Header Ads



'இன உணர்வு கூர்மையடைதல்' என்ற நிகழ்வின் முன்னே…!

-Usthaz Mansoor-

நாட்டின் சில இடங்களில் இனத்துவேஷ வெளிப்பாடுகள் நிகழ்ந்து வருவதை அவதானிக்கிறோம். இது உலகளாவிய நிகழ்ச்சியாக அமைந்திருப்பதுவும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். இந்தியாவின் மோடி அரசாங்கம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தமை, அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தமை என்ற நிகழ்வுகள் எல்லாம் இந்த உண்மையையே சுட்டுகின்றன.

இந்த இன உணர்வின் தீவிர நிலை இனக்கலவரங்களாக வெடிக்கும் சந்தர்ப்பமும் உண்டு. எதிர்காலம் மிக மோசமாக அமையும் சந்தர்ப்பம் மிகக் கூடுதலாகவே உள்ளது. இந்நிலையில் எம்மை நாம் திருப்பிப் பார்த்தல் மிகவும் அவசியமானது. இங்கு மூன்று விடயங்களை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாகி வருகிறது என்ற பயமும், நாடு படிப்படியாக இஸ்லாமிய மயப்பட்டு வருகிறது என்ற பயமும் உருவாக்கப்பட்டுள்ளது. அது பூதாகாரமாகவும் எடுத்துக்காட்டப் படுகிறது. பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் பலம் பெற்று வருகிறார்கள்.மிகுந்த வசதியாக ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்ற பிரமை மிகவும் கவர்ச்சிகரமாக முன்வைக்கப்படுகின்றது.

 அரசியல் ரீதியாக அவர்கள் தங்களது இன நலன், தேவைகளை முதன்மையாகக் கொள்கிறார்களே தவிர நாட்டின் பொது நலனில் அக்கறை கொள்கிறார்களில்லை என்ற குற்றச்சாட்டு.

இதற்கான தீர்வுகள் எனது பார்வையில் கீழ்வருமாறு அமைய முடியும்.

எமது மார்க்க வெளித்தோற்றங்களில் கணிசமான மாற்றத்தை கொண்டு வருதல் :
எமது பள்ளிகள், தஃவாவுக்கான கட்டிட ஒழுங்குகள், இயக்க ரீதியான செயற்பாடுகள், எமது உடை போன்ற வெளித்தோற்றங்கள் போன்றவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.இவ்வாறு நான் கூறும் போது ஆத்திரத்தோடும், உணர்ச்சிவசப்பட்டும் இறை தூதர் (ஸல்) அவர்களின் ஸுன்னாவுக்கு எதிராக பெண்களின் பர்தாவுக்கெதிராக இவன் பேசுகிறான் என என்னைக் கடுமையாகப் பலர் சாடுகிறார்கள். ஆனால் எனது உள்ளத்தைப் பற்றி அல்லாஹ்வே அறிவான். சில உண்மைகள் பேசப்படவே வேண்டும். நிகழ்காலத்தில் அதற்கான வரவேற்பில்லாது விட்டாலும் சிந்திக்கும் சிலராவது இருப்பார்கள் என நம்புகிறேன். இப்போது இதனை ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாகவாவது மாற்றுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.

அத்தோடு ஆன்மீகப் பக்குவம், ஒழுக்கப்பண்பாடுகளை வளர்த்தல், இஸ்லாத்தின் அடிப்படை சிந்தனைகளை வளர்த்தல், குடும்பக் கட்டமைப்பை பலப்படுத்தல் என்பவையே எமது கவனத்தை ஈர்க்க வேண்டும்.

மூடுண்ட சமூக நிலையிலிருந்து வெளிவந்து மைய நீரோட்டத்தில் கலத்தல். இந்த வகையில் மூடுண்ட சமூக ஒழுங்கு என்பது என்ன? மைய நீரோட்டத்தில் கலத்தல்  என்பது என்ன பொருளைக் கொடுக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலும் அதனைப் படிப்படியாக எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை வகுத்துச் செயற்படலும்.

எமது அரசியல் செயற்பாட்டில் தனிக்கட்சி ஒழுங்கில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதும் தேசிய கட்சிகளுடனான எமது உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்கள் குறித்து விரிந்த கருத்துப் பரிமாற்றத்தை உருவாக்கல்.

இவை எல்லாவற்றினதும் அடிப்படை முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் சம்மந்தமான இஸ்லாமிய சிந்தனையைக் கட்டமைப்பதாகும்.


26 comments:

  1. Well said, May Allah bless u

    ReplyDelete
  2. When DAJJAL comes, what will be your advice brother ? Even for small Dajjals you ask Muslims to change Islamic appearance... I am afraid about your advice to people , in case DAJJAL arrives in this period.

    May Allah Guide YOU, Me and all Muslims in correct path.

    ReplyDelete
    Replies
    1. If any Muslim man wear trouser & shirt or coat, is this haraam? If any Muslim women wear a dress according to sharia law but not abaaya, is that dress code haraam?

      Delete
  3. Al hamdulillah. This message is contained my view too. Jazakallah brother. Good. Appreciated. I agree with this message 200%. Go ahead brother. Allah will bless you always.

    Let's unite.

    ReplyDelete
  4. MashaーAllah, timely advice, May Allah reward you usthadh, but I have no confidence in our community, who would go for a change...instead they would try to find fault with him! Most of us in Sri Lanka may not know him, He is the best or one of the few best Islamic Scholars in Sri Lanka, Alhamdhulillah! I was fortunate to be one of his initial students 27 years ago. Any honest muslim wants to learn real and pure Islam, I whole-heartedly recommend to read his articles listen to his audios and watch videos in youtube if any one gets a chance to attend his classes, never miss it.

    ReplyDelete
  5. Bro.Muhammad Rasheed, Please tell me what is Islamic appearance? really I don't know! also want to know who told us to wear Pakistani, Saudi, Turkish (etc) cultural dress? Did Allah say in the glorious Qur'an or did Propher Muhammad(SAL)command us? You have no idea who Usthad Mansoor is...

    ReplyDelete
  6. கண்ணியமிக்க Uzthaz Mansoor அவர்களே, முஸ்லிம்கள் இந்த நாட்டில் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் மதம், கலாச்சாரம் அதன் வளர்ச்சி போன்றவையை எவருக்கும் தீர்மானிக்கும் உரிமை கிடையாது. அது முஸ்லிம்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் பிரைஜைகள் அனைவரும் சமமானவர்களே. சிங்கள குண்டர்களுக்கோ அல்லது தேரர்களுக்கோ ஒரு சட்டமும் ஏனையவர்களுக்கு இன்னும் ஒரு சட்டமும் இங்கு இல்லை. அதட்கு நாம் இடமும் அளிக்க முடியாது. இதட்கான எதிர்ப்பை, போராட்டத்தை இந்த முஸ்லீம் சமூகம் ஜனநாயக ரீதியில் (நீதி மன்றம், அரசாங்கம், மனித உரிமைகள் அமைப்பு (உள்நாட்டு வெளிநாட்டு), இந்த நாட்டின் ஏனைய அரசியல் கடசிகள் ( JVP, கம்யூனிஸ்ட் பார்ட்டி..etc.) ஒரு துளி அளவும் எடுக்க வில்லை. எனவே நமது சமூகம் இந்த இனத்துவேசிகளை ஜனநாயக ரீதியில் முகம் கொடுக்க வேண்டும். நாம் சளைக்காமல் முயட்சி செய்தால் நிட்சயம் வெற்றி இவ்வுலகிலும் உண்டு மறுமையிலும் உண்டு. இந்த இன துவேஷிகளுக்கு நிட்சயம் தோல்விதான். அதுதான் யதார்த்தமும் சத்தியமும்.
    உண்மையில் தற்போதைய பிரச்சினைக்கு நமது மார்க்க வெளித்தோற்றம் கிடையாது ( 1200 ஆண்டுக்கும் மேலாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள், நிறைய பிரச்சனைகளை முகம் கொடுத்தும் உள்ளார்கள். இந்த நாட்டை ஆண்ட போத்துக்கீசர்கள் உட்பட. அப்படி பார்க்கும் போது தற்போதைய வம்பர்கள் Nothing). இதை பிரச்சினையாக தூக்கி பிடித்து தங்களது அரசியல் உள்நோக்கமும் ( ராஜபக்ச அன் கோ ), துவேச மனபாங்குமே ( சிங்கள குண்டர்களும், தேரர்களும்) முக்கிய காரணம். எனவே முஸ்லிம்களின் மீது அவர்களது செயட்பாடுகள் நிட்சயம் இருந்து கொண்டே இருக்கும். பிரச்சினை என்ன வென்றால் முஸ்லிம்களின் தலைமைத்துவம் சரியான புரிதலுடன், ஒரு துணிவுள்ள, தெளிவுள்ள வழிகாட்டுபவர்களாக இல்லை என்பது தான் உண்மை. ஒரு உயிர் கொல்லி நோய் பீடிக்கப்பட்டால் அதட்கான மருந்து தரும் பக்க விளைவை ( side effect) சிந்தித்து கொண்டிருந்தாள் அதன் முடிவு மரணம் தான் என்பது அனைவருக்கும் புரிந்த விடயம்.

    எனவே நாங்கள் கூறுவது இதான்... உங்களை போன்ற கண்ணியமிக்கவர்களும், புத்தி ஜீவிகளும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும், மக்களும் நிதானமாகவும், உறுதியாகவும், களைப்பும் சலிப்பும் பயமும் இல்லாமல், உத்வேகத்துடன் இந்த துவேஷிகளுக்கும், அரசுக்கும், நமது பேசாமடைந்தைகளான அமைச்சர்களுக்கும் எம்பி மார்களுக்கும் தொடர்ந்து தமது எதிர்ப்பையும் அழுத்தத்தையும் கொடுத்துக்கொன்டே இருங்கள் நிட்சயம் உண்மை, சத்தியம் வெல்லும். இறைவன் மிகப் பெரியவன்...!!

    ReplyDelete
  7. முகம் மூடுவது எமது உரிமை என்று மக்தப் செல்லும் குஞ்சுகளுக்கு கருப்பு ஹிஜாப் போட்டு முகம் மூடி , ஜுப்பா போடும் மத தலைமைகள் , வெளி வேடங்களை களைந்து மார்க்க அடிப்படைகளை யதார்த்தமாக நீண்டகால நோக்கில் சிந்திக்க உடன்படுமா ?

    ReplyDelete
  8. Peace change your name.your opinions opposit your name.fardha thoppi we dont follow thats what allah giving test and troubles our life.due to come back to quran hadees.mr peace pls dont insult our trade marks imean our signs.ifyou have dont follow pls be quiet.dont say fardha not in hadees or quran

    ReplyDelete
  9. ஆம் உஸ்தாத் அவர்களே,மக்கள் உங்களுக்கெதிராகப் பேசத்தான் செய்வார்கள். ... ஏனென்றால் , ,,
    - ஏற்கனவே எமது நாட்டில் முஸ்லிம்களின் பித்னாக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நீங்கள் பெண்களின் ஆடைக் குறைப்பு பற்றி சிந்திக்கின்றீர்கள்...
    -எங்களது வெளித்தோற்றங்களில் கணிசமானளவு மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ...என்கிறீர்கள் ,,ஒன்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்,,, இந்த உலகில் யாரையும் திருப்திப்டுத்த வேண்டிய கட்டாயமோ கடமையோ எங்களுக்கில்லை. நாங்கள் அதற்காகப் படைக்கப்படவும் இல்லை. .. இறைவனை மட்டும் இஹ்லாஸுடன் திருப்திப்படுத்திப் பாருங்கள், மற்றவை அனைத்தும் தானாய் நிகழ்வதைக் காண்பீர்கள். .. அதை விட்டு விட்டு இஸ்லாத்தை களையச்சொன்னால், எமது முஸ்லிம்களின் அடையாலமே இந்த நாட்டில் இல்லாமல் போய்விடும்..அந்த அளவு மார்ககத்தை பேணுதலாகப் பின்பற்றிவருகின்றவர்கள் தானே எமது சமூகம். ...
    இந்த சமுகம் உங்களைப் போன்றவர்களின் பத்வாக்களை கை ஏந்தி எதிர்பார்த்திருக்கின்றார்கள். ...

    ReplyDelete
  10. It is Sunnah of Muhammed (sal) to leave the beard BUT not to size it in a way that what we feel looks good to our face.

    Once people blindly follow Brother Mansoor, They will not see the mistakes of their teacher.

    No Muslim should blindly love or follow any human on earth except Muhammed (sal).

    When teachers are ready to change the appearance of Beard as per their need.. it is not suprising that thay ask Muslims to change their dresscode for the sake of Kuffars eyes.

    If you start changing dresscode today.. they will keep on forcing you to change till you turn away from masjids too.

    May Allah Guide us in Correct path as followed by successful generation in Islam.

    ReplyDelete
  11. அந்நியவர்கள் எம்மை பார்த்து மூடத்தனமான அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்கள் என அஞ்சும் அளவுக்கு எமது பருவமடையாத சிறுசுகளை கருந்துணியால் மூடி , வைட்டமின் டி குறைபாடு மற்றும் உளவியல் பாதிப்புகளை உண்டாக்கி என்ன சாதிக்க போகிறோம். இஸ்லாமிய அடிப்படைகளை விளங்கி பாக்கிஸ்தான்,சவூதி காரன் போலன்றி எமது நாட்டுக்கு பொருத்தமான ஒழுங்குகளை சிந்திப்பது மேல் அல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. பருவமடையாத சிறுசுகளை கருந்துணியால் இன்று வரை யாரும் மூடியதாகத் தெரியவில்லை. .. அப்படியிருந்தும் இப்படிக் கவலைப்படுகின்ற நீங்கள் அத்தகைய சிறுசுகள் இன்று துஷ்பிரயோகத்துக்கு ஆலாகின்றனர். ..அதற்கு என்ன செய்யப்போகின்றீர்கள்..?
      இந்த நிலையைப்பார்த்தால் கண்டிப்பாக எதிர்கால சிறார்களும் கூட முழுமையாக ஹிஜாப் பேண வேண்டிய நிலை வரலாம்.

      Delete
  12. Peace .please try to understand.our focus not dunys .our focus on aahira.
    HUBBUD DUNYS KULLU HATHIYYA

    ReplyDelete
  13. Peace .please try to understand.our focus not dunys .our focus on aahira.
    HUBBUD DUNYA KULLU HATHIYYA

    ReplyDelete
  14. உஸ்தாத் மன்சூர் அவர்கள் என்னதான் சொல்ல வருகிறாரோ தெரியவில்லை.

    இஸ்லாம் என்பது நாகரீகமானது - வாழ்வியலில்.

    ஓரிரு வார்த்தையில் சொல்வதானால் - நாகரிகம் என்றால் திருந்திய வாழ்வு என்று பொருள் கொள்ளலாம்.

    திருந்திய வாழ்விற்கு மாற்றங்கள் அவசியம் அற்றது.

    ReplyDelete
  15. Ustad manzoors advice not upto the islamic principles.Mr.Peace & Mr.Mohammed don't sound like having Islamic knowledge.
    May Allah guide us.

    ReplyDelete
  16. Usthaath Mansoor: I am sorry your Imaan is getting weak. Your advice should have been: Be strong among these calamities not the other way around. These are tests and calamities. An educated person like you never utter these words.

    ReplyDelete
  17. ISLAM is not what SUAID and Pakistan practicing, BUT what Allah and Muhammed (sal) said to us.

    THERE is nothing to compromise in it for the sake of the way your brain thinks.

    So those who try to change things in Islam for worldly issues, Stop your ingnorance... If anything our muslims pracitice against to Quran and Sunnah.. then talk about those things that we have to change.

    Groups of Muslims, who only recruit the people wearing Trousers and Rready to Trim beard. Keep your wrong approach to Islam that you try to teach from your brain alone.

    ReplyDelete
  18. Mr.Mansoor. You 1 st understand the faith of islam...allah may give you the hithaya...

    ReplyDelete
  19. முஸ்லிம்கள் இனியாவது தமது நடத்தைகளை திருத்திக் கொள்ள வேண்டும் இன்னுமின்னும் பிடிவாதங்களைக் கொண்டிராமல் தமது வாழ்வியல் விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். இது ஒரு பௌத்த நாடு . இது சவுதியோ பாகிஸ்தானோ அல்ல. சவுதியில் இருப்பது போல் இங்கு வாழும் எண்ணம் எமக்கு வரவே கூடாது. இஸ்லாத்தை உடையை வைத்தோ தொப்பி ஜீப்பாவை வைத்தோ அளவிட முடியாது. இந்த நாட்டில் எமது முன்னோர்கள் ஆடையைக்காட்டியோ ஜூப்பா தொப்பியைக்காட்டியோ இஸ்லாத்தை வளர்க்கவுமில்லை பாதுகாக்கவுமில்லை. மாறாக கொடுக்கல் வாங்கல்களில் நேர்மையையும் நம்பிக்கையையும் காட்டினார்கள். மாற்றுமதத்தவருக்கு மரியாதை கொடுத்தார்கள். சுருங்கக்கூறின் தமது நடத்தையாலே மாற்று மதத்தவர்களைக் கவர்ந்தார்கள். இன்று சர்வதேச ரீதியாக தொப்பி, ஜுப்பா, கறுப்பாடை ,முழுமையாக உடலை போர்த்திக் கொள்ளும் ஹிஜாப் போன்றவை பயங்கரவாதிகளின் ஆடைகளாக காட்டப்படுகின்றன. இதனை நாம் அணியும் போது மாற்று மதத்தவர் எம்மீது அச்சம் கொள்கிறார்கள். இதற்காக நாம் எமது ஆடைகளை களையத்தேவையில்லை மாறாக எமது முன்னோர்களைப்போண்று நாம் ஒரு பௌத்த நாட்டடில் வாழ்கிறோம் என்ற உணர்வோடு எமது ஆடைகளை அமைத்து அனாவசியமான சந்தேகங்களையும் எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும். உடலை ஆடவரின் பார்வையிலிருந்து மறைப்பதுதான் அவசியமானது அதற்காக கறுப்புத்துணியால் போர்த்திக் கொள்ளத்தேவையில்லை. எம்முன்னோர்களின் முக்காடு அணிந்த சேலைகளையும் சர்ச்சையற்ற அபாயாக்களையும் அணிந்திருந்தார்கள். அவற்றால் எப்பிரச்சனையும் வரவில்லை.
    தெருவுக்குத் தெரு ஒழுங்கைக்கு ஒழுங்கை பள்ளிகட்டுவதை தவிர்hக்க வேண்டும்.
    ஒரு ஊருக்கு ஒரு பன்சலை இருக்கும் போது உரு ஊருக்குள் அதிக பள்ளிகளைக்கட்டுவதை மாற்று சமயத்தினர் சகித்துக் கொள்வார்களா? பிரதான சாலைகளிலும் வீதிகளில் உள்ள பள்ளிகளை கண்களுக்கு குத்துமளவு கவர்ச்சிகரமாக்குவது தேவையற்றது. இதனால் பெரும்பான்மையினர் அச்சப்படுகிறார்கள்
    சென்ற காலங்களில் எல்iலையில் ஓரிரு குர்பானிகள் மிக பேணுதலாக அறுத்து மிக பக்குவமாக கொடுப்பார்பார்கள். ஆனால் இன்று அந்திலை மாறி வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கோடிக்கான பணங்களுக்கு நூற்றுக்கணக்காக மாடுகளை மாற்று மதத்தவர் கண்முன்னே அறுத்து ஆராவாரப்படுத்துகின்றனர்.
    வீதிகளில் ஈத்த மரங்களை நாட்டியும் வீதிகளுக்கு அரபியில் பேர்வைத்தும் இன்னுமின்னும் பெரும்பான்மையினரை ஆத்திரமூட்டுகின்றனர். இப்பிரச்சினைகள் அதிகமாவதற்கு அடிப்படைக்க காரணம் இரண்டே இரண்டுதான் ஒன்று மார்க்கம் பற்றிய தெளிவின்மை இரண்டாவது வெளிநாடுகளில் இருந்து வரும் ரியால்களும் டொலர்களும்.
    எமது சமூகம் மேற்கொண்டும் அலட்சியமாக செயற்படுமாயின் நாம் இன்னுமின்னும் முடக்கப்பட்டு இருக்கின்ற சுதந்திரத்தையும் இழந்து பரிதாபப்படும் நிலையை யாரலும் மறுக்க முடியாது. இனவாதங்களாலும் இனதுவேஷங்களால் எமது நாட்டின் எத்தனை மனித உயிர்களும் உடமைகளும் பறிபோயுள்ளன என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

    ReplyDelete
  20. சிலர் மார்க்கம் செய்வது என்னமோ சேற்றில் நாட்டும் கம்பு போல, காற்று அடிக்கும் பக்கத்துக்கு சாயும்.
    Can you compromise in religion ? I don't think so, History of Surah Kafiroon clearly enlightening us on this issue.

    ReplyDelete
  21. Brother Mohammed, Keep trust in Allah. The More we love this DUNYA... We will come out of Islam for the sake of living in this world and finally will lose in the next world.

    Once your and your ustahad start to change to the society.. where will it end. Already the Sunnah on the face has been trimmed down as per you desires and trousers have come below ankel as per your explanation of moderation in islam. Now you are worrying about Cap, Habaya and Jubba... I feel sorry for your and your ustahad approach to Islam.

    Once Again.. When DAJJAL comes,,, May Allah protect Muslims from your ADVICE. if they listen to your adivices, they will completely come out of isalamic identity.

    May Allah GUIDE us with pure knowledge of Islam.

    ReplyDelete
    Replies
    1. Bro Rasheed I don't think anything wrong in his comment!
      He didn't say to remove the dress or wear less.
      Yes some stupids think that if you wear " Jubba/ Thobe " you are the pioused one. If you ask them they will say it's "sunnah"
      If that's the case when they go to Saudi or any other Arab nation do they use camel horse as their transport ? Because that's also sunnah isn't it ?
      Honestly take one abaya these days, do they really represent the Islamic teachings ?
      It's thinner than paper and clearer than water, sometimes a girl who wears jeans and tshirt looks less attractive than these "abaya girls"
      I think What Mohamed says isn't to change the coulour , wear thick fabrics , no need to wear kameez/jubbah.
      If they come to Russia are they gonna wear those kameez and above Ankle ?
      Having said that we can't compromise on main things, can we shave our beard ? Well it's no ,
      Can we stop giving Qurban .. no
      But whatever we do, the Racism and Hatred is not go down.
      Do be honest now whether whatever you wear, pioused or not they don't care as long as ur a " thambiya" they will target you.

      Delete

Powered by Blogger.