Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனவாதத்தை, கட்டுப்படுத்த தீவிர கவனம்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக மீளவும் தலை­யெ­டுத்­துள்ள இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்­தி­யுள்­ளது.

இதற்­க­மை­வாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் சிரேஷ்ட அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இக் குழு அண்­மைக்­கா­ல­மாக நடை­பெற்று வரும் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்­றையும் விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

இதே­வேளை பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவ சம­யங்­க­ளுக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­களை உள்­ள­டக்கி மற்­று­மொரு குழுவும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இக் குழு தத்­த­மது சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அறிக்கை ஒன்றை தயா­ரித்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

இனங்­க­ளுக்கும், சம­யங்­க­ளுக்­கு­மி­டையில் நிலவும் முரண்­பா­டு­க­ளையும், சந்­தே­கங்­க­ளையும் களைந்து நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்கள் குழுவின் உறுப்­பி­ன­ரான முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால், தபால்  சேவைகள் அமைச்சர்  எம்.எச்.ஏ.  ஹலீம் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளையும் மதத்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளார்.

அண்மைக் கால­மாக தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்த முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முழு­மை­யான விப­ரங்­களைத் திரட்­டு­வ­தற்­கா­கவே இச்­சந்­திப்பு ஏற்­பாடு  செய்­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர்  ஹலீம்  தெரி­வித்தார். 

முஸ்லிம் சமூ­கத்தின்  மீதான வெறுப்புப் பேச்­சுக்கள்,  முஸ்லிம்  தனியார் சட்டத் திருத்­தத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்டம், அதில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்கள், குரு­நாகல் மாவட்­டத்தில் இடம்­பெற்ற  பள்­ளி­வாசல்  தாக்­கு­தல்கள், பெப்­லி­யா­னவில் பெஷன்பக் நிறு­வ­னத்தில் ஏற்­பட்ட தீவி­பத்து, கண்­டியில்  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்டம் என்­பன பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்டு அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்றி ஆலோ­சிக்­கப்­ப­டு­மெ­னவும் அமைச்சர் ஹலீம் தெரி­வித்தார். 

இந்து  சமய விவ­கார  அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், கிறிஸ்­தவ சம­ய­வி­வ­கார அமைச்சர்  ஜோன்  அம­ர­துங்க, மற்றும் அமைச்சர் கபீர் ஹாஷிம்  ஆகி­யோ­ருடன்  ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் சந்­தித்து இது தொடர்பில் முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.   ARA.Fareel

1 comment:

  1. Please take useful action not only forming the commissions

    ReplyDelete

Powered by Blogger.