November 15, 2016

முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான செயலா..?


இலங்கையில் தற்போது பூதாகரமாக்கப்பட்டு வருகின்ற , முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருப்பொருள், முஸ்லிம்களை முழுமையாக அழித்தொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கடைத்தனமான செயலாகும்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்ற இயக்கம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தியுள்ள ஒரு சில பேரினவாதிகள் சமூக வலைத்தளங்களினூடாக - குறிப்பாக முகநூலினுடாக இஸ்லாத்தையும், அல்லாஹ்வையும் படுமோசமாக இழிந்துரைத்துரைத்துக் கொண்டிருப்பதும், அவர்களில் சிங்கள நேயம்மிக்கவன் நான்தான் என்ற தோரணையில் ஒருவன் இனவாதம், மதவாதம் பேசிக் கொண்டு, இஸ்லாமியர்களைப் பூண்டோடு அழிப்பதாகவும், இஸ்லாமியர்களின் பொருளாதாரத்தை முழுமையாக அழிப்பதாகவும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றான்.

விரல் விட்டெண்ணக் கூடிய ஒரு சிலரை மட்டும் கொண்டு தம்பட்டம் அடித்து வந்த அவனுக்கு,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டமானது வாய்க்கு சர்க்கரை போட்டாற் போன்றாகியுள்ளதனால், அவன் பலவாறாக நாளுக்கு நாள் பதிவுகளை இட்டு, சிங்களச் சமூகத்தில் சீரிய வழியில் நடக்கின்றவர்களையும், வீரிட்டெழுந்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆவன செய்வற்காக ஆவன செய்துள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது.

இலங்கையில் நிலை இவ்வாறிருக்க, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையரான சிங்களவர்களும், முகநூலில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் முழுமையாக விமர்சித்தும்,கடுமையாகத் தூசித்தும் வருகின்றனர்.

மேலும், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் கருத்துரைத்துள்ளதோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைச் சேர்ந்த சிலரும்,அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தினரும் கூட கண்டனம் தெரிவித்திருப்பது யாமறிந்ததே.

இது இவ்வாறிருக்க, 

முஸ்லிம்களை எவ்வாறேனும் வம்புக்கு இழுக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற ஒரு சில சிங்களப் பேரினவாதிகள்,  அவர்களின் புனித ஸ்தலங்களிலும், வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களிலும் முஸ்லிம்கள் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கதைகளை இட்டுக் கட்டினர். கடைசியில் ஊடகங்களும், புத்திஜீவிகளும் மேற்கொண்ட முன்னெடுப்பின் காரணமாக அதனது போலித்தன்மை அம்பலத்துக்கு வந்தமையும், பாரிய பிரச்சினைகள் முளைகொள்ளாமல் தடுக்கப்பட்டதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. 

இன்று, இலங்கைத் தேசிய கொடியிலிருந்து சிங்களவர்களல்லாத பிற இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளுடனும், கோஷங்களுடனும் இனவாதிகள் வலம்வருகின்றனர். சிங்கலே என்று தங்களை இனங்காட்டிக் கொண்டவர்களுக்கு இவ்விடயம், பாலில் தேன் கலந்தாற்போல் உள்ளது.

அவர்களுடைய அடுத்த இலக்காக, காத்தான்குடி மீது அவர்களின் பார்வை விழுந்துள்ளது. “காத்தான்குடியை அழிக்க அணிதிரண்டு என்னுடன்” வாருங்கள் என டான் பிரசாத் என்ற நாட்டுப்பற்றற்ற, இலங்கையிலும் இரத்த ஆற்றை பார்க்க ஆசைப்படுகின்ற ஒருவன் அறைகூவல் விடுத்து வருகின்றான். இவனது கோஷம் இவ்வாறாக இருந்தபோதும், அனைத்து இலங்கைச் சிங்களவர்களும் அவனுடன் சேர்வதற்கு கையாலாகாதவர்கள் அல்லர். அவனது கோஷத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடிய மதகுருமார்களும், கல்வியியலாளர்களும், புத்திஜீவிகளும் கூட உள்ளனர்.

இஃது இவ்வாறிருக்க, சிங்களவர்களைக் கிளர்ந்தெழச் செய்து இலங்கை முழுவதும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற நப்பாசையில் அடாவடித்தனங்களும் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. அதற்காக பல்வேறுபட்ட கருமங்களும் ஆற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு கட்டமாகவே, கொழும்பு கோட்டை ஸ்ரீசம்­புத்­தா­லோக விகா­ரையின் புகையிரத பாதையை நோக்­கி­ய­வாறு காணப்­படும் புத்தர் சிலை­யுடன் அச்­சிலை பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருந்த கூட­மொன்றும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது எனக் ஊகிக்கலாம். 

இப்­புத்­தர்­சிலை இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் அக்­கூ­டத்­தி­லி­ருந்து கீழே தள்­ளி­வி­டப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த விகா­ரையின்  விகா­ரா­தி­பதி சாஸ்­ர­பதி விதா­ரந்­தெ­னிய மேதா­னந்த தேரர் தெரி­வித்­துள்ளபோதும், சிங்களவர்களிடையே இதற்கான சூத்திரதாரிகள் முஸ்லிம்களில் ஒரு பகுதியினரே என்பதைக் காட்ட வேண்டும் என்பதே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றவர்களின் கருதுகோளாக இருக்கலாம். என்றாலும் புத்திஜீவிகள் இதுதொடர்பில் தெளிவாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், சூத்திரதாரிகளின் கையாலாகாத வேலைகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதனால், இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கவனமாகவும், தூர நோக்கத்துடனும் செயற்பட வேண்டியது இன்றைய மாபெரும் தேவையாக இருக்கின்றது. 

-கலைமகன் பைரூஸ்-

16 கருத்துரைகள்:

சும்மா sltj யை குரைகூரவானம்
மா்கஸ் மக்களும் முன்வரவேண்டும் அவளுக வரவேமாட்டாங்க

Past govt team also doing with master plan.muslims should PATIENT AND DUA .ENTIRE MUSLIMS PLEASE FOLLOW THIS TWO WEAPONS WE WILL BE IN SUCCESS.

Jaffnamuslim news thabliq மாதிரி இருக்கு jaffna muslim என்ற சொல்லுக்கும் மக்களுக்கும் மருவாதிவைக்கரேன் if not குப்புர குனியவைக்கவேண்டி வரும்

Ayya Kalaimahane... Neengal solvathu ennavo unmayaga irunthaalum.....
SLTJ seitha aatpaattamthan ithatku reason enraal...athu umakku ayokkiyattanama teriyala??
You also joining with idiots...group..

This kalaimahan all meaning that, the SLTJ only created the problems and making trouble in the country. You idiots should realize this first, since several years we/Muslims getting disturbed by racist in all over the country. Are you still asking us to be at home and watch on TV what's going on? If you idiots want to be hideout in your bed room, let you be, don’t blame others, those who come out to fight for our rights democratically.

கலைமகன் பைரூஸ் உங்கள் கட்டுரை முஸ்லிம்களை கவனமாகவும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டும் என்று சொல்லவதை விட தௌஹீத் ஜமாத்தை குறைகூறவே எழுதப்பட்ட ஒன்று என்பதுபோல்தான் உள்ளது.
முஸ்லிம்களின் சொத்துக்களை நாசம் செய்யவேண்டும் , அவர்களை பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைய செய்யவேண்டும் என்பது இன்று உலகளவில் சியோனிஸ்ட்களால் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது.
இலங்கையில் உள்ள ஒவ்வொறு இயக்கவாதிகளும் நினைக்கவேண்டிய ஒன்று என்னவென்றால் உங்கள் தலைவர்கள் ஏன் இஸ்லாத்துக்காக தமது சிறு வேற்றுமைகளை மறந்து , மற்றைய இயக்கங்களுடன் ஒன்றுபட மறுக்கின்றனர். குறைந்தது ஒரு விடயத்திலாவது ஒன்று சேர்நது அறிக்கை விட்டிரிப்பார்களா? ஆகவே இயங்களுக்காக தம்பட்டம் அடிப்பதை விட்டு விட்டு நடுநிலையாக இந்தக்கட்டுரையை எழுதி இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

SLTJiers are trying to cause a big problem for the Muslims in Sri Lanka. It's a pity to learn that the followers of SLTJ still believe that their leaders are in the correct path even after they get to know that their acctivities lead to such problems faced by us nowadays.

Sltj, thablik jamath,ulama sabai adu idu enru wadidamal eppdu idu mulu Muslim samudayamum ethir nokuhira prachinai enru sindittu nam anaiwaraiyum muslimgal enru sintanai waruhirado anru taan widiwu kalam porakum.

Sltj, thablik jamath,ulama sabai adu idu enru wadidamal eppdu idu mulu Muslim samudayamum ethir nokuhira prachinai enru sindittu nam anaiwaraiyum muslimgal enru sintanai waruhirado anru taan widiwu kalam porakum.

MRM Beligest
ஏன் உங்களுக்கு மர்கஸ் மக்களுடன் இவ்வளவு கோபம்? இலங்கையில் பல இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கும் போது ஏன் தப்லீக் ஜமாஅத்தை மட்டுமே சாடுகிறீர்? நீங்கள் எப்போதாவது மர்கஸ் பக்கம் மழைக்காவது ஒதுங்கி இருக்கிறீரா?

உணர்ச்சி வசப்படும் முஸ்லிம் இந்த மார்கத்துக்கு ஒரு நாளும் நன்மையை கொண்டு சேர்க்க மாட்டான். அவனது எதிர்வினைக்கும் முட்டாள் தனத்திட்குமான கூலியை ஒட்டு மொத்த சமூகமும் சுமக்க வேண்டி ஏற்படுகிறது

Mohamed Hafeez: Say that again!

மழைக்கும் ஒதுங்க அருகதையற்ற இடம்
ஒவ்வரு இயக்கங்கலும் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு அமையவே செயல்படுகிரது but ansari thabliqi. கோட்பாடையே புரகனிக்கிரது
நன்மையை ஏவுவதுமூலம் தீமைதானாக அழியுமாம்....இன்னும் பல...
தவ்ஹீத் சகோதர்கள் சொந்தமாக பள்ளியை கட்டி தவ்வத் பண்னுகையில் ஏன் உங்களுகலுக்கு முடியாது.
எல்லா பள்ளிகலையும் கைப்பற்றிக்கொண்டு யாரும் ரிலக்ஸாக தொழமுடியாத நிலை .ஓடி வந்து தஃலீம் சாம்பரானி பிடிக்க நிர்பந்திக்கிரது இது என்ன இந்துக்கொள்கைகள் மத சடங்குமாதிரி...
இதுபோன்ர விடயங்களுக்கு கூடியசீக்ரம் பதில்கிடைக்கும்...வரட்டா mr fajudeen...
உங்கட தீனும் பின்னால so சோசித்து பாருங்க ஓக..
சும்மா இஸ்லாதுக்கு திட்டினால் கோபம் வராது தப்லீக்குக்கு திட்டினால் கோபம் போத்தன வரும் so எங்க .....
மர்கஸ் மர்கஸ் ..
பள்ளிவாசல் அல்லாஹ் வுக்கு ரொம்பவிருப்பமான இடம்
But அதற்காக எல்லா பள்ளிகளையும் நீங்க இருக்க எப்படி ஒரு அடியான் சுதந்திரமாக அமல்செய்வது
ஸவ்திமாதிரி வக்துக்குபிரகு பள்ளியமூடனும் கொஞ்ஞம்காலத்துக்கு அப்பதான் உங்க அமைப்பை இஸ்லாம் என்ன என்று புரியும்..????? அல்லாஹ் தான் நேர்வழியில் சேர்க்கனும்

Mhd fajideen அந்த இடம் கடன்காரா்களும், தொழில் நன்மதிப்புக்களுக்கும்,திருமண நன்மதிப்பு, பொருப்புக்கலை காய்தகர்த, போன்ர பல விடயங்களுக்கு சில பல அயோக்கிய அரக்கர்கள் பயன்படுத்துவது வேதனை ok. ...dear there are more cant mention at here so study islam deeply what say allah in quran. & get to try information that what the reality .

MRM Beligest
நீங்கள் தப்லீக் ஜமாஅத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளீர். அவை,
1.மழைக்கும் ஒதுங்க அருகதை அற்ற இடம்:- இந்த வார்த்தையின் மூலம், நீங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் நீங்கள் ஈமானில் அடி மட்டத்தில் இருக்கிறீர் என்பதை நிருபித்து விட்டீர்.
2.ansari thabliqi இஸ்லாமிய கோட்பாட்டை புறக்கணிக்கிறது:- எனக்கு ansari thabliqiயைப் பற்றி தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்.
3.நன்மையை ஏவுவதன் மூலம்:- தீமையை தீமையைக் கொண்டு அழிக்க முடியாது. தீமையை நன்மையைக் கொண்டுதான் அழிக்க முடியும். அதற்காக தீமையை அழிக்க முயற்சி செய்யக் கூடாது என்று யாரும் சொல்ல நான் கேட்கவில்லை.
4.இன்னும் பல:- குறைகளை சுட்டிக் காட்டுங்கள். நாமும் மனிதர்கள் தானே! குறைகள் இருக்கலாம். நீங்கள் சுட்டிக் காட்டும் போதுதானே திருத்திக் கொள்ள முடியும்.
5.தவ்ஹீத் சகோதரர்கள் சொந்தமாக பள்ளியைக் கட்டி:- எனக்கு தெரிந்த எந்த பள்ளியையும் இங்குள்ள தவ்ஹீத் சகோதரர்களின் சொந்தப் பணத்தில் கட்டியதாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பள்ளியின் பெயரைக் கூறவும்.
6.எல்லாப் பள்ளிகளையும் கைப்பற்றிக் கொண்டு:- இது உங்கள் பொய்யான குற்றச்சாட்டு. எல்லாப் பள்ளிகளிலும் எங்கே தப்லீக் நடக்கிறது. சில பள்ளிகளில் ஸலாம் கொடுத்தவுடன் உடனே பள்ளியை விட்டு கிளம்பிவிடும் கூட்டத்தை நீங்கள் சில பள்ளிகளில் காணவில்லையா?
7.ரிலக்ஸாக தொழ முடியாத நிலை:- இது எந்த கருத்தில் சொன்னீர்கள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
8.சாம்பிராணி பிடித்து இந்து மதத்தைப் போல:- இது உங்களது அவதூறு. அல்லாஹ்வே போதுமானவன்.
9.கூடிய சீக்கிரம் பதில் கிடைக்கும்:- காலத்தில் சிறந்தது நபி(ஸல்) அவர்களது காலம். சிறந்த காலமானது காலம் செல்லச் செல்ல குறைவடைந்து கொண்டு செல்லும் என்பது நபி மொழி.
10.இஸ்லாத்திற்கு திட்டினால் கோபம் வராது:- இதுவும் உங்களது அவதூறு. அல்லாஹ்வே போதுமானவன்.
11.எப்படி சுதந்திரமாக அமல் செய்வது:- உங்களது எந்த அமலை யார்? எங்கு? தடுத்தார்கள்?
12.ஸவ்தியில் பள்ளியை மூடுவதைப் போல:- நபி(ஸல்) அவர்களது காலத்தில் பள்ளியை மூடியா வைப்பார்கள்?

சகோதரரே! உங்களுக்கு குறைகள் மட்டும் தான் விளங்குகிறது போல. உங்களுக்கு தப்லீக் ஜமாஅத்தினால் ஏற்பட்ட நன்மைகள் தெரியாது போல. அல்லது உங்களது உள்ளம் அதை வெளிப்படுத்துவது இல்லை போலும்.

MRM Beligest
நீங்கள் மர்கஸ் பக்கம் போகாததால் அதைப்பற்றி பிழையாக விளங்கி வைத்துள்ளீர். நாளை இன்சா அல்லாஹ் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து எல்லா மர்கஸ்களிலும் பயான் நடைபெறும். நீங்களும் அதில் கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வியாழன் இரவும் இவ்வாறு பயான் நடைபெறும். உங்களுக்குப் பிடித்தால் தொடர்ந்து வரலாம். நாளை தவறினால் அடுத்த வியாழனாவது கட்டாயம் வாருங்கள்.

Post a Comment