Header Ads



இனவாதம் பேசுபவர்களுடன், கருணை வேண்டாம் - பொலிஸமா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு

தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு - பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு; அமைச்சர் மனோ கணேசன் தகவல்

17-11-2016 இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல், முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், ஜனாதிபதி தன் செயலாளருக்கு பணித்தார். அத்துடன் இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, நீதி அமைச்சருக்கும் பணிப்புரை விடுத்தார்.

புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்தார். அப்படியானால், புதிய சட்டம் வரும்வரை காத்து இருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி பொலிஸ் மாதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதூதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்த்தன, எம்பி ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், போலிஸ் மாதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

13 comments:

  1. good news!!!!! hope to see you all in action,all the best

    ReplyDelete
  2. GOOD NEWS..
    உண்மையான நேர்மையான எண்ணத்துடன் MY3 கட்டளை விட்டிருந்தால், அதை IGP நிறைவேற்றினால் , அப்போது அடுத்த முறை MY3 தான் சனாதிபதி……. பொறுத்து இருந்து பாப்பம்..

    ReplyDelete
  3. Do not make empty talks.

    People needs actions against the criminals.

    ReplyDelete
  4. Replies
    1. Mr.mueen my3 n igp maybe Arabic don't understand old.translate Ur comments by signals or English

      Delete
  5. அல்லாஹ்வே போதுமானவன்,அனைத்து உள்ளங்களின் றப்பு அல்லாஹ்,அவன் நாடியது நடக்கும் அவன் நாடாதது நடக்காது.அவனிடமே துவா செய்வோம்

    ReplyDelete
  6. Government has formed freedom commissions. But they are depending on government order to take decision.
    Are they freedom commission?

    ReplyDelete
  7. Very good decision, than police need to active straight forward. this is your challenge. we need Sri Lanka is a one nation, one country. that mean " WE ARE SRI LANKAN" that's all. we like to live with peace and calm in our small country with majority of Sinhalese and Tamil.

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் நல்ல முடிவு

    ReplyDelete
  9. The Public looking for peace of mind , his excellency's decision is warmly welcomed and appreciated by the citizens of Sri lanka

    Hameed.A Cader

    ReplyDelete

Powered by Blogger.