Header Ads



அழிந்து போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக உருவெடுத்து கடல் நீரில் சேர்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

48 நாடுகள் கூட்டமைப்பில், Afghanistan, Haïti, Philippines, Bangladesh, Honduras, Rwanda, Barbados, Kenya, Saint Lucia, Bhutan, Senegal, Burkina Faso, Madagascar,South Sudan,Cambodia,Malawi, Sri Lanka, Comoros, Maldives, Sudan, Costa Rica, Marshall Islandsza, Tanzania, Democratic Republic of the CongoMongolia, Timor-Leste, Dominican Republic, Morocco, Tunisia, Ethiopia, Nepal, Tuvalu Fiji, Niger, hanuatu, Ghana, Palau, Vietnam, Grenada, Papua New Guinea, Yemen, Guatemala உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன

No comments

Powered by Blogger.