Header Ads



அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில், தீர்மானம் எடுக்க நேரிடும் - சம்பிக்க எச்சரிக்கை

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தாமதமதகி வரும் நிலையில், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சம்பிக்க இதனை கூறியுள்ளார்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள் என கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியான நிலைமையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மிகவும் பாதிப்பான சூழல் உருவாகியுள்ளது.

மிகப் பெரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தாது, சிறிய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அது முஸ்லிம்களுக்கு நல்ல செய்தியல்ல. முன்பு தாங்கள் அரசுக்கு வெளியில் இருந்து கொண்டு செய்த அநியாயங்கள் போதாதா? புனித குராஆனுக்கு கூட விழக்கம் கொடுத்தீங்க.
    வெளியே வந்தால் இனவாதத்தால் தான் அரசியல் செய்வீங்க்.

    ReplyDelete

Powered by Blogger.