November 24, 2016

இனவாதம் தலைதூக்க, யார் காரணம்..?

-ASHEIKH. S.L.M. IMTHIYAZ-

கடந்த ஆட்சியின்போது முஸ்லிம்களின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு செய்வதறியாது திகைத்து நின்ற போது பலரின் துஆவின் பலனாக அல்லாஹ்வின் அருளினால் ஆட்சி மாற்றத்திற்கு வழி பிறந்ததது. முஸ்லிம்கள் அனைவரும் பிரிவிணைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் ஒன்றுபட்டு சுமூகமான சூழலைத் தோற்றுவித்தனர். முஸ்லிம்களுக்குச் சாதகமான ஆட்சியாளர்களை அல்லாஹ் உருவாக்கினான்.

இதில் குளிர் காய்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சுபீட்சமான வாழ்வை கட்டியெழுப்ப அணி திரளுவோம் என்ற வழமையான வீர மங்கலத்தை மொழிந்தனர். ஒவ்வொரு ஜமாத்தினரும் தமது தஃவா பயணத்திற்கு வாயில் திறக்கப்பட்டதை எண்ணி வெற்றிவாகை சூடினர். நமது இளசுகள் சமூக வலைதளங்களில் வீராப்பு பேசினர். ஜனாதிபதி மைத்திரியின் PHOTO விற்கு தொப்பி அணிவித்து அந்நிய மதத்தினருக்கும் அறிமுகப்படுத்தினர். நல்லாட்சியில் பழைய அரக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அனைத்திலும் பூரண சுதந்திரம் கிடைத்துவிட்ட பெருமிதத்தினால் முஸ்லிம் சமூகமே துள்ளிக்குதித்தது.

காலங்கள் கடந்தன. அரசியல்வாதிகள் ஓரளவேனும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்குவார்கள் என எதிர்பார்த்தோம். அவர்களோ தமது அரசியல் வியாபரத்தைத் தொடர்ந்தனர். தேசியப்பட்டியலுக்காக தேசியபிரட்சினைகளை மறந்தனர்.

உலமாத்தலைமைகளாவது உருப்படியான கைங்கரியத்தை வழங்குவார்கள் என எதிர்பார்த்தோம். நிகாப் வாஜிப் என பத்வா வழங்கி சமூகத்தை பிளவுபடுத்தினர். 

குறிப்பிட்ட ஜமாத்தினர் நாம் தான் செயற்பாட்டாளர்கள் என்பதை நிரூபிக்க அவர்களது அணுகுமுறையையே முற்றாக துறந்து  “முஸ்லிம் தனியார் சட்டத்தில் அந்நிய ஊடுருவல்” என்ற தொனியில் தீவிர எதிர்ப்பு போராட்டத்திற்கு  போர் முரசு தட்டியது.  2009 இல் மீள்திருத்தங்களுக்கு உட்பட்ட ஒன்றிக்கு 2016 இல் கண்டன பேரணி.  இறுதியில் முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகள் என்ற நாமம் சூட்டப்பட காரணமாக அமைந்து விட்டீர்கள்.

போனது போகட்டும்..... இனியும் அரசியல் கட்சி வேறுபாட்டால் , கொள்கை முரண்பாட்டால் , ஜமாஅத் பிரிவிணையால் பிளவுபட்டு சமூகத்தை காட்டிக்கொடுத்திடாமல் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது தனித்துவத்தை , கலாசாரத்தை பாதுகாப்போம்.

முஸ்லிம்கள் சிறிய தொகையினராக இருந்தபோதும் ஒற்றுமையுடன் செயலாற்றியதன் விளைவுதான் வரலாறு நெடிகிலும் வெற்றிகிடைத்தது. முஸ்லிம்களின் ஒற்றுமையில்தான் பலம் இருக்கின்றது.  

முஸ்லிம்கள்  ஒன்று சேர்ந்தால் வரட்சியான காலத்திலும் மழையை பொழிய வைக்கலாம்.

முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்தால் சூரிய , சந்திர கிரகரண பாதிப்பை நிறுத்தலாம்.

முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்தால் ஆராஜக ஆட்சியைக் கூட துடைத்தெரியலாம்.

முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்தால் குழப்பமான நிலைமைகளையும் சீர்மைப்படுத்தலாம்.

அதற்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு, இக்லாசுடன்  செயற்பட்டால் மாத்திரமே இதனை அடையமுடியும். சந்தர்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துவோம்.

7 கருத்துரைகள்:

புதிய ஆட்சியில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தலைதூக்க முஸ்லிம்கள்தான் காரணம் என்பது அடிப்படையில்லாத வாதம் . அப்படி என்றால் முன்னைய ஆட்சியில் இதே இனவாதம் ஏற்பட யார் காரணம் ? இப்பிரச்சினை ஒரு சிறிய இனவாத சிங்களவர்களால் வேண்டுமென்று உருவாக்கப்படதே தவிர இதற்கான காரணம் முஸ்லிம்கள் அல்ல. குறிப்பாக மஹிந்த , கோத்தாபாய போன்றோரின் அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த BBS மற்றும் மற்றய கடும்போக்கு பௌத்த குழுக்கள் . அதுமட்டுமல்ல முன்னைய அரசாங்கம் மற்றும் இந்த கடும்போக்கு குழுக்கள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் மீது கடும் பொறமை கொண்டவர்கள் . இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இதுவே பிரதானமான காரணம். இவ்வாறான ஒரு மனநிலையில் உள்ள சிங்களவர்களை ஒருபோதும் எங்களால் திருப்திப்படுத்த படுத்தவே முடியாது. அவர்கள் சொல்லும் ஒரு விடயத்தை நாம் திருப்திப்படுத்தினால் அவர்கள் இன்னொரு பிரச்சினையை உருவாக்குவார்கள். இதுதான் யதார்த்தம் . ஆனால் இதை சரியாக உணராமல் எமது உலமா சபையும் சில அரசியல்வாதிகளும் இந்த மடையர்களை திருப்திப்படுத்த முயல்கின்றனர் . இது ஒருபோதும் சாத்தியமாகாது.

This writer encouraging the Aasaath Saali, BBS, and 23 Musi+lim koottamaippu....
All the idiots & Black sheep are against the real, against the true, and until now they DON'T WANT TO UNDERSTAND what SLTJ did and why and what they asked during the Nov-03 event...

ஏழு வீதமாக இருந்த முஸ்லிம்கள் எமது கலாசாரத்துடன் கரைந்துவிடுவர் என எதிர்பார்த்திருந்த பௌத்த பெரும்பான்மையின ருக்கு பல தசாப்தங்களாக ஏமாற்றமே எஞ்சியி ருந்தது.
மாறாக முஸ்லிம்களின் தனித்துவ அடையாள ங்கள் நாளாந்தம் விருத்தியடைந்தே வந்தது வருகின்றது.
நகரமத்தியில் அலங்கார பள்ளிவாயல்கள், நவீன கடைத்தொகுதிகள், மாளிகை வீடுகள், ஆடம்பர கார் வாகனங்கள், விதவிதமான ஆடையலங்காரங்கள், தனித்துவமான உணவு முறைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் என அனைத்துமே மற்றவர்களின் கண்களுக்குள் தீமூ ட்டின.
மிக்க்கிட்டிய காலத்தில் இயக்கரீதியாக பள்ளிகளும் மத்ரசாக்களும் அதிகரித்தமையும் கறுப்பு அபாயாக்களுடன் எமது பெண்களும் வெளிக்கிட்டமையும் தீயைத் தீவிரமாக்கியது.
பாழாய்ப் போன இனப்பிரச்சினை காரணமாக எமது மண்ணை மிதித்த மேற்குலகம் ஞானம்சாரா தேர்ர்களைத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதே இன்றைய நிலைக்கான காரணமாகும்.
எனவே நாம் தளம்பாது எமது பயணத்தை சீரிய முறையில் முன்கொண்டுசெல்வோம்

முஸ்லிம்களுக்கு எங்கேயப்பா மாளிகை வீடுகள் இருக்குது?

இலங்கை நாட்டில், மற்றைய இனங்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள்தான் அநேகமானோர் ஏழைகளாக இருக்கின்றனர்.

அகதிகளும் முஸ்லிம்கள்தான் அநேகம்.

பிச்சைக்காரர்களிலும் முஸ்லிம்கள்தான் அநேகம்.

லாபிர் - நீங்கள் உண்மையிலேயே முஸ்லிமா?

i agree with Bro.Riswan Junaideen well said, find out who is problematic in our country and resolved the tension between Sinhalese & Muslims conflict do not mud slash each others, be a strong unity as a Muslims forget about deference's between us

Well said Rizwan Junaideen. The more we try bow down they will keep knocking on our heads.
Do not keep on compromising, we are not cowards and Allah does not like the cowards.
Allah encourage us to fight back without oppressing anyone. Keeping silent All the time is not the Solution.

நகரமத்தியில்.........தொடர்ந்து வாசித்து விளங்கவும் . மீண்டும் பாடசாலை செல்லவேண்டி வராது.

Post a Comment