Header Ads



ஞானசாரருக்கு நடுங்காத, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வரவேற்பு

அரசாங்கம் கள்ளத்தனமாக முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து ஜி எஸ் பி சலுகைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் நடாத்திய மிகப்பெரிய அமைதியான ஆர்ப்பாட்டத்தை முஸ்லிம் உலமா கட்சி வரவேற்று பாராட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

  இந்த ஆட்சியிலும் இனவாதத்தை கக்கும் அரசின் செல்லப்பிள்ளையான பொதுபல சேனாவின் ஞான சாரர் தவ்ஹீத் ஜமாஅத் வீதிக்கு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஜனநாயகத்தக்கு விரோதமாக சூளுரைத்த போதும் அதனை கண்டு அஞ்சாது ஆர்ப்பாட்டத்தை செய்து காட்டியமை மிகச்சிறந்த செயலாகும்.

அதே வேளை முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கிழக்கு மாகாண முஸ்லிம் பகுதிகளில் இத்தகைய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் எதையும் நாம் காண முடியாமல் இருப்பதன் மூலம் கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அவர்களின் அமைப்புக்களும் இன'னமும் விழிக்கவில்லையா என்றும் அவர்களின் சமய சமூக பற்று குறைந்து வருகின்றனவா என்றும் கேட்க வேண்டியுள்ளது. ஞான சார வாழும் கொழும்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமென்றால் ஞான சாரர் எட்டிப்பார்க்க முடியாத கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கு அஞ்சி நடுங்குகிறார்கள் என்பது புரியவில்லை.

அதே போல் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கென அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் உப குழுவை ரத்துச்செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை தொடர்வோம் என ஆசாத் சாலி தெரிவித்துள்ளமையையும் உலமா கட்சி வரவேற்பதுன் இது விடயத்தை முதலில் சமூக ஊடகங்களுக்கு கொண்டு வந்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமா கட்சி பெரிதும் மகிழ்வடைவதுடன் இது விடயத்தை அரசாங்கம் வாபஸ் வாங்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.
சுநிடல சுநிடல வழ யுடட குழசறயசன ஆழசந

20 comments:

  1. முபாரக் அவர்களே, நீங்களும் கிழக்கு மாகாணம் தானே. உங்களுக்கு ஒரு கட்சியும் உள்ளது. என்னத்த உங்களது கட்சியும் நீங்களும் கிழக்கு மாகாணத்தில் கிழிக்கிறீர்கள். இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படியே அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. எனவே இப்போது இந்த விடயத்தில் ஆர்ப்பாட்டம் செய்து அரசியல் இலாபம் அடைந்து கொள்வதட்கு சிலர் முட்படுகிறார்கள் என்றே நாம் பார்க்கிறோம். அதே போல் கிழக்கு மக்களும் நினைக்கலாம்.

    ReplyDelete
  2. I don't understand why these guys are so adamant about the minimum age, whilst major issues like dawry are yet largely unattended.

    ReplyDelete
    Replies
    1. Hahah அதபேசமாட்டார் அதுவும் குறிப்பாக கிழக்குமாகாணத்தில்.

      Delete
  3. Dear Mubarak Abdul Majeed.
    Can't you organize a protest against correction of Muslim's marrage law. Then you realize how many people supporting you.

    ReplyDelete
  4. Intha asathsalykku enna thakuthi irrukku isalatha patththi kathaipathakku?

    ReplyDelete
  5. யாராவது செய்வார்கள் எனும் கருத்திலிருந்து அனைத்து முஸ்லீம்களும் விடுபடவேண்டும்...

    ReplyDelete
  6. பிரதேசவாசம் பேசுவதை முதலில் நிறுத்தவும், சிலருக்கு பிரதேசவாசம் எனபது ஒரு நோயாகவும் அரசியல் இலாபம் அடைய பயன்படுத்தும் ஒரு கறுவியாகவும் மாறியிருக்கின்றது.

    ReplyDelete
  7. To my fellow brother who think minimum age is better ... Under islamic law there's no age restriction or marriage what islam says is that both the bride and groom should have attained puberty and some other qualification

    If we failed to tackle the minimum age issue next issue is going to be Our beloved prophet saw and Our belowed mother ummuhathul muhmineen aisha (ral) marriage

    This may seem a small issue but its not its an ideological fight with islam by the Europeans

    ReplyDelete
  8. தௌஹீத் ஜமாத் இதையாவது செய்து செவுட்டு அரசாங்கதின் காதில் விழச் செய்திருக்கிறார்கள் அதையாவாது நினைத்து உங்கள் கொள்கை பிரச்சினைகளை நிறுத்துங்கள்.எங்கே 1924ஆம் ஆண்டு பழைமையான உ சபை,ஜ,இ.தப்பலீக் ஷாப்கள் எல்லாம் எங்கேபோனார்கள் .நேற்று ஏதாவாது பிரச்சினை வந்து இருந்தால் உ.சபை,ஜ இ.தப்பலீக் ஷாப் எல்லாம் இன்று ஊழை விட்டு இருப்பார்கள் அமைதியாக நடத்தி முடித்து தமது கருத்துக்களை அரசாங்கத்தில் காதிலும் உலகத்தின் காதிலும் போட்ட த.ஜ பாராட்டுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. Amaithiyawa mudinji eeki theliyagonna palli kannadi odachachi wandhu aarpaattam seyga..... Mooodanuhalin theewira waatham....

      Delete
  9. தௌஹீத் ஜமாத் இதையாவது செய்து செவுட்டு அரசாங்கதின் காதில் விழச் செய்திருக்கிறார்கள் அதையாவாது நினைத்து உங்கள் கொள்கை பிரச்சினைகளை நிறுத்துங்கள்.எங்கே 1924ஆம் ஆண்டு பழைமையான உ சபை,ஜ,இ.தப்பலீக் ஷாப்கள் எல்லாம் எங்கேபோனார்கள் .நேற்று ஏதாவாது பிரச்சினை வந்து இருந்தால் உ.சபை,ஜ இ.தப்பலீக் ஷாப் எல்லாம் இன்று ஊழை விட்டு இருப்பார்கள் அமைதியாக நடத்தி முடித்து தமது கருத்துக்களை அரசாங்கத்தில் காதிலும் உலகத்தின் காதிலும் போட்ட த.ஜ பாராட்டுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. Brother mustafa your comments very thankful
      அமெரிக்கா யூதா்களை பாதுகாப்பதுபோல இலங்கை உலமா சபை தப்லீக்கை பாதுகாப்பது நாம் அறிந்த real உண்மை
      நல்லாஇருந்து நாசமாகிப்போங்கோ எனத்தான் கூரவேண்டும்

      Delete
  10. Mr mubarak moulavi neenga than muzalla sonnazandu perumai adaiyya wendam ok

    ReplyDelete
  11. our acju y they don't any comment.b coz of g s p + muslim merrege keep quiet.any way actj i will be sellut 4 u r comments.





    ReplyDelete
  12. முதலில் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை நிறுத்தினால்.நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.இங்கு என்னடா என்றால் இன்ஜினியர் வைத்தியரை குறை ௯றுகிறார் கேட்டால் நானும் கேம்பஸ் பேனமல்ல என்று செல்கின்றனர்.ஆனால் என்ன படித்தேரம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  13. முஸ்தபா உனக்கு நல்ல வார்த்தை வராதா அந்த குமரனைப்போன்று நீரும் பேசு கின்றீரே,முஸ்லிம் அழகிய வார்த்தை பேச வேண்டும் அல்லாஹ்வை பயந்து கொள்,போனும் விரலும் உள்ளதற்காக நினைத்த மாதிரி com.போடக்கூடாது.இதற்கெல்லாம் கணக்கு கொடுத்தே ஆகனும், நம்பாமல் விட்டால் அல்லாஹ்வின் தண்டனை மிக்க கடுமையானது.விரும்பினால் நல்ல விடயத்தை பகிர்ந்து கொள்ளும் இல்லை என்றால் விட்டு விடும் வீனாக நரகத்தை தேடாமல் .

    ReplyDelete
  14. Mustafa,உன் கொம்.மிகவும் கீழத்தரமாக உள்ளது நீ அல்லாஹ்வை பயந்து கொள்,உண்மை முஸ்லிமாக வாழ முயற்சி செய் நீ மற்றய அமைப்புகள் பற்றி எழுதும் கருத்து மிகவும் பிழையானது இது பற்றி அல்லாஹ் உன்னிடம் நிச்சயமாக கேட்பான்.

    ReplyDelete
  15. மற்ற அமைப்புக்களை குறைகூறுவதே சிலரது வாடிக்கையாகிவிட்டது.ஜப்னா முஸ்லிம் இப்படியான கருத்துக்களை பிரசுரிப்பதை தவிர்த்தால் நல்லது.இது விரோதத்தையே வளர்க்கும்.

    ReplyDelete
  16. முபாரக் மௌலவி இதிலும் இலாபம் அடையத் தான் பார்க்கிறார். இதனை ஊடகத்திற்கு முதலில் நாமே கொண்டு வந்தோம் என்று கூறி செய்தி வெளியிட்டுள்ளார். எல்லாம் அரசியல் நோக்கம் தான். சமூக அக்கறை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.