Header Ads



முஸ்லீம் திருமண பிரச்சினைகள், புதிய ஆய்வுத்தகவல் வெளியாகியது

இலங்கையில் அமலில் உள்ள இஸ்லாமிய திருமணம் மற்றும்  விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இலங்கை அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் 1951ம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்துக்கும் உட்படாத இந்த திருமண சட்டத்தினால் இலங்கையில் முஸ்லீம் பெண்கள் முகம்கொடுக்கும் கஷ்டங்களையம் அவலங்களையும் வெளிப்படுத்தும் விரிவான அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

 இலங்கையின் முஸ்லீம் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பெண்கள் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்டிருக்கும்  61 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை முஸ்லீம் சமூகத்தில் நிலவும் திருமணம் சார்ந்த பிரச்சினைகளையும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் முறையாக ஆவணப்படுத்தியுள்ளது.

"சமத்துவம் அற்ற பிரஜைகள்-  நீதிக்கும் சமஉரிமைக்குமான இலங்கை முஸ்லீம் பெண்களின் போராட்டம்"  என்ற தலைப்பில் பெண்கள்  தொடாபான  ஆராய்ச்சியாளர்   ஹிஷாமா  ஹமீன், மற்றும் சட்டதனியும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான  ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் ஆகியோரால் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, முஸ்லிம்கள் பரவலாக வாழும் பகுதிகளில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை முஸ்லிம்களின்  திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் உள்ள பிரச்சினைகள், அதை அமல்படுத்தும்  விதம், அந்த சட்டத்தின் சமூக தாக்கம், பாதிப்புகள் என்று பல்வேறு பிரச்சினைகள் இந்த ஆய்வறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது. காதி நீதி மன்றமும் அதனை சார்ந்த செயல்பாடுகளிலும் உள்ள குறைகள் இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன .

 14 வயது மட்டுமேயானா கிழக்கு மாகாண பெண் பிள்ளை  அவரின்  விருப்பத்துக்கு மாற்றாக திருமணம் செய்து வைக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட விளைவுகள், என்று ஆரம்பித்து பல்வேறு உதாரணங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 விவகாரத்தின் போது  காதி ( இஸ்லாமிய விவாகரத்து  நீதிமன்றம் ) பெண்களை நடத்தும் விதம் அவர்களின் உரிமைகள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்றும் இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஆழமாக புதைந்து கிடக்கும் ஒரு பிரச்சினையை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மிக இளம் வயதில் நடக்கும் திருமணங்கள், வரதட்சணை சார்ந்த பிரச்சினைகள் என்று பல சமூக அவலங்களை இந்த அறிக்கை நிரூபிக்கிறது.  முழு அறிக்கையையும் இங்கே படிக்கலாம் https://drive.google.com/file/d/0Bzyi8GJfqXRHSEpYeVR5Nnp3dkU/view

6 comments:

  1. இலங்கையில் அதிகமான விவாகரத்து முஸ்லிங்களுடையது
    அதிகூடியகாரணம் பெண்கலின் தூரநோக்கற்ரதும் ஆண்களின் பாரபற்சதும் பொருபற்ற பண்பும்

    ReplyDelete
  2. Very good effort and much appreciated. There is no question that MMDA needs amendments/ upgrades within the framework of Sharia. My question is that why didn't these ladies give a copy of this work to the ACJU and other Muslims institutions in the first instance. Did they send this work to the UN or any other international organisation? These ladies should let the community know about this.

    ReplyDelete
  3. ACJU? HA! HA! HA! The joke of the century.

    Now, Why ACJU is it a body formed by Allah or The Prophet

    What were they doing re: MMDA? Had they done their part would these have come to rescue?

    "First Last" Pls answer.

    ReplyDelete
  4. That's why SLTJ Tolked Above that ladies Organization , That Time ACJU Sleepy. im not a SLTJ Supporter

    ReplyDelete
  5. Do you think our community leaders unaware about the burning issues related to Muslim marriage law? I had worked as ADR in a Muslim DS division, the Quazi court there had no discipline at all and I used to receive numerous complains, they are not willing comply with existing law even. They functioned totally reckless.

    ReplyDelete
  6. @Mannar Muslim, Islam tells us to obey to your leaders in any circumstances. Therefore, we have to listen to them ACJU in the first place. Are you aware of this rule in Islam??
    "Obey Allah and obey the Messenger, and those of you who are in authority"
    أَطِيعُواْ اللَّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِى الاٌّمْرِ مِنْكُمْ

    ReplyDelete

Powered by Blogger.