட்டு ஒட்­டு­மொத்த பௌத்த சகோ­த­ரர்­க­ளையும் சாடுதல் அல்­லது அவர்கள் பற்­றிய தவ­றான பதி­வு­களை முகப்­புத்­த­கத்தில் பதி­வி­டுதல் ஓர் இஸ்­லா­மிய சமூ­கத்தின் பண்­பா­குமா? அதா­வது பௌத்த துற­வி­யொ­ருத்தர் பெண்­னொ­ருத்தியுடன் தவ­றாக இருப்­பதைப் போன்­ற­தான காணொ­ளி­யொன்று அண்மைக் கால­மாக எமது இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களின் முகப்­புத்­த­கங்­களில் பகி­ரப்­பட்­ட­வண்­ண­மி­ருக்­கி­றது. இது இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கான முன்­மா­தி­ரி­யா­குமா? இவ்­வாறு எதிர்ப்­பினை வெளிக்­காட்டும் முறை இஸ்­லாத்தில் எங்­கா­வது போதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா?

எது எமது வீரம்?
மகிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியில் இருந்­த­போது தற்­போ­தைய நிலையை விடவும் பன்­ம­டங்கு இஸ்­லா­மிய விரோதச் செயற்­பா­டுகள் தலை­தூக்­கி­யி­ருந்­தன.
ஆனால் அந்தக் காலத்தில் இந்­தி­யாவில் வெளி­யான சினிமாப் படத்­திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மகிந்த அரசுக்கு எதிராக அவ்வளவாக சத்தமிடவில்லை. ஏனென்றால் அப்போது வெள்ளைவேன் இருந்தது. தமது இயக்கத்தின் இருப்பிற்கே பங்கமேற்பட்டு விடும் என்ற அச்சமும் இருந்தது. ஆனால் இன்றைய அரசாங்கம் அவ்வாறான சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபடாது என்கிற நம்பிக்கையிருப்பதால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூச்சலிடுவது உண்மையான வீரமாகுமா? அது மாத்திரமன்றி நாங்கள் சிறுபான்மையல்ல... எனக் கூறி உலகிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையையும் சொல்லி அச்சுறுத்துவது ஒரு நாட்டின் இறைமை பற்றிய அறிவின்மையின் அடையாளமல்லவா?

அல்குர்ஆனைக் கொச்சைப் படுத்தியதாகச் சொல்லி கொச்சையான வார்த்தைகளை அடுத்தவர்கள் மீது பிரயோகிப்பதா இஸ்லாம் எமக்குக் காட்டித்தந்துள்ள வழிமுறை? கோபம் வரும் போது பொறுமை செய்வதல்லவா உண்மையான வீரம் என எமது இஸ்லாம் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அல்குர்ஆனைப் பாதுகாப்பவன் எல்லாம் வல்ல அல்லாஹ் என ஈமான் கொண்டு ஏன் எம்மால் பொறுமை காக்கமுடியவில்லை? தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுமாறு கட்டளையிட்டுள்ள அல்குர்ஆனின் விவகாரத்திற்கே நாம் பொறுமையிழந்து வீதியில் கூச்சலிடலாமா? எனவே இவையனைத்து விடயங்களையும் சீர்தூக்கிச் சிந்தித்து நாம் செயற்படுவோமாக இருந்தால் எம்மத்தியில் பக்குவப்பட்ட ஒரு மனநிலையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்துவான். இதனால் எமது இலங்கைத் திருநாட்டில் யாவருமாய்க் கூடி வாழ்கின்ற நிம்மதியான நிலைமை மலரும்.

-ரா.ப.அரூஸ் விடிவெள்ளி-


16 comments:

  1. மாஷா அல்லாஹ் அழகிய விளக்கம் நண்பரே இது எத்தனை பேருக்கு விளங்கும் இதை ஜீரனிப்பார்களா.இதற்கு எதிராகவும் com. போடுவார்கள்

    ReplyDelete
  2. Wow!what a wonderful reporting. Every muslim in sri lanka should read it and underatand what we should do what shouldn't.....Great writing.

    ReplyDelete
  3. Heart touching report .... Allah has to protect all innocent people in our country.

    ReplyDelete
  4. அரூஸ் அவர்களே, சுயவிசாரணை கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் தற்போதைய பிரச்சினை, நீங்கள் சொன்ன காரணத்தினால் தான் இடம் பெறுகிறது என்று கூற முடியாது. ஆக இதட்கான முழு காரணமும் துவேஷமும் ( சிங்கள குண்டர்கள், சில தேரர்கள்) அரசியல் பின்னணியும் ( ராஜபக்ச அன் கோ ) தான் காரணம். முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே அரசு அதன் கடமையை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த கடமையை உறுதிப்படுத்துக் கொள்வது இந்த நாட்டின் முஸ்லீம் அமைச்சர்களினதும், எம்பிகளினதும் தலையாய கடமையாகும்.
    முஸ்லிம்கள் மீது சிங்கள துவேஷிகள் பணியாரம் சுடுகிறார்கள், அதன் போது வரும் சலசலப்பை தான் நீங்கள் கூறினீர்கள் ஆனால் அந்த பணியாரத்தை என்ன செய்வது என்று கூறவில்லையே???

    ReplyDelete
  5. அரூஸ் அவர்களே, சுயவிசாரணை கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் தற்போதைய பிரச்சினை, நீங்கள் சொன்ன காரணத்தினால் தான் இடம் பெறுகிறது என்று கூற முடியாது. ஆக இதட்கான முழு காரணமும் துவேஷமும் ( சிங்கள குண்டர்கள், சில தேரர்கள்) அரசியல் பின்னணியும் ( ராஜபக்ச அன் கோ ) தான் காரணம். முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே அரசு அதன் கடமையை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த கடமையை உறுதிப்படுத்துக் கொள்வது இந்த நாட்டின் முஸ்லீம் அமைச்சர்களினதும், எம்பிகளினதும் தலையாய கடமையாகும்.
    முஸ்லிம்கள் மீது சிங்கள துவேஷிகள் பணியாரம் சுடுகிறார்கள், அதன் போது வரும் சலசலப்பை தான் நீங்கள் கூறினீர்கள் ஆனால் அந்த பணியாரத்தை என்ன செய்வது என்று கூறவில்லையே???

    ReplyDelete
  6. Brother need more Islamic knowledge, jaffna Muslim shouldn't publish this kind of article . He didn't understand real facts. He doesn't care anything just want to live with KFC and pizza hurt.

    ReplyDelete
  7. I am on the same page with Kuruvi's argument:

    "Protecting the minority is the duty of those in power. Those who are made to access that power supposed to ensure that." If they are not ensuring that- then people need to get to those whom they made to access power. What they should do is to break their face, if they can't do that, then demand them to resign and go home. When people skip the very vital 'protocol' and take the inappropriate step/s, things get complicated and worse, ultimately end up only ruining their image with no fruitful aftermath.

    " Now what is the aftermath of SLTJ protest? "

    I fully agreed with the writer and thumps up for JM for posting it and then see 'TRUE NEVER DIE' gotta say something.

    // True Never Die //, can you elaborate how the writer lacks Islamic knowledge, what he doesn't understand and what he doesn't care about, briefly? You see, your KFC & Pizza comment wont do any good to the society you know!

    ReplyDelete
  8. Good Thinking Eye Opener,
    There is some thing which some Sinhalese and some Muslim brethren don't
    understand at this point.
    There is no hatred among this two communities but its been created for political mileage.The Masters of the of all groups from either side are same.(The Indian Cinema style)
    The above article is a nice one with real facts.These type of thinking has to be encouraged rather than finding fault.

    ReplyDelete
  9. உண்மையில் உங்களது கட்டுரை வரவேற்க தக்கது . இது ஓர் இரு மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் பல பேருக்கு பயன் உள்ளதாகவும் ,நம்மவர்களால் முன்னெடுக்கப்பட்ட சில அசம்பாவிதங்களும் தடுக்கப்பட்டிருக்கலாம் எனத்தோன்றுகிறது.அதேநேரம் இனவாதிகள் செய்யும் சிங்களவரகளே இல்லாத முஸ்லீம்கள் வாழுகின்ற இடங்களில் சிலை வைப்பது போன்ற செயற்பாடுகள் மற்றும் சில விடயங்களை அவர்கள் செய்தால் நமக்கென்ன பிரச்சினை என்று இருந்து விட முடியாது. ஏன்னெனில் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட பல விடயங்கள் முஸ்லீம்களுக்கு எதிராகவே என்பது தெட்ட தெளிவாகின்றது.முஸ்லீம்கள் பல விடயங்களில் பொருமை செய்து ஏராலமான சொத்துக்களையும் உறிமைகளையும் இழந்தும் இழந்து கொண்டும் வருகின்றோம் என்பதையும் மறுக்கவும் மறக்கவும் முடியாது.. இலங்கையில் வாழுகின்ற மூவின மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் நமது உரிமைகள் மீறப்படுகின்றபோது அதற்காக நாம் குறல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றோம். எனவே நமது உறிமைக்காக போறாடுகின்றவர்களை அமைப்பு வேறுபாடு காட்டாமல் நாமும் ஒத்துழைப்பு வழங்கி ஒற்றுமையாக வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக ் ஆமீன்

    ReplyDelete
  10. Well Said, great Reporting Bro.,

    ReplyDelete
  11. கருத்து என்னமோ சரிதான் பிரச்சினை அதுவல்ல நீங்க சிலை வைக்க விட்டாலும் சரி விடாட்டாலும் சரி உங்க பொருளாதாரம் மற்றும் இஸ்லத்தின் வளர்ச்சி

    ReplyDelete
  12. இன்னொரு முக்கியமான விடயம், நம்மவர்கள் நடாத்துகின்ற hotelகளில் முஸ்லீம் hotel என பெயர் இட்டிருப்பார்கள். இது முற்றாக தவிர்க்கப்பட வேன்டும் முஸ்லீம் பெயர் இட்டு hotel என்று எழுதினால் போதுமானது . இல்லாவிட்டால் அது பாரிய விபரீத்தை கொண்டு வரலாம் .

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அசீஸ்! இஸ்லாமிய விரோதிகளுக்கு நீங்கள் எந்தப்பெயரில் உங்கள் வியாபார நிலையங்களை நிறுவினாலும் ஒன்றுதான்.
      முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக பின்னடையச்செய்யவேண்டுமென்பது உலகலளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்படுகிறது.
      Fashion Bug , No Limit எல்லாம் முஸ்லிம் பெயரா? அதை இஸ்லாமிய விரோதிகள் தாக்கவில்லையா?
      It's not the Sinhalese you set the plan they just implement the Zionists plan which comes to Gnanasara and his associates.

      Delete
    2. They gather every information about Muslims through grama sevaka, bank managers , ministries etc...

      Delete
    3. நீங்கள் சொல்வது சரி முஸ்லீம்களின் பொருலாதாரத்தை முடக்க பல முயற்சிகள் இடம்பெருகின்றன் but நான் சொன்னது இப்படியான பெயர்கள் வைப்பபதனால் அது நமது நாட்டில் இனவாத்தைதூண்டும் காரணியாக அமையக் கூடும் என்பதற்காகவே

      Delete

Powered by Blogger.