Header Ads



நல்லாட்சி நல்லா போகுது - மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்


(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் நீண்டகாலத்திட்டங்களை முன்வைத்து  அதற்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனை மக்கள் புரிந்துசெயற்பட வேண்டும். ஆகவே இன்னும் சிறிது காலத்திற்கு சற்று நெருக்கடியான முறையில் பயணிக்க வேண்டி வரும். அதன் பின்னர் நாட்டில் நிலையான அபிவிருத்தியை எய்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பு ஒறுகொடவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய தொழில் பயிற்சி மத்திய நிலையத்துக்கான அடிக்கல் நடும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2017 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாகவே ஒறுகொடவத்தையில் அமைக்கப்படும் தேசிய தொழில் பயிற்சி மத்திய நிலையத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. ஏனெனில் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைக்கின்றனர். எனினும் பலர் வரவு செலவுத்திட்டம் பற்றி தவறான பார்வை கொண்டுள்ளனர். 

நீண்டகாலத்திட்டங்களை முன்வைத்து  அதற்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனை மக்கள் புரிந்துசெயற்பட வேண்டும். ஆகவே இன்னும் சிறிது காலத்திற்கு நாம் சற்று நெருக்கடியான முறையில் பயணிக்க வேண்டி வரும். எனினும் அதன் பின்னர் நாட்டில் நிலையான அபிவிருத்தியை எய்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.