November 01, 2016

சம்பந்தனுக்கு, அப்துர் ரஹ்மான் நெத்தியடி..!

"பெரும்பாண்மை  சிங்கள சமூக்கத்தை மகிழ்விப்பதற்காகவே சமஸ்டி முறையினை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என கூறுவது தவறானது. சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு பற்றிய அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏன் ஏற்பட்டது என்ற யதார்த்தத்தினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும், தற்போது இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பில் தமக்கிழைக்கப்படும் அநீதிகள் மற்றும் பாரபட்சங்கள் காரணமுமாகவே முஸ்லிம் மக்கள் சமஸ்டி முறையினை சந்தேகத்தோடும் அச்சத்தோடும் நோக்குகின்றனர்" என NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் இரா.சம்பந்தனிடம் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவருமான . இரா சம்பந்தன் அவர்களுடனான விசேட சந்திப்பொன்றினை  நேற்று (31.10.2016) மேற்கொண்டது. NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் அதன் தலைமைத்துவ சபையின் செயலாளர் MBM.பிர்தௌஸ் அவர்களும் இரா.சம்பந்தன் அவர்களை அவரது கொழும்பு இல்லத்தில் சத்தித்து பல முக்கிய விடயங்களை விரிவாக எடுத்துக்கூறினர்.

குறிப்பாக, கடந்த 30.10.2016 அன்று  கொழும்பில் நடைபெற்ற வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகத்தினுடனான சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் சில மாற்றுக் கருத்துக்களையும் , தெளிவுகளையும் மற்றும் சில கோரிக்கைகளையும் நேரடியாக TNA தலைவரிடம் முன்வைக்கு முகமாகவே இந்த விசேட சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண முஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எதிர்கொள்ளும் நடை முறைப் பிரச்சினைகளை TNA தலைமைத்துவத்திடம் நேரடியாக எடுத்துக்கூறி அதற்கான தீர்வுகளை கோருவதற்காக வட மாகாண சிவில் சமுகத்தினர் குறித்த சந்திப்பினை கொழும்பில் ஏற்பாடு செந்திருந்தனர். இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் அதன் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.  வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சமூக சிவில் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டு, தமது மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஏனைய பல விடயங்களிலும் தாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்திடம் முன்னர் தெரிவித்தனர்.

NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் மற்றும் அதன் தலைமைத்துவ சபைச் தவிசாளர் சிறாஜ் மசூர் மற்றும் தலைத்துவ சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் Dr.KM,ஷாஹிர் ஆகியோரும் இதில் பங்கு பற்றி கருத்துக்களை அவதானித்ததோடு , NFGGயின் வடமாகாண சபை பிரதிநிதி அஸ்மின் அவர்கள் இதற்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தார்.

இதன்போது , TNA தலைமைத்துவத்தினால் தெரிவிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்பதோடு அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பல ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாக இருந்ததன் காரணமாக, குறித்த தினமே இரா. சம்பந்தன் அவர்களை தொடர்பு கொண்ட NFGG யின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் உடனடியான சந்திப்பொன்றுக்கான நேரத்தைக் கோரியிருந்தார். அதற்கமைவாகவே நேற்றைய சந்திப்பு இடம் பெற்றது.

இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் பற்றியும் மிக விரிவாக NFGG யின் தவிசாளர் இரா.சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.  அவர் தெரிவித்ததாவது....
" வடமாகாண சிவில் சமூகத்தினரின் குறித்த சந்திப்பின் நோக்கம் தாம் எதிர் கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உங்களது ஒத்துழைப்புடன் முடியுமான உடனடி தீர்வுகளைக் காண்பதாகும். இதற்கு பதிலாக, சமஸ்டி முறைத் தீர்வொன்றினை எல்லோருமாகச் சேர்ந்து பெற்றுக் கொள்வதுவே இதற்கான தீர்வு எனக்கூறுவது பொருத்தமானதல்ல. உங்கள் கைகளில் இருக்கும் அதிகாரத்தினையும் நிர்வாக வாய்ப்புக்களையும் பயன்படுத்தி நமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதுவே இங்கு எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், நேற்று உங்களால் வழங்கப்பட்ட பதில் திருப்தியாக அமையவில்லை. 

மேலும், பெரும்பாண்மை  சிங்கள சமூக்கத்தை மகிழ்விப்பதற்காகவே சமஸ்டி முறையினை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என கூறுவதும் தவறானது. சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு பற்றிய அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏன் ஏற்பட்டது என்ற யதார்த்தத்தினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும், தற்போது இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல் கட்டமைப்பில் தமக்கிழைக்கப்படும் அநீதிகள் மற்றும் பாரபட்சங்கள் காரணமுமாகவே முஸ்லிம் மக்கள் சமஸ்டி முறையை சந்தேகத்தோடும் அச்சத்தோடும் நோக்குகின்றனர். மேலும் சாதாரண நிர்வாக விடங்களில்கூட தம்மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மக்கள் உணர்கிறார்கள். அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலரின் இனவாதப் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்பதும் துரதிஸ்டமானதாகும் .இவற்றை முடிவுக்கு கொண்டு வருவதில் நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.  அவ்வாறு செய்வதன் மூலமே தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியும்.

மேலும், வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது மிகத் தெட்டத் தெளிவான ஒரு இனச் சுத்திகரிப்பாகும். யுத்த காலங்களில் வட புல தமிழ் மக்களின் இடப்பெயர்வும் கவலைக்குரிய மனித அவலங்களே. ஆனால்  முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட இன சுத்திகரிப்பு என்ற பாரிய அநீதியினை ஏனைய யுத்த கால அவலங்களோடு சமாந்திரமாக நோக்கி அதன் பாரதூரத்தை குறைத்து மதிப்பிட முயற்சிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒவ்வொரு சமூகங்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியின் தன்மையினையும் பாரதூரத்தினையும் உரிய முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலமாகவே ஒவ்வொரு மக்களுக்குமான முறையான நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

தமிழ் மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் நியாயங்கோரி தமிழ் பிரதிநிதிகள் ஜெனீவா சென்ற போது அதற்கு முட்டுக்கட்டை போட முஸ்லிம் மக்கள் ஒரு போதும் விரும்பவில்லை. தமது சந்தர்ப்பவாத அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலரே அதனைச் செய்தார்கள். அவர்கள் யார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்தச் செயலை உரிய நேரத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் கண்டித்தும் இருக்கிறோம்.

ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்களின் நீதி கோரும் நடவடிக்கைகளுக்கு குறுக்காக நின்ற அதே முஸ்லிம் அரசியல்வாதிகளோடு, சில பேச்சு வார்த்தைகளை இரகசியமாக நடாத்தி விட்டு முஸ்லிம் சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் தலைமீது சில தீர்மானங்களை திணிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. வட கிழக்கு இணைப்பு பற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துகளிலிருந்து இதைத்தான் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலரின் கருத்தை முஸ்லிம் சமூகத்தின் கருத்தாகக் கொள்ளக் கூடாது.  நீங்கள் நேரடியாக முஸ்லிம் சமூகத்தின் கருத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் வகுக்க வேண்டும். இதைத்தான் தொடர்ந்தும் உங்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இன நல்லுறவு, சமூக நல்லிணக்கம் போன்ற அரசியல் கோசங்களை ஊடகங்களிலும் மக்கள் சந்திப்புக்களின் போதும் தெரிவிப்பதனால் அதனை ஏற்படுத்த முடியாது. தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள் பேசித் தீர்த்து கொள்ளக்கூடிய விவகாரங்களை பரஸ்பரம் பேசி , நீதியுடன் அணுகி, தமக்குள் தீர்த்துக் கொள்ளக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலமே ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான பரஸ்பர நம்பிக்கையினை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாக்க முடியும். இதைத்தான் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உங்களிடம் வலியுறுத்தி வருகிறோம். துரதிஸ்ட வசமாக இதுவரை அது நடக்கவில்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்திலாவது இதில் நீங்கள் கூடிய அக்கறை செலுத்தி நேரடியாக தலையீடு செய்து நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். 

மேலும்,  வட மாகாணத்தில் நாம் உங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தமானது வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தினையும் ஏனைய நலன்களையும் பாதுகாப்பதனை அடிப்படை நோக்கமாக கொண்டதாகும். அதனை வட மாகாண சபை ஊடாக மேற்கொள்ள வேண்டும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தோம்.அதற்காகவே எமது பிரதிநிதி ஒருவரும் உங்களால் வடமாகாண சபை உறுப்பினராக எமது ஒப்பந்தத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டார். அந்த நோக்கங்களை நிறைவு செய்வதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனை நீங்களும் நேற்றைய குறித்த சந்திப்பின் போது ஏற்றுக் கொண்டீர்கள். இந்த சூழ் நிலையில் வட மாகாண சபையில் எமது பிரதிநியிதியின் அங்கத்துவத்தினை தொடர்வது தொடர்பிலும் நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது". 

இவ்வாறு NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் இர.சம்பந்தனிடம் தெரிவித்தார்.

இந்த கருத்துகளை கவனமாக செவிமடுத்த TNA தலைவர் அவர்கள் NFGG முன்வைத்த கருத்தக்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டதோடு , இவை தொடர்பில் தாம் உரிய கவனம் செலுத்துவதாகவும் , மீண்டும் சந்தித்து கலந்துரையாடி சில தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். a

27 கருத்துரைகள்:

நன்றிகெட்டவன்.அது சரி இவனும் முஸ்லீம் தானே.

இவன் ஒரு நம்பிக்கை துரோகி. தான் முஸ்லீம்தான் என்பதை நிருபித்து விட்டான்.

This comment has been removed by the author.

இதில் எந்த நெத்தியடிம் இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு சரியான தீர்வு கிழக்கு மக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கேற்ப தமிழ் மக்கள் தங்களது தீர்வை முன்னெடுக்க வேண்டும். முஸ்லீம்களிடம் கெஞ்சி கொண்டிருப்பது முட்டாள்தனம்.

Ade sakeeliya kumar ettappan paramparail want ha soinaieya.varththaiya allanthu pessu.

யாரடா துரோகி தேச விரோதியே? முடிந்தால் யாழ்பாணத்தான் வீட்டில் அவன் குடிக்கும் கிளாசில் நீ தண்ணி வாங்கி குடியடா பார்க்கலாம், காலம் காலமாக உங்கள் மேல் அவனுக சவாரி பண்ணுறானுக அதைக் கேட்க துப்பில்ல, உங்களால் எங்களையும் கீழ்சாதின்னு நினச்சிட்டு இருக்கானுக. அதுசரி திண்ட பீங்கானில் பேண்டு வைக்குற சாதியில வந்தவன்தானே நீ...! எங்கடவன துரோகின்னு சொல்லுறியா? உனக்கு என்னடா தகுதி இருக்கு இங்கைஎல்லாம் வந்து கருத்து சொல்ல கீழ்சாதி நாயே...!

What kind of Heading is this? Don't degrade yourself Jaffna Muslim!!

உனக்கு கெட்ட வார்தை தவிர என்ன தெரியும்.ஒழுக்கம் கெட்ட நீ என்னை மிரட்டுகிறாயா?

ஆகா இஸ்லாமிய விழுமியங்கள் அடங்கிய அற்புதமான பதில்

Hello Kumaran
Only human can understand human problem not barbarian.It is the barbaric act done by LTTE to the northern Muslims.Now it is very clear that the present north Tamil politician's specially Vigneshvaran's attitude towards IDP people of Jaffna shows they are no difference to that of barbaric LTTE.They want to grab those land and properties of Muslims with the help of shiv sena.

குமரா யாரடா துரோகி முகத்தை பெனைய வேண்டும் நீங்கள் எங்களுக்கு பண்னிய கொடுமைகளுக்கு.

Why these people using Tamil as their language ?these people should use Arabic or Urudu ...am I rite brothers?

@ Imthiyas Hussain
Hello Hussain
Only human can understand human problem not barbarian.there are many barbaric act's done by Jigad to the eatern tamils.Now it is very clear that the present muslim politician's specially Rishard's attitude towards tamil people of north east shows they are no difference to that of barbaric Jigad.They want to grab those land and properties of north east tamils with the help of SURA COUNCIL.

This comment has been removed by the author.

ஜீகாத்தை வைத்து எமது சொத்துகளை ஏப்பம் விட்ட நீங்களே தைரியமா அடிப்படை வாதம் பேசும் போது நாம் ஏன் தயங்க வேண்டும்.

This comment has been removed by the author.

ஏண்டா மூதேவி திருட்டு நாயிங்களா...! ஏதோ சோனிக்கு பிறந்தவன் மாதிரி வீடு புகுந்து கொள்ளையடிச்சது, வடக்கில் இருந்து ஆயுதமுனையில் துரத்தி விட்டு கொள்ளையடிச்சது நீங்களா நாங்களா? அடேய் குமரன் இன்னும் இருக்கு எடுத்து விட்டால் தாங்கமாட்டே , நீங்க எல்லாம் நாங்க துப்புர எச்சிலுக்கும் சமமில்ல , அப்படி இருக்கும் போது உங்களை கொள்ளையடிப்போமா? அதுக்கு முதல் எங்களுக்கு கூலிக்கு இருந்து பஞ்சம் பொழைச்ச கீழ் சாதி நீங்க , உங்ககிட்ட நாங்க கொள்ளையடிச்சோமா? இந்த துப்பாக்கி கலாச்சாரம் உங்களிடம் வரவில்லை என்றால் இன்றைக்கும் உன் இனம் எங்கள் முன்னால் மேல் சட்டை போட முடியாது. தெரியவில்லை என்றால் உன் பாட்டன் பூட்டனிடம் கேள். நாங்க கொள்ளையடிக்க உங்ககிட்ட என்னடா இருக்கு கீழ்சாதி....!

ரீலு அந்து போச்சு..

Anpu andavar
You r 100% correct

ரீல் விடும் தேவை எங்களுக்கு இல்லை, உங்களில் தான் தனிநாடு தனித் தேசம் என்று ரீல் விட்டவர்கள் எல்லாம் எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டு வேரோடும் வேரடி மண்ணோடும் வெச்சு அழ பொணம் கூட கிடைக்காமல் அழிந்து போய் விட்டார்கள். பொத்திகிட்டு போடா....!

பிறக்கும் எல்லோரும் சாவது இயல்பு நாம் உயிரை ஆயுதமாக ஏந்தியவர்கள்.
உண்மையான போராளிக்கு சாவும்கிடையாது தோல்வியும்கிடையாது.
சொம்பேறிகள் எம்மை பார்த்து போறாமை கொள்வது இயல்பு.

உண்மையான புலி என்பதை ஏற்றூக்கொண்டாய்

கருணா போல் நன்றி கெட்டவனா?

@Voice of muslim
கருணா போல்.,பிள்ளையான் போல்.,டக்ளஸ்போல்,பிரசாந்தன்போல்,ஜீகாத் போல்

Mutaafa : Who are you then? Lion supporting fox rite?

Post a Comment