Header Ads



பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலையமைக்க, பௌத்தம் அனுமதிக்கவில்லை

பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே  புத்தர் சிலை  அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.  

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே     ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு   வினவினார். 
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு  

கேள்வி:-  அண்மையில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட   புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து ?

பதில்:- பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே  புத்தர் சிலை  அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன்.   பௌத்த மதமும் புத்தரும் இதனை அனுமதிக்கவில்லை. அடுத்தவன்  தோட்டத்தில் சென்று எனது சிலையை அமைக்க முடியுமா? அதனால் இது தவறாகும்.

1 comment:

  1. மனச்சாட்சி உள்ள மனிதன் அல்லது இரட்டை வேடம்

    ReplyDelete

Powered by Blogger.