November 17, 2016

அப்துல் ராசிக் கைதுக்கு, ஆசாத் சாலியே காரணம் - சமூகம் வெட்கப்பட வேண்டும்


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துல் ராசிக் கைது செய்யப்படுவதற்கு முன்னின்றவர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி என்பது முஸ்லிம் சமூகம் வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிராக வெறுப்பேற்றும் பேச்சுக்கள் பேசுவோர் பெரும்பான்மையின சமய தலைவர்கள் என்பதற்காக அவர்கள் கைது செய்யப்படாத நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தில் எவரையும் நிந்தித்து பேசாத அதன் செயலாளர் அப்துல் ராசிக் கைது செய்யப்பட்டமை கவலையான விடயமாகும். இது பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எமது உலமா கட்சி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தின் போது முஸ்லிம்க‌ள் ஆயுத‌ம் ஏந்த‌ வேண்டி வ‌ரும் என‌ சொன்ன‌த‌ற்காக‌ ஆஸாத் சாலி கைது செய்ய‌ப்ப‌ட்ட‌போது அவ‌ர் த‌வ்ஹீத் சார்பு முஸ்லிம்களுக்கு எதிரான‌வ‌ர் என்ற‌ நிலையிலும் தவ்ஹீத்வாதிக‌ள் உட்ப‌ட‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ குர‌ல் கொடுத்த‌ன‌ர். எந்த‌வொரு அமைப்பும் ஆசாத் சாலி கைது செய்ய‌ப்ப‌ட்ட‌து ச‌ரி என‌ கூற‌வில்லை. ஆனால் தற்போது அப்துல் ராசிக் கைது செய்யப்படுவதற்கு முன்னின்றவர் அதே ஆசாத் சாலி என்பது முஸ்லிம் சமூகம் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

மஹிந்த காலத்தின் இறுதியில் முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போது அதற்கு மஹிந்தவே பொறுப்பு என கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளால் கொண்டு வரப்பட்ட இந்த ஆட்சியில் அதை விட மோசமாக இன மத வெறுப்புப்பேச்சுக்கள் பேசப்படும் போது அதற்கு இன்றைய அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும்.  இவற்றின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என சிந்திக்கத்தெரியாத சிலர் சொல்கிறார்கள். அவ்வாறு அவரின் ஒத்துழைப்புடன் இத்தகைய இனவாதிகள் செயற்படுவதாக இருந்தால் இவர்களை மிக இலகுவாக அரசால் கைது செய்ய முடியும். மஹிந்தவின் இரு மகன்களை கைது செய்ய முடிந்த அரசுக்கு மஹிந்தவினால் இயக்கப்படுவதாக சொல்லப்படும் மத குருக்களை கைது செய்வது கஷ்டமான காரியமா என்று கூட சிந்திக்கத்தெரியாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது.

எம்மை பொறுத்தவரை எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு மதத்துக்கு எதிராகவோ, அல்லது இனத்தை தூற்றினாலோ அவர் கைது செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை சொல்லி வருகிறோம். இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்கக்கூடாது. இப்படியான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட ஏலவே முயற்சி எடுக்கப்பட்டபோது அதனை எதிர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று மட்டக்களப்பு விகாராதிபதியின் வெறுப்புப்பேச்சை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆக‌வே அப்துல் ராசிக்  விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள் த‌ம‌து மார்க்க‌, க‌ருத்து வேறுபாடுக‌ளை ஒதுக்கி விட்டு அவருக்கு நியாயம் கிடைக்க பிரார்த்திப்ப‌துட‌ன் இது விட‌ய‌த்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது" என குறிப்பிட்டார்.

17 கருத்துரைகள்:

ச்மூகம் பிழவு பட்டால் எதிரிகளுக்கு கொண்டாட்டம்.
SLTJ கபுறு வணக்கத்தை எதிர்ப்பதால் தான் இப்படியோ.

உலமா கட்சி இருப்பதையும் அதன் தலைவரையும் jaffnamuslim இனைய தளம் அடிக்கடி ஜபாகம் செய்கிறது இவரது கருத்துக்களை பதிவு செய்யும் போது சமூகத்தின் ஒற்றுமையை கருத்தில் கொள்ளவும்

Mr.Mubarak Moulavi,

You should be a neutral person because you are holding the title as "Moulavi" after your name. You know that Muslims in Sri Lanka having a long history and lived in peace with other communities. As a supportive evidence, let me tell you that Muslims were highly honoured by Sinhalese by choosing the Muslims as their leaders - as examples MH Mohamed, Bakir Markar, Imthiyas Bakir Markar, Kabir Hasim, ULM Farook, Ishak and there are so many. TB Jayah is still remembered by Anandians including the family members of late Philip Gunawardene

With the facts as above we have to tell you, you may not like it, the current situation was created by SLTJ. You as a Moulavi you should have taught them the teachings of Islam and the guidance of Prophet Mohammad (PBUH) who has taught us about the tolerance. Since you are a Moulavi you know much about it more than me.

Therefore it is not too late and we as Muslims have to follow the ACJU and unite in the name of Almighty Allah (SWT) and our Rasool Prophet Mohammad (PBUH) without any division. Divisions have been created already with the import of money made principles.

He is the first betrayer of our community for mere worldly politics. And those who are happy and delighted to see our fellow brother Razicks arrest should read the follow hadeeths. Do not be friend with an enemy in order to punish your fellow brother. Bricked for them enemies we all " Thambiyas"
I didn't mean to say Razik was 100% but he wasn't the reason for this situation to arise.

Allah’s Apostle (pbuh) said, “A Muslim is a brother of another Muslim, so he should not oppress him, nor should he hand him over to an oppressor. Whoever fulfilled the needs of his brother, Allah will fulfill his needs; whoever brought his (Muslim) brother out of a discomfort, Allah will bring him out of the discomforts of the Day of Resurrection, and whoever screened a Muslim, Allah will screen him on the Day of Resurrection.” Volume 3, Book 43, Number 622: Sahih Bukhari.

Narrated Anas bin Malik (R.A):

Allah’s Apostle (pbuh) said, “Help your brother, whether he is an oppressor or he is an oppressed one.” Volume 3, Book 43, Number 623:Sahih Bukhari.

Narrated Anas (R.A):

Allah’s Apostle (pbuh) said, “Help your brother, whether he is an oppressor or he is an oppressed one. People asked, “O Allah’s Apostle! It is all right to help him if he is oppressed, but how should we help him if he is an oppressor?” The Prophet said, “By preventing him from oppressing others.” Volume 3, Book 43, Number 624:Sahih Bukhari.

Allah knows the Best.ABDUL RAZIK arrest vidayam pinnal asad sali erundal tawaru maruppadatku illai.atepol inda tuwesa kumbal pinnal iruppatum mahinda rajapaksa enbatum tawirkka mudiyada unma I mubarak maulavi itai oppukkolla mattar.

Firstly we need to learn how to live together as Muslim. Before we need to find a way to live unite with other religions.

ellam arindavan allah oruvane yar edo oru valila iduvum nalaukkaha irukka mudium so nam kadamaiyai sindikkum neram idu
venaha oruttharai orutthar kurai solvadai vittu vittu ella thalaivarkalum ondru serndu idatkana mudivai sindiungal ippoludu sari otrumaiyai kadai pidiungal

this red land mark man violating all the Muslims,he should be shut up his mouth, arrest of single person his blaming entire Muslims.you guys are such a 3RD class leaders in our country because you guys know only to criticize each others.the really we feel shame on those who same like you. so please stop blaming entire community in the island.you guys are behind the money with the political power.
JAFFNA MUSLIMS I HAVE MANY TIMES COMMENT WITH VERY DECENT MANNERS.BUT NEVER PUBLISHED I HOPE AT LEAST THIS WILL BE......

அசாத் சாலி ஒறு அசத்தினவாதி

"மேலே நோக்கி உமிழ்தல்" இது குறித்து நமது சமூகத்துக்கு அறிவு குறைவுதான். தத்தமது சொந்த வீட்டுப் பிரச்சினை போல சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அணுகும்போது இதுபோன்ற குளறுபடிகள் வரத்தான் செய்யும். நான் கொள்கை அளவில் SLTJஇற்கு முரணான நிலைப்பாட்டில் இருந்தாலும், அவர்களின் சிறுபிள்ளைத் தனமான செயல்களைக் கண்டித்தாலும் தற்போதைய பிரச்சினையில் அவர்களுடன் நமது சமூகம் நடந்துகொள்ளும் விதம் மிக மட்டமாகவே தெரிகிறது. "மறக்கலே எதுலே" என ஒரு முட்டாள் "சிங்ஹெலே" இற்கு ஈடாக ஒரு படத்தை சமூகத் தளங்களில் வெளியிட்டுள்ளமை நமது சமூகத்துக்கு சமூக அறிவு பூச்சியம் என்பதை வெளிக்காட்டுகிறது. அதை share இன்னொரு கூட்டம். நாம் எப்போது "மறக்கலே" கோஷம் போட்டோம்? பிற சமூகங்களை நிந்தித்தோம்? SLTJ ஆக்க கூட இருக்கட்டும்! யாரும் செய்யவில்லையே! இதே கோஷத்தை நமக்குத் திருப்பிவிட எவ்வளவு நேரம் எடுக்கும்?இணையத்தளங்களில் சமூக வலைத்தளங்களில் உலாவரும் இந்த "keboard" வீரர்களிடம் இருந்து அல்லாஹ் சமூகத்தைக் காப்பானாக!

Abdul razik himself is the reason for his arrest. He doesn't know how to speak in a public meeting and amoung other community .if he is really following the Quran he should know how to do Dahwa, how politely we have to talk to a non muslims... etc... Allah teaches us everything... nobody else is responsible for his arrest...I'm not against SLTJ, but against this kind inflammatory talk,

I am ashamed as a muslim to read these comments from sri lankan muslim brothers! why do they love this world so much, forgetting the destination Yaumul Aakhira. True believers will go for justice! Brother Razik will get justice Insha Allah.
Allah says: "O you who believe! Stand out firmly for Allah, as witnesses to fair dealing, and let not the hatred of others to you make you swerve to wrong and depart from justice. Be just: that is next to piety: and fear Allah. For Allah is well-acquainted with all that you do.” [Sûrah al-Mâ’idah: 8]

இனவாத்தை பரப்புபவர்கள் எந்த மதமாக இருந்தாலும் கைது செய்வது சரியானதே..
அந்தரீதியில்தான் அசாத்-சாலி அவர்கள் பாகுபாடின்றி கைது செய்யுமாறு கூறியுள்ளார்.
கௌரவ அசாத்-சாலி அவர்கள் பெருபான்மையினருடனும்,ஜனாதிபதியுடனும் சுமூகமாக கையாண்ட முஸ்லிம் உரிமை விவகாரத்தை இந்த SLTJதீவிரவாதிகள்தான் குழப்பி விட்டனர்.

இத்தனைக்கும் இனரீதியான பேச்சுக்களைப்பேசி பெருபான்மை தீவிரவாதிகளை சீண்டியவர்கள் இந்த குறைஅறிவுள்ள SLTJதீவிரவாத அமைப்பினர்தான்.

உலமாஉக்கட்சி என்ற பெயரில் தீவிரவாதிகளான SLTJயை வழிநடத்துபவர்களில் ஒருவரான முபாரக் மஜீத் அவர்கள் தங்களது காழ்ப்புணர்ச்சியை கொட்டி தீர்த்துக்கொண்டிருப்பது குரோத மானப்பான்மையாகும

@ Nijam Mohamed என்னவ ஆசாத் சாலி ? கௌரவ ஆசாத் சாலியா ? அவரின் கெளரவம் பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். அது தானே நாறிடிச்சி.
நீங்கள் என்ன அவருக்கு Election நேரத்தில் ஜால்ரா அடிப்பவரா?
முபாரக் மௌலவியும் ஒரு சுயநலவாதி தான். இந்த அசாத் சாலி தான் முதலாவது சமூக விரோதி, தனது சொந்த அரசியல் இலாபத்துக்காக முஸ்லிம்களுக்கு சவூதியில் இருந்து பணம் வருகிறது , கிழக்கில் ஜிகாத் அமைப்பு உள்ளது என்று அந்நியர்களிடம் பல்லிளித்தவரே இவர்தான்.
ஆகவே இந்த அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பதை விட்டு ஒன்று படுவதட்கான முயட்சிகளை மேட்கொள்ள வேண்டும்.

All Muslims. Will agree on the following
BBSis the main reason for the current situation they openly criticised the Muslim faith and its Holy book, and responsible for communal violence at Aluthgama.First Ganasarar and BBS to be punished.I am not surprised about Azath Sally he will talk anything for cheap popularity just ignore him.Mubarak morula I another Anandasangaree, he write letters no one end it.I call upon Muslim community to unite and act responsibly,any form of violence will hurt Muslims more.Dont go after these jokers.

Post a Comment