Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கும், அரசை கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டம்.

GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.11.2016 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் SLTJ அம்பாறை மாவட்டம் நடத்திய அவசர செயற்குழு  ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளையில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் அம்பாறை மாவட்ட தலைவர் சகோ. A.M முபீன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் “அவசர செயற்குழுவின் நோக்கம்” தொடர்பில் ஜமாஅத்தின் மாவட்ட பொருளாளர் சகோ.M.S.M. பைசால் ஆரம்ப உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல் கபீர் அவர்கள் “முஸ்லிம் தனியார் சட்டம் என்றால் என்ன?” என்பது பற்றியும், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு மற்றும் GSP ப்லஸ் வரிச் சலுகை என்றால் என்ன? அதனால் நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கும்? GSP + வரிச் சலுகைக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் எவ்வித காரணமும் இன்றி அரசாங்கம் முடிச்சுப் போடுவது ஏன்? போன்ற விபரங்களை தனியார் சட்ட விதிமுறைகள் மற்றும் மார்க்க நிலைபாடுகளை ஒப்பிட்டு விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 03.11.2016 அன்று தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக முஸ்லிம் மக்களை ஒன்றுகூட்டி எதிர்வரும் 11.11.2016ல் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடாத்தவுள்ளதாக குறித்த செயற்குழுவில் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தங்களை கிளை நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி   அவசர பொதுக்குழு நிறைவு பெற்றது.

1 comment:

  1. Meendrum oru muray Gnaana saararukku challange panni ungaludeyya weeraththay niroopikka mudiyuma???

    ReplyDelete

Powered by Blogger.