Header Ads



வனவள திணைக்களத்தால், முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிப்பு - ரிசாத்

வடக்கில் 1990 இல் துரத்தப்பட்டு மீள்குடியேற வந்த மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களின் காணிகள் வனவள திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய வேண்டும் என வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன் கோரினார். சுற்றாடல், விவசாயம், நீர்ப்பாசன அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அவர்,

வடக்கில் மன்னார், மரிச்சுக்கட்டி, மடு உட்பட முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் வனத்துறைக்கு சுவீகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி வாபஸ் பெறப்பட வேண்டும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்கள் ஒரு இலட்சம் பேர் 1990 இல் இடம்பெயர்ந்து மீள 2012 ஆம் ஆண்டுதான் குடியேறினர். இக்காலங்களில் அவர்களது காணி காடாகியுள்ளது. இதன் காரணமாக அவர்களது இந்த பாரம்பரிய காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இக் காணி மீள அம்மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

சபையில் சிலர் இனவாதமாகப் பேசி வருகின்றனர். மன்னாரில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகமொன்று அமையக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். இது நல்லிணக்கத்துக்கு சிறந்ததல்ல என்றார்.

No comments

Powered by Blogger.