Header Ads



முஸ்லிம் பெண்களின் திருமண, வயதெல்லையை மாற்ற வேண்டுமா..?

-அஸ்செய்க் ஹாதி மற்றும் முஹம்மத் ஜான்சின்-

இள வயது திருமணம் தொடர்பான சர்ச்சை உருவாகியிருக்கும் நிலையில் பல கருத்துக்கள் உருவாகி வருகின்றன , இதில் என்ன முடிவுக்கு வரலாம் என்பதில் மூடல் தன்மை கொண்ட கருத்துக்கள் நிலவுகின்றன , பெரும்பாலனவர்கள் இதில் விட்டுக் கொடுப்புடன் நடப்பதில் தவறில்லை என்கின்றனர் , திருமண வயதின் எல்லையை 18 ஆக முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்வதுதான் தற்போதைய பன்முக சூழலில் உசிதமானது எனும் கருத்தையும் முன்வைத்து வருகின்றனர்
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இள வயது திருமண முறையில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு , அவ்வாறான மாற்றத்தை வேண்டி நிற்பது பல வகையில் இஸ்லாத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றாகும் ; இதற்கான காரணங்களை இங்கே தரலாம் என நினைக்கிறேன்
1- நபி ( ஸல் ) ஆயிஷா நாயகியை 6 ல் மணந்து 9 ல் சேர்ந்தார்கள் என்பது அன்னை அவர்களே கூறும் உறுதியான செய்தியாகும் , அந்த வகையில் நாம் இங்கு சில முடிவுகளுக்கு வர முடியும்
= இள வயது திரு மண முறை என்பது மனிதன் கொண்டு வந்த சுய நலச்சட்டமல்ல , மாறாக இது " ஹுக்முன் ஸமாவி " இறை சட்டவியலின் அனுமதியாகும் . இறைவன் அனுமதித்ததை தடை செய்ய எவனுக்கும் அதிகாரமில்லை
= இறைவன் ஒன்றை அனுமதித்து விட்டால் அந்த அனுமதியின் முன்பக்கமோ பின் பக்கமோ வலதோ இடதோ எந்தக் கோளாரும் வர வாய்ப்பே இல்லை , அவ்வாறு இறை சட்டத்தில் குறை பட்டுக் கொள்வதும் நெருடலை வளர்ப்பதும் ஈமானுக்கு ஆபத்தானது
= இறைவன் ஸூரா தஹ்ரீமின் ஆரம்ப வசனத்தில் " இறைவன் ஹலாலாக்கியதை நீங்கள் ஏன் தடுத்துக் கொள்கிறீர் " என கண்டிப்பதும் இதற்கு கட்சிதமாக பொருந்தக் கூடியது எனலாம்
2 - இன்று உலக அரங்கில் ஐனா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட பூப்படைதல் வயது எல்லை 18 ஆகும் , குறித்த வயதெல்லையை அடையும் ஒருவன் மீதே சட்டங்கள் அமுலாகும் என்பதாகும் , இவ்வாறான வயதை அடையாத ஒருவனுக்கு பெரும்பாலும் குற்றவியல் சட்டங்கள் அமுலாகுவதில்லை , இதனால் உலகம் முழுவதும் மனித விரோத செயற்பாடுகள் நிறம்பியுள்ளன என்பது தனி விடயம் . உண்மையில் இவ்வாறான ஒரு சட்ட ஒழுங்கிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது , இன்னும் சொல்வதானால் இது தாகூத்தின் சட்டமே தவிர இறை சட்டமோ நியதியோ கிடையாது , இங்கு நான் சுட்ட வருவது என்னவென்றால் மனித தாகூத்தின் சட்டங்களுக்காகவும் அழுத்தங்களுக்காகவும் அல்லாஹ்வின் அனுமதியை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டுமா ?
3 - திருமண வயதின் எல்லையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதன் பின்னணியில் இருக்கும் மட்டகரமான புரிந்துணர்வுகள் ஆபத்தானவை , அதாவது இன்றைய சிவில் சட்ட முறைமையானது இஸ்லாத்திலுள்ள இள வயது திருமண முறை பெண்கள் மீதான பிடியை அழுத்துகிறது , கொடுமை செய்கிறது , பாலியல் வன்முறையை தூண்டுகிறது , எனவே மதத்தின் பிடியிலிருந்து பெண்ணை பாதுகாத்து உலகியல் நாத்திக நியதிக்குள் தகவமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது , இவ்வாறான ஒரு நிலையில் நாம் விட்டுக் கொடுப்பது இஸ்லாத்தின் மீதுள்ள எமக்குள்ள மறைமுக எரிச்சல் நிலையையே உணர்த்துகிறது
4 - நபிகளார் இள வயது ஆயிஷா நாயகியை மணந்தார்கள் , அந்த வகையில் இன்று நிர்ப்பந்திக்கப்படும் மேற்கத்திய கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக நாமே நபி மீது சுமத்தாட்டுவதாக அமையும் , அதாவது நபி (ஸல் ) பெண் துஷ்பிரயோகத்தில் ஈடு பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை நாமாக ஏற்றுக் கொண்டதாகிவிடும் , அல்லாஹ் பாதுகாப்பானாக , முஹம்மத் நபியை விட இவ்வுலகில் தூய்மையான மனித உரிமை பேணிய எவனும் கிடையாது
5 - எமது நாட்டில் அதிகமானவர்கள் இப்போது இள வயதில் திருமணம் செய்து கொடுப்பதில்லைதான் , அதற்காக அல்லாஹ்வின் அனுமதியை தாரை வார்க்க முடியாது , அடுத்து தற்போது இள வயது திருமணங்கள் குறைந்து வருவதற்கான காரணம் மக்கள் மேற்கு மயப்பட்ட சிந்தனா வாத செல் நெறிக்குள் உந்தப்பட்டு வருவதுதான் என்பதை நாம் புரிய வேண்டும் , அதாவது பெண் சுதந்திரம் பற்றிய கோணல்கள் நிறைந்த அதீத பெண் சுதந்திர வைரஸ்கள் இன்று முஸ்லிம்களையும் தாக்கி வருவதன் பின்னணியில்தான் இன்று முஸ்லிம்களும் இள வயது திருமணங்கள் மீது எரிச்சலடைந்து வருகிறார்கள் , மாறாக இங்கு பலரும் இஸ்லாத்தின் முடிவை கணக்கில் கொள்வதில்லை , இதுவும் ஒரு வித மறை முக குப்ரின் மாற்று வடிவம் எனலாம் ; 16 பிள்ளைகள் பெற்று சந்ததியை பெருக்கி கல்விமான்களாகவும் உத்தமர்களாகவும் இருந்த எமது அப்பா மார் காலத்திற்கு சென்றால் முஸ்லிம் மக்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இருக்காது , ஆனாலும் தற்போது உலகம் மாறி சுற்றுகிறது , முஸ்லிம்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் கூட தற்போது ஓடி ஒழிந்து சுதந்திரம் பேசும் சட உலக நியதியாகிக் கொண்டிருக்கிறது
6 - இதை விட பாரதூரம் இன்று இலங்கையில் வேகமாக இயங்கி வரும் இஸ்லாமிய நடத்தை வாத சிந்தனைகளாகும் , இள வயது திருமண அனுமதியை விட்டுக் கொடுக்கும் முன் யோசனையை இவ்வகுப்பு முன்வைத்து வருகிறது , பன்மைத்துவ ஒழுங்கில் இவ்வாறான விட்டுக் கொடுப்புக்கள் எமது இருப்பை உசிதமாக்கும் என்பதே இதன் பின்னணி , மாறி வரும் கருத்துலகில் கலாச்சார நடத்தை பாங்குகளுடன் இசைந்து செல்வதும் சக வாழ்வை கட்டி எழுப்புவதும் சிறந்தது என இவர்கள் பேசி வருவதை பலரும் உணர்கிறார்களோ இல்லையோ நான் அதை உணர்கிறேன் . உண்மையில் சமூக இயங்கியல் நிலையை கருத்தில் கொண்டு இஸ்லாத்தின் தர்க்க யதார்த்தத்தை விட்டுக் கொடுப்பது எமது ஈரலை அறுத்துக் கொடுப்பதற்கு சமன் என்பதே எனது நிலைப்பாடு ; இஸ்லாம் மௌனித்த விவகாரங்களை முஸ்லிம் சமூக நலன் கருதி பெரும்பாண்மையுடன் இசைவதில் நான் ஒரு போதும் முரண்படவில்லை , ஆனால் இறைவன் அனுமதித்த அனுமதி ஒன்றை மூர்க்கத்தனமான குப்ரிய்யத்தான கும்பல் குலாமின் ஆசா பாசங்களுக்காகவும் அவர்களது செயல் வாதங்களுக்காகவும் ஒரு முஸ்லிம் விட்டுக் கொடுக்கவே முடியாது ; அவ்வாறு விட்டுக் கொடுப்பது எமது சுதந்திரத்தின் மீதான அசிங்கமான பிடியாகும்
7 - இவ்வாறான் அகீதாவின் வேர்களிலிருந்தே எந்தவொரு தீர்மானத்திற்கும் நாம் வர வேண்டும் , மேற் கூறப்பட்ட சில எண்ணக்கருக்களில் உறுதி பேணும் ஒருவர் நபிகளாரின் திருமணம் தொடர்பான குறித்த விடயத்திலிருந்து சில சாதகமான விளக்கங்களை உய்த்துணர்ந்து பேச இடமுண்டு ; நபிகளாரின் திருமண நிகழ்விலிருந்து எம்மால் ஒரு சில முடிவுகளுக்கு வர முடியும்
= ஆயிஷா நாயகியுடன் ஆறு வயதில் நபிகளார் திருமண ஒப்பந்தத்தை செய்த போதும் அவருடன் இறை தூதர் உடல் ரீதியாக இணையவில்லை , இந்த நிகழ்வு எமக்கு பல் வேறு உண்மைகளை துலக்குகிறது
1 - இள வயது பெண்ணை வெறும் கட்டில் சுகத்திற்காக மட்டும் திருமணம் செய்ய வருவது கூடாது , அதை ஒரு போதும் இஸ்லாம் விரும்பாது
2 - இள வயதிலுள்ள ஒரு பெண்ணின் எதிர் கால பாதுகாப்பு நலன் கருதி திருமண ஒப்பந்தத்தில் ஈடு படலாம் , அன்னை ஆயிஷா ரழி உலகத்தரம் வாய்ந்த மிக உயர்ந்த ஆளுமை என்பதால் இறைத்தூதர் ஆயிஷா நாயகியின் சிறு வயதிலேயே பாரிய அரணையும் , பெண் பாதுகாப்பையும் உறுதி செய்தார்கள் ; இவ்வாறு ஒரு பெண்ணை அவளது பெண் பதுமை மற்றும் முக்கியத்துவம் கருதி ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்வதில் பல நன்மைகள் இருக்கலாம்
3 - அந்த வகையில் பாலியல் எதிர்பார்ப்பில்லாத அதே நேரம் எதிர்கால காத்திரமான நலன் கருதி இள வயது திருமணத்தை இஸ்லாம் ஆகுமாக்கியிருக்கலாம்
= அடுத்து நபிகளார் ஆயிஷா அம்மையாருடன் தனது பத்து வயதின் ஆரம்பத்திலிருந்தே குடும்ப யதார்த்தமாக வாழ ஆரம்பித்தார்கள் , இதிலிருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம்
1 - திருமண ஒப்பந்தத்தின் பின் நபி ஸல் அவர்கள் நான்கு ஆண்டுகளாக இணையாமலிருந்ததில் இருந்து நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் பெண் உடலியல் தன்மை மற்றும் பெண் விவேகம் பொறுப்புணர்வை பேணியுள்ளார்கள் என்பதை உணரலாம்
2 - நபிகளாரின் இந்தத்தாமதம் ஒரு செயலாகும் , செயல் என்பது பல்வேறு விளக்கங்களுக்கும் பொருந்தும் ஒன்று , இதற்கு" الفعل محتمل " என்பார்கள் ; இறை தூதர் ஆயிஷா நாயகியுடன் பல நாட்கள் தாமதித்த பின் இணைந்திருப்பது நபிகளார் ஆயிஷா நாயகியின் குடும்பத்தகமைக்கு பொருத்தமான நேரம் வரும் வரை பொறுத்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது , இதிலிருந்து பின்வரும் முடிவுகளுக்கு நாம் வரலாம்
1 - பக்குவப்படாத பெண் பிள்ளையுடன் அவளது நலன் கருதி திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடலாம் , ஆனால் உடலியல் ரீதியான தொடர்பாடல்களை தவிர்க்க வேண்டும் ; ஏனனில் அவ்வாறுதான் நபிகளார் நடந்துள்ளார்கள்
2 - பெண் பக்குவப்பட்டு பூப்பெய்து விவரமுள்ள நிலையை அடைகிற போது தாம்பத்தியத்தை பேணலாம் , ஏனனில் அவ்வாறுதான் நபிகளார் நடந்துள்ளார்கள்
3 - ஒரு பெண்ணை எப்போது எந்த நேரத்தில் தாம்பத்தியத்திற்காக சேர்த்துக் கொள்ளலாம் என்பது பொதுவாக விடப்பட்டுள்ளதால் அதில் மனித சமூக நலன் கருதி , பெண்ணின் உடல் மற்றும் பொறுப்பு போன்ற தகமைகள் கருதி மனித வசதிக்கேற்ப அமைத்துக்கள்ளலாம்
மேலே உள்ள சில எண்ணக்கருக்களின் படி இஸ்லாம் எவ்வகையிலும் இள வயது திருமணத்தின் மூலம் பெண்களை அடிமை படுத்தவில்லை என்பதை உணரலாம் , ஆனால் இறைவனின் அனுமதியை ஒரு போதும் நீக்க முடியாது
இறுதியாக இக்கற்றுரையின் நோக்கம் இள வயது திருமண முறையை கட்டாயப்படுத்துவதல்ல , மாறாக மார்க்க அனுமதியை மாற்றக்கூடாது என்பதற்காக மாத்திரமே !


நடைமுறையில் என்ன சிக்கல் என்றால் பெண்களின் மட்டுமல்ல ஆண்களின் திருமண வயதும் பின்போடப் பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணி நாட்டில் காணப் படும் கல்வித் திட்டமாகும்.   சாதாரண தரம் படித்து முடிக்கும் போதே 16 வயது முடிந்து விடுகின்றது.  உயதரம் படித்தால் அந்த வயதெல்லை 19 ஆகிவிடுகின்றது. பல்கலைக் கழகம் சென்றால் அந்த வயதெல்லை 24 ஐத் தாண்டிவிடுகின்றது.  

1900 மாம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில்  பெண்களின் திருமண வயது 11 இக்குக் குறைவாகவே காணப் பட்டுள்ளது. 1950 வரை இந்த திருமண வயது 11 முதல்  13 ஆகக் காணப்பட்டுள்ளது. இந்த பின்னடைவுக்கு காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களும் திண்ணைப் பாடசாலைகளை கைவிட்டு அரசாங்க பாடசாலைகளை உருவாக்கி அங்கு கல்வி கற்ற போது பெண்களின் திருமண வயது பின்போடப் பட்டது. இந்த ஆரம்ப காலத்தில் அதிகமான ஊர்களில் பெண்கள் தரம் ஐந்து வரை அல்லது எழுத வாசிக்க தெரியும் வரையே கல்வி கற்றார்கள். மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் காலத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதால் முஸ்லிம் ஆண் பெண் இருபாலாரும் என்.சீ.ஜி வரை கல்வி கற்பது அவசியமாகியது. இது தான் பின்னர் 19 ,20 வயதாகியது. 

எனவே 1950 இக்கு முற்பட்ட காலத்தில் பெண்களின் பாடசாலை செல்லும் விகிதம் மிகக் குறைவு. அதனால் வீட்டிலிருந்த பெண்கள் சமையல் கலை தையல் கலை போன்றவற்றை தெரிந்து கொண்டு குடும்பத் தலைவிக்கு இருக்க வேண்டிய தகுதியுடன் 11 வயது முதல் காணப் பட்டனர். மேலும் அவர்களின் வாழ்க்கை முறை தற்போதுள்ள முறையிலும் முற்றிலும் மாறுபட்டது. ஆண்கள் ஏழு வயது ஆனாலே  தந்தைக்கு உதவியாக தொழிலுக்கு செல்லும் காலம் அது. அதே பொன்று பெண்கள் உடுப்புக் கழுவுதல் தாயின் ஏனைய சிறுபிள்ளைகளை பராமரித்தல் என்று வாழ்ந்த காலமது.  எனவே அக்காலத்தில் பெண்கள் 10 அல்லது 11 வயதைத் தாண்டிவிட்டால் திருமணம் முடிக்கத் தகுதியான கன்னிகள் அல்லது கன்னிப் பெண் என்றே அழைக்கப் பட்டால். இப்பொது இந்த வயது 19 ஐத் தாண்டியுள்ளது. பதினொரு வய்து கன்னிப் பெண்ணுக்கும் 15 முதல் 10 வயது வரையான ஆணுக்கும் திருமணங்கள் நிறைவேற்றப் பட்டன. 

அப்போதுள்ள 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கன்னிகளாக அல்லது குமர்களாக கருதப் பட்டார்கள். அவர்களின் பக்குவம் அப்படியிருந்ததௌ. தற்கால கல்வி முறைகளால் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் வயது 19 ஆக இருக்கின்றது. 

ஆப்ஹானிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தற்காலத்தில் கூட திருமண வயதெல்லை ஆண் பேண் இருபாலாருக்கும் 13 முதல் 15 ஆகக் காணப் படுகின்றது.

இந்த வகையில்  தான் ஆயிஷா நாயகி அவர்கள் 13 வயதில் குடும்பம் நடத்த தகுதியானவராக இருந்தது நோக்கப் படல் வேண்டுமே அல்லாது அக்காலத்தில் 11 வய்து பக்குவத்தையும் அனுபவத்தையும் இக்காலப் 11 வயதுடன் ஒப்பிடக் கூடாது. 

எனவே பெண்களின் திருமண வயதெல்லையை சட்ட ரீதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

15 comments:

  1. Good opinion and fact article.1the world muslims ummah facing challenges in entire world.2islam religion always getting attack from yahoodi nasarani munafiq
    3.every muslim countres not following islamic law. Because lake of imaan.
    4.yahoody succeed of this matter.
    5.they have dominate many fitna (against shariya)in every arab countries ex syria iraq libiya entire arab countries.
    6.only srilanka remain following sariya and islamic envorntment in this country.
    7.therefor our enemy targating our country in present situation proofing that.
    8.in the future we will face many challenges and problems in this country.
    9.our sri lankan muslims should have unity with diversity.the ACJU Trying to do good things for our ummah.many people they dont understand kind of matter.
    10.yahoodi devide our publics and ulama in the arab countries.they succeed.same thing yahoodi have Going to do same plan in our country.this is 10000%true.
    11.please go back to arab countries past situation and learn how they public and ulama devided by yahoodi and munafiq.may allah help our ummah to be unity.ONLY UNITY CAN BE SUCCESS.OTHER WISE WE WILL SPOILED OUR WHOLE LIFE

    ReplyDelete
  2. Yes. Good message to the people's. Appreciated. There is no exceptions in the law of Allah. We believe there is a reason for every orders of Allah. So, we should unite every Muslims to fight against this issue. But we should not be devided for groups while fighting in such community based issues. We must unite.

    ReplyDelete
  3. Neenga enna soola vareenga..arguement and conclusion has no relation at all.

    ReplyDelete
  4. This is what SLTJ has told to the public and to the government already...
    You people opened your eyes now....?
    Really I can not understand what is ARIPPU to all of us if SLTJ tell about anything which is correct and good for the Muslims...????

    ReplyDelete
    Replies
    1. Brother! In my point of view, The problem is not the protest but the way they protested (SLTJ). A group should not represent to a protest for a community based issue. Because the rulers may neglect the purpose of the protest. So in this regard, we should unite everyone under Quran and sunnah to fight against injustice. Everybody should unite not a group.

      Delete
  5. மாஷா அல்லாஹ் நல்ல விடயங்கள்,பகிரப்பட்டுள்ளது எவ்வாறான முறையில் யார் சிந்தித்தாலு குர்ஆன் சுன்னாஹ்வுக்கு பாதகமான எந்த சட்ட அமுலாக்கல்களுக்கும் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க முடியாது.

    ReplyDelete
  6. இவ்வாறான பிற்போக்கு சிந்தனை உள்ள அங்கத்தவர்கள் எம் சமூகத்தில் இருக்கின்றவரை அல்லாஹ் எதிர்பார்கின்ற இஸ்லாத்தின் மேலாதிக்கத்தை நாம் அடையமாட்டோம். திருமனத்திட்கான வயதெல்லையை நிர்ணயிப்பது எந்த வகையிலும் ஷரீஅத் சட்டத்தை கொச்சை படுத்துவதாக மாறாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஆகுமாகிவிடமாட்டது. நாயகம் (ஸல்) அவர்கள் 11 பெண்களை திருமண செய்துகொண்டார்கள். குறிப்பாக நபிகலாரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் தங்களுக்கும் பொருந்தும் என்ற நிலைபாட்டில் முஸ்லிம்கள் இருந்துவிடக் கூடாது. திருமணம் செய்துகொல்வதற்கு திட்டவட்டமான வயதெல்லையை இஸ்லாம் எந்த இடத்திலும் வலியுறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கை திட்டம். மனிதவாழ்வின் அணைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்று உரத்துச் சொல்கின்ற மார்க்கம் இஸ்லாம். இள வயதுத் திருமணம், குறிப்பாக பெண் பிள்ளைகளை இள வயதில் திருமணம் செய்து வைப்பது சமூகத்துரோகம் என்ற சர்வதேசப் பார்வையில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஏனெனில் இளவயதில் திருமணம் செய்துகொண்ட பெரும்பாலான பெண்களின் குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கின்றது. தங்கள் வயதை ஒத்தவர்கள் ஏனைய சமூக நலத்துரைகளில் பிரகாசிப்பதை பார்த்து மனநோயாளிகளாக மாறியுள்ள, திருமணம் செய்துகொண்ட பெண் பிள்ளைகளை பற்றி கேள்விப்படுகின்றோம். இளவயதுத் திருமணத்தில் சமூக நலனை விட தீங்குதான் அதிகம் என்ற வகையில், பெண்பிள்ளைகளின் சரீர, உள வளர்ச்சியை கருத்தில் கொள்வதை விட, சமூக மேம்பாட்டுக்கு அவர்களால் வழங்க முடியுமான பங்களிப்பை செய்வதற்குரிய திறமைகளை அடைந்து கொள்வதற்கான சந்தர்பத்தை வழங்கியதன் பின்பு, அவர்களை திருமண பந்தத்தில் இணையவைப்பதே சாலத் சிறந்ததாகும். எனவே 18 வயதை திருமணத்துக்கு பொருத்தமான வயதாக நிர்ணயிப்பபதை பிழைகாண முடியாது.

    ReplyDelete
  7. First of all, the objective of the demonstration is not in line with the Objectives of Shariah. Why? It is simply because; this demonstration contradicted the general characterization of the objective Shariah and its origins that are emphasized in the Holy Quran. In addition to the aforesaid, it also dismantled the classification, integration and the structure of the Shariah’s objectives as well.
    Endorsing 12 years for girls to involve in marital engagement is nothing to do with Shariah and no where it is prescribed under Shariah law. However, by way of Ijtihad, we should prescribe a legal age for girls to marry; considering the legal minimum age of consent for marriage, legal minimum age for marriage with parental consent, whether minors under the minimum legal age can marry with parental and judicial consent, legal minimum age of consent for sexual activity and etc.
    Education is a mandatory obligation of Muslims which is denied by early marriage causing number of complications to female partner including psychological conditions. Educating the individual is another important objective of the Shariah too. It is through educating the individual that the Shariah seeks to realize most of its Social objectives. The overall purpose of a great deal of the laws and values of the Shariah, especially in the spheres of worshipping and moral teaching, is to train an individual who is mindful of the virtues of piety and becomes an agent of benefit to others. It is very obvious that under age marriages will not support to meet this unique expectation of Shariah.
    In general, any action by Muslims individually or collectively should be predicated on the benefits of the individual and that of the community, and the Shariah laws are designed so as to protect these benefits and to facilitate improvement and perfection of the conditions of human life on earth.
    Hampering normal life is against Sharia. Another core objective of Shariah law is to establish justice, eliminate prejudice, and alleviate hardship. The laws of the Qur’an and the Sunnah also seek to promote cooperation and mutual support within the family and the society at large. Justice itself is a manifestation of God’s mercy as well as an objective of the Shariah in its own right.
    The placards displayed under the shadows of women and children are serious blow to Shariah Compliance. Muslims who understand the Quran and the hadith believe that Shariah expresses the highest and best goals for all societies. It is the will of Allah. But promoting the Shariah by wrong means at a wrong place can propel negative consequences which is the case of SLTJ rally. My bottom line is that we do not need benchmark demonstrations to defend our Shariah but promoting our unique etiquettes through practice will definitely create an atmosphere to self-load the same island wide Isnhaa Allah.
    The objective of Shariah is not to gain self-pride and reputation by a particular group. No one can deny that few extremist organizations are operating within Muslim society. SLTJ is an example. The conduct of these extremist groups have also led certain sections of the Buddhist society to react in a violent manner towards Muslims. Efforts of self-pride and reputation by such groups truly endangered the existence of Muslims in Sri Lanka.
    Building a peaceful and just society is another objective of Shariah whereas demonstrations of this kind bound to cause Intimidation and detrimental to national unity and harmony. Hence, it is naturally meaningful to understand the broad outlines of the objectives of the Shariah, prior to executing any program or event in the name of Islam and or Muslims, and only prominent individuals who bear an adequate knowledge of the Shariah equipping with insight and theoretical framework should involve in decision making level.

    ReplyDelete
    Replies
    1. Absolutely a broad-leaved view brother. Appreciated. But I have question. Who will define the mutured age? We cannot define the mutual age is to be 18 or 20. That's why Quran says whoever eligible to The marriage that people's can Proceed unless perform fasting.
      Why not it might be for many reasons.
      So, we cannot define an age level. But we should agree for an age which is eligible and suitable. Ex. The parents should understand the eligibility of a daughter by the deferences of her physical activities. This must considered by our Muslim community.
      Anyhow we are not authorized to change a single word of Allah. Allah Akber.

      Delete
  8. Well, do Muslims posses the knowledge to answer a non Muslim questioning them 'Hey, is it true you prophet was proposed to a 6 year old girl and married her at the age of 9?'

    If they don't, then their priority is to get out there and study Islam before they do their research or even get to the road and protest over a silly question- "Should the age limit for Muslim marriage be legalized?"

    and then ask themselves-

    - "Do Muslims have a voice of their own in Sri Lanka? or are they making some empty noise only to make fools of themselves? "

    - "Should my UMMA fall for the enemy's agenda or should they really find the answers to all those silly questions?"

    - "WHAT IS MY PRIORITY IN A COUNTRY LIKE SRI LANKA THAT AT LEAST TURNING INTO RACIST AND THIRST FOR MUSLIM BLOOD? HAVEN'T MY UMMA FALLEN FOR THE ENEMY'S AGENDA ENOUGH ALREADY??

    ReplyDelete
  9. Even Hindusim also encourage child marriage in its religious verses, but we have to consider the current time. On those days girls are not allowed to study or word like present days. Science is advancing so many ways, our messengers ( Hindu) use animals as their vehicles on those days, are we the same now? Change is the only thing that can be changed.

    ReplyDelete
  10. Mr.Marikkar, you speak the truth..100%

    ReplyDelete
  11. சிறப்பான கட்டுரை. இதுவே எமது நிலைப்பாடும். மேலோட்டமாக பாா்த்தால் இது பிற்போக்குவாதமாகவும் தூரநோக்கற்றதாகவும் தெரியலாம். ஆனால் அது இறைவனின் அனுமதி. இறைச்சட்டம் எல்லாக் கால, இட, சமுதாயத்துக்கும் ஏற்புடையது. இளவயதுத் திருமணத்தை நாம் மிகப்பெரும்பான்மையாக நடைமுறைப்படுத்துவதில்லை. அதை வலியுறுத்தவுமில்லை. ஆனாலும் ஒருவருக்கு அதற்கான தேவையும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு விட்டால் அதற்கு இஸ்லாம் வழங்கிய வாசலை(சலுகையை) மூடிவிட வேண்டாம்.

    உதாரணமாக,
    14/15 வயது யுவதியின் பெற்றோரும் முக்கிய உறவுகளும் அனா்த்தத்தில் இறந்து விடுகின்றனா்.யுவதியை பராமாிக்க நம்பிக்கையானோா் யாருமில்லை. சிறந்த இளைஞன் உள்ளான், அவனுக்கு சிறந்த பொறுப்புணா்ச்சியுள்ள பெற்றோருமுண்டு. இந்த மகனை மேற்படி யுவதிக்கு திருமணம் செய்து கொடுக்கவும் விரும்புகின்றனா். இக்கட்டத்தில் இந்த யுவதிக்கு எது பாதுகாப்பானது ?

    தடைச்சட்டம் இயற்றப்பட்டால் இப்படி அதற்கான தேவையும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு விட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டாலும் பள்ளி நிருவாகம் உட்பட சம்பந்தப்பட்ட யாவரும் சிறையிலடைக்கப்படுவா். நமது கையால் நமக்கெதிராக,,

    ReplyDelete
  12. இக் கட்டுரையை பாராட்டுகின்றேன். ஆனாலும் நடைமுறை சாத்தியமற்றது. அப்படி ஆனால் மரணதண்டனையை அமுல்படுத்தலாமே.

    ReplyDelete

Powered by Blogger.