Header Ads



வெளிநாடுகளில் உள்ள. இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அமைச்சரவையும் பச்சைக் கொடி


வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய முறையை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரல தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு மங்கள சமரவீர தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தங்கி தொழில் புரியும் தொழிலாளர்களுக்காக இந்த ஓய்வூதிய யோசனையை செயற்படுத்தவும் அதற்கான சட்டங்களை கொண்டு வரவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தேவையான வகையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சம்பந்தமான சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக அமைச்சர் தலதா அத்துகோரல முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. What is the status of citizens who have been employed in the middle-east all their life time and have return to the Island couple of years back.?

    ReplyDelete

Powered by Blogger.