November 28, 2016

புர்கான் மௌலவிக்கு, உதவ முன்வாருங்கள்..!

"யார் ஒரு முஃமினின் கஷ்டத்தை உலகில் நீக்குகின்றானோ, மறுமையில் ஏற்படும் அவனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கிவிடுவான். தன் முஸ்லிம் சகோதரனுக்காக ஓர் அடியான் உதவிக் கரம் நீட்டுகின்ற போதெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்வான்". (ஆதாரம்: முஸ்லிம்)

இரு சிறு நீரகங்களும் பாதிப்புக்குள்ளான மௌலவிக்கு உதவுவோம்

தென் மாகாணத்தில் வெலிகம எனும் ஊரைச் சேர்ந்த மௌலவி M.H.M. புர்கான் (பாரி) (வயது 68). இவர்> வெலிபிடிய ஸாஹிரா முஸ்லிம் பாடசாலையில் இஸ்லாம் பாட ஆசிரியராக பல்லாண்டு காலம் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியராவார். வெலிகமை வாழ் முஸ்லிம்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர் ஐந்து பெண் மக்களின் தந்தையாவார்.  

இவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவரை சென்ற வாரம் நேரில் சந்தித்து அவரிடமிருந்து பெற்ற சில தகவல்களை இங்கு பிரசுரிக்கின்றேன்.

நோயைப் பற்றி விசாரித்தபோது> மனிதனுக்கு ஏற்படும் நன்மையோ> தீமையோ அல்லாஹ்வின் நாட்டமின்றி நடைபெறுவதில்லை எனவும்> அவன் மறைமுகமான சில நன்மைகளுக்காகவே இந்த நோயைத் தந்திருப்பான் என தனது நோயிலும் அல்லாஹ்வின் விதியை திருப்தியுடன்  எடுத்துக் கூறினார். அடுத்து> தான் நீரிழிவு நோய் ஏற்பட்ட ஆரம்ப காலப் பகுதியில் கவனக் குறைவாக இருந்தமையும் இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும்> நோய்கள் ஏற்பட்டால் முறையான சிகிச்சையும்> பாதுகாப்பும் அவசியம் என்பதையும் உணர்த்தினார்.

தற்போதைய பொருளாதார நிலை பற்றியும்> சிகிச்சை மேற்கொள்வது பற்றியும் விசாரித்தபோது> 
தமக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தின் மூலம் குடும்ப மற்றும் தனிப்பட்ட செலவுகளை சமாளிப்பதாகவும்> 
வாராந்தம் கொழும்புக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்பதே வைத்தியரின் ஆலோசனையாக இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில் இரு வாரங்களுக்கு ஒரு முறையே சென்று வருவதாகவும் குறிப்பிட்டார். அவசர> அவசிய பரிசோதனைகளை காலியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று மேற்கொள்வதாகவும் கூறினார்.

இரு சிறுநீரகங்களும் பாதிப்புள்ளான நிலையில் உள்ள இவர்> இறுதியாக சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்ற சமயம் மிக விரைவில் dialysis எனப்படும் குருதிச் சுத்தீகரிப்பை மேற்கொள்ளத் தயாராகுமாறு வைத்தியர் வேண்டியுள்ளது இவரை மேலும் நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற உதவிகளைப் பற்றி மௌலவி அவர்களிடம் விசாரித்தபோது> பெயர் குறிப்பிட விரும்பாத சில நல்லுள்ளம் படைத்தவர்களும்> சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே இணையத்தின் மூலம் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் மூலம் அறிமுகமற்ற சிலரும் தமக்காக உதவியமையையும் நன்றியுடன் நினைவுகூர்வதாகவும் அவர்களுக்கு அல்லாஹ் நிரப்பமான கூலியை மறுமையில் வழங்குவானாக என்றும் குறிப்பிட்டார்.

எனவே இவருக்காக நாம் முதலில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அடுத்து அல்லாஹ் எமக்களித்துள்ள வசதியிலிருந்து இக்கட்டான> நிர்க்கதி நிலையில் இருக்கும் மார்க்க அறிவைச் சுமந்த இந்த மௌலவிக்காக முடியுமான உதவிகளைச் செய்து ஈருலகிலும் அல்லாஹ்வின் அருளையும்> அன்பையும் பெறுவோம். நல்வழியில் நாம் அளிக்கும் கொடைகள் எமக்காக நாம் முன்கூட்டி அனுப்பி வைப்பவையே என்ற உண்மையை நாம் உணர்வோமாக.

அறிமுகமற்ற ஒருவரின் உயிரைப் பாதுகாப்பதற்காக அளிக்கும் தர்மம் நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்துரைத்த ''இடது கரத்துக்குத் தெரியாது வலது கரத்தால் வழங்கும் இரகசிய தர்மத்தில் நின்றும் உள்ளதே”

தகவல்:
மௌலவி அபூ ஸஃத்
வெலிகம.

வங்கிக் கணக்கு விபரம்:

M.H.M. FURKAN 
A/C NO:     077200140000523 
Peoples Bank  - Weligama Branch.
(Mob: +94774450317) 


0 கருத்துரைகள்:

Post a Comment