November 07, 2016

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டத்தில், மேலும் பல திருத்தங்களை செய்வதற்கு தீர்மானம்


முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்த சட்­டத்­தி­ருத்­தங்­களை விட மேலும் பல திருத்­தங்­களைச் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளதுடன் நவம்பர் மாத இறுதியில் சிபாரிசுகளை பூரணப்படுத்தவுள்ளனர்.

நேற்று கொழும்பில், ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் ஒன்று கூடி குழுவின் அங்­கத்­த­வர்கள் இத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டனர். நேற்­றைய கூட்­டத்தில் குழுவின் 17 அங்­கத்­த­வர்­களில் 15 பேர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இருவர் கலந்து கொள்­ள­வில்லை. 

நேற்­றைய கூட்டம் தொடர்பில் குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் ‘விடி­வெள்ளி’ க்குப் பின்­வ­ரு­மாறு கருத்து தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் சுமார் 7 வரு­டங்­க­ளாக ஆரா­யப்­பட்டு தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. நேற்று இறு­தி­யான கூட்டம் நடை­பெற்­றது.

என்­றாலும் சில அங்­கத்­த­வர்கள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் பிரிவு சில­வற்றில் மாற்­றங்­களைச் செய்ய வேண்­டு­மென்­கி­றார்கள். அத்­தி­ருத்­தங்கள் முக்­கி­ய­மான விட­யங்­களில் அல்ல. எனவே அந்த திருத்­தங்­க­ளையும் குழு சிபா­ரிசு செய்­ய­வுள்­ளது.

எதிர்­வரும் 27 ஆம் திக­திக்குள் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களின் பணிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு குழு அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்கள் எதிர்­வரும் 27 ஆம் திகதி பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

அதன் பின்பு நீதி அமைச்­சரைத் தொடர்பு கொண்டு அறிக்­கையைக் கைய­ளிப்­ப­தற்­கான திகதி ஒன்­றினை நிர்­ண­யித்து அன்­றைய தினம் சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்கை நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­படும்.

அர­சாங்கம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை முன்­மொ­ழி­வ­தற்­காக நிய­மித்­துள்ள அமைச்­ச­ரவை உப குழு விவ­காரம் தொடர்­பிலும் கூட்­டத்தில் கலந்­து­ரை­யாடி விவா­திக்­கப்­பட்­டது.

அமைச்­ச­ரவை உப­குழு நிய­ம­னத்­தின்­பின்பு நாட்டில் உரு­வா­கி­யுள்ள நிலைமை தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது என்றார்.

ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக இந்­தக்­குழு நிய­மிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இக் குழுவில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலைவர், செய­லாளர், நீதி­ப­திகள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், புத்­தி­ஜீ­விகள், பெண் பிர­நி­திகள் உள்­ள­டங்­க­ளாக 17 பேர் அங்கம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை மற்றும் பெண் பிரநிதிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவியமையே திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நீண்ட காலம் எடுத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

4 கருத்துரைகள்:

IF two parties disagree with each other in an issue related to Islam,, Allah says in Quran... Turn to Allah and his messenger. Make the sayings of Muhammed (sal) as final. It is not proper for a Muslim who belive in Allah and Rasool to take their openion over Allah and Rasool.

Muslims are not to compromise the SHAREEA with the day to day changes in the world that happens due to the evil life style adapted by human on earth and the daily changing human made law.

If any woman or man consider their desire over the SHAREEA... that is the end.. they are no more MUSLIMS as per SHAREEA. So remove them from the committee.

May Allah Guide us in the path of SALAF us saliheens.

Mr rasheed EVERYTHING DOING BY ACCORDING TO QURAN HADEES AND EXAMPLE OF SAHABA COMPANIONOF (MUHMD SAL )THEY ARE VERY EDUCATED PEOPLE.PLEASE WE MAKE DUA.

Mr rasheed EVERYTHING DOING BY ACCORDING TO QURAN HADEES AND EXAMPLE OF SAHABA COMPANIONOF (MUHMD SAL )THEY ARE VERY EDUCATED PEOPLE.PLEASE WE MAKE DUA.

I need a small clarification from those who are opposing the amendments to the Muslim Personal Act (MPA) and accusing those who support the amendments in the light of the conflict with Sharia.

Do you accept MPA as the perfect representation of sharia guidelines with regard to its scope. If not why get so emotional with just the news of upcoming amendments.

If you say yes to the above, you are in complete darkness of wisdom and requires hours of learning of the MPA and practical issues it has created within the society.

I've seen certain elements in our society getting more and more vocal about the proposed amendment to the minimum age of marriage from 12 to 16 years. Sharia has never stipulated minimum age of marriage neither for men or women, yet we have 12 as the minimum age for women in MPA, which these sections of the society are trying to protect as god given divine law.

my final question is why these elements have never done a such mass scale protest asking to remove provisions of dawry from the MPA.

Post a Comment