Header Ads



மொரொக்கோவில் அரபு வசந்த, போராட்டம் ஆரம்பமா..?


மொரொக்கோவில், மீன் விற்பனையாளர் ஒருவரின் இறப்போடு தொடர்புடைய 11 பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த இறப்பு பல நகரங்களில் பெரிய அளவிலான போராட்டங்களை தூண்டியிருந்தது.

தற்செயலான கொலை மற்றும் பொது ஆவணங்களை போர்ஜரி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மீன் விற்பவரின் இறப்பை தொடர்ந்து பல நாட்களாக ஆயிரக்கணக்கான மோரொக்கோ மக்கள் போராட்டம் நடத்தினர்

காவல்துறையினர் மீனை பறித்து, தூக்கி போட்ட குப்பை லாரியில் இருந்து மீன்களை மீட்டெடுக்க முயன்றபோது, அந்த லாரியால் நசுக்கப்பட்டு மீன் விற்பவரான மோக்சின் ஃபிக்ரி உயிரிழந்தார்.

அந்த வண்டியில் இருந்த குப்பைகளை நசுக்கும் வசதியை இயக்க ஒரு காவல்துறை அதிகாரி ஆணையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் அரபு வசந்தம் ஏற்பட்டதிலிருந்து காணப்படாத பெரிய அளவிலான போராட்டங்களை இந்த சம்பவம் மோரோக்கோவில் தூண்டியுள்ளது.

1 comment:

  1. Oh Morocon's do not allow this type of problem to spread all over the country. Libyan is an example and it was a good Lesson learned. The vultures are looking for an opportunity distablize a muslim country. Be watchful and try to resolve your problem by negotiating with the country leaders.

    ReplyDelete

Powered by Blogger.