Header Ads



அப்பாவிகள் உயிரிழப்பது சாதாரணம் - பஷார் அல் அஸாத்


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிகள் உயிரிழப்பது சாதாரணம் என அந்நாட்டு ஜனாதிபதி சிரித்துக்கொண்டு பதிலளித்துள்ளார்.

சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள் உள்ளிட்டவர்கள் உயிரிழப்பது குறித்து சிரியா ஜனாதிபதியான பஷார் அல் அஸாத்திடம் நேற்று கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்போது, ’உள்நாட்டு யுத்தத்தில் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிகள் உயிரிழந்து வரும்போது உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறதா?’ என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கேள்வியை கேட்டதும் அஸாத் வாய்விட்டு சிரித்துள்ளார்.

பின்னர், ‘உங்கள் கேள்விக்கான அர்த்தம் எனக்கு புரிகிறது. நான் ஒவ்வொரு நாளும் நிம்மதியாக தூங்குகிறேன். நன்றாக சாப்பிடுகிறேன். ஓய்வு நேரத்தில் விளையாடுகிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

யுத்தம் நடைபெறும்போது அப்பாவிகள், குழந்தைகள் உயிரிழப்பது சாதாரணம். இதற்கு நாம் என்ன செய்ய முடியும். நம்மால் இயன்ற வரை உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

இந்த உயிரிழப்புகளை பார்த்து கண் கலங்க நாம் ஒன்றும் தொண்டு நிறுவனம் நடத்தவில்லை. ஒரு நாட்டை ஆட்சி செய்து வருகிறோம்.

யுத்தத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு தீவிரவாதிகள் தான் காரணம்’ என ஜனாதிபதி அஸாத் பதிலளித்துள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குழந்தைகள் உள்ளிட்ட 4,254 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. அட அசாத் - பிர்அவ்னும் தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இப்படித்தான்டா குழந்தைகளைக் கொன்று குவித்தான்.

    என்ன குற்றத்திற்காக அக்குழந்தைகள் கொல்லப்பட்டது என்று வினவப்படும் அந்நாளில் - உன் நிலையோ மிகக் கேவலமாக இருக்குமே - பிரஅவு்னுடன் உனது இருப்பிடமும் அந்த நிரந்தர நரகத்திலா ??????????? சிந்திக்க மாட்டாயா அசாத்தே .........

    ReplyDelete
  2. அவ்வளவு சாதாரனமாமக நீ செத்தொழிய மாட்டாய், நீ பிச்சையெடுத்து சாவாய்!
    ஷியா காஃபிரே

    ReplyDelete
  3. Barbaric Aasth you will be punished by Allah .

    ReplyDelete
  4. உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிரதா ஆஸாட்

    ReplyDelete
  5. யா அல்லாஹ் கொடிய தலைவர்களின் ஆளுகைகளை விட்டும் முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக...

    ReplyDelete

Powered by Blogger.