Header Ads



'பிரதமர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும், விலகாவிட்டால் பாரதூர விளைவு'

பைத்தியக்காரத்தனமான பேச்சுகளை விட்டு விட்டு அபிவிருத்தியை மட்டும் செயற்படுத்துங்கள். உங்களை மரணமடைந்த இராணுவ வீரர்கள் சபித்துக் கொண்டிருக்கின்றார்கள் கவனமான இருங்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

நாட்டிற்கு அவசியமற்ற அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நாட்டை பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள் இந்த நல்லாட்சி செய்பவர்கள்.

இராணுவ வீரர்கள் மரணித்து வென்று கொடுத்த வெற்றிகளை முறைகேடாக பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் கல்லறையில் உங்களை சபித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை மறந்து விடவேண்டாம்.

மேலும் மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் பிரதமர் ஒரு போதும் விசாரணைகளை செய்ய மாட்டார்.

காரணம் அவருக்கு சாதகமான வகையிலேயே இலஞ்ச ஊழல் மற்றும் நிதி மோசடிப்பிரிவு போன்றவை செயற்பட்டு வருகின்றது.

இதனால் உடனடியாக பிரதமர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும் அப்படி விலகாவிட்டால் பாரதூரமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆக்ரோசமான முறையில் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை வாசுதேவ நாணயக்கார உரையாற்றும் போது ஒரு சில தகாத வார்த்தைகளையும் பிரயோகித்தார். இதன் காரணமாக பாராளுமன்ற ஒழுக்க விதிமுறைகளை மீற வேண்டாம் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வாசுதேவ நாணயக்காரவின் உரையினைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகளவான கூச்சல்கள் எழுந்ததோடு “அவர் மீண்டும் பாடசாலை கல்வியை தொடர வேண்டும்” எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சல்களை எழுப்பியமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

1 comment:

  1. ஏன் விலகவேண்டும் அந்தப்பதவி உங்களுக்கு தேவையா?

    ReplyDelete

Powered by Blogger.