Header Ads



கால் பந்தாட்டக்குழு மொத்தமாக, இஸ்லாத்தில் இணைந்தது

ஆப்பிரிக்க நாடான கேமரூன் கால்பந்து அகாடமியில் 20 வயது இளைஞர்கள் குழு ஒன்று சேர்ந்தது. அவர்களில் 23 பேரைத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதகாலப் பயிற்சிக்காக துபை நாட்டுக்கு அகாடமி அனுப்பிவைத்தது.

பயிற்சிக் காலம் முடிந்தபின் இக்குழுவின் கேப்டன், எங்கள் குழுவினர் அனைவரும் இஸ்லாத்தில் இணைய விரும்புகிறோம் என்று அறிவித்தார்.

‘இஸ்லாம் டுடே’ இணையதளம் தெரிவித்திருப்பதாவது: 

மார்க்க நற்பணி மன்றங்களின் அமைச்சக ஆலோசகர்களில் பெரியவரான ஜாவித் கதீப் கூறினார்: இந்த இளைஞர்களோ விளம்பரத்திற்காக விளையாடும் வீரர்கள். இப்போது அவர்களின் அடிப்படை இலட்சியம் இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்வதாக மாறியிருப்பது புதிராகும்.

கால்பந்து வீரர்களில் ஒரு முழு குழுவினர் இஸ்லாத்தில் இணைவது இதுவே முதல்முறையாகும். வீரர்கள் மட்டுமன்றி, விளையாட்டு ஏற்பாட்டாளர்களும் மனஅமைதியையும் சாந்தியையும் தேடி அலைகிறார்கள். அவர்கள் தேடிய அமைதி அவர்களுக்கு இஸ்லாத்தில் கிடைத்தது.

விளையாட்டு மைதானத்தில் ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமிடம் எப்படி நடந்துகொள்கிறார்; மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறார் என்பதை அவர்கள் நேரில் பார்த்தனர். (அல்அலூகா)

நன்றி – கான் பாக்கவி


10 comments:

Powered by Blogger.