Header Ads



'முஸ்லிம் சட்­டத்தை திருத்துவதில் ­சிர­மங்­கள் ஏற்பட்டது, அதனாலேயே காலதாமதம்'

-ARA.Fareel-

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு பல சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­பட்­டது. அத­னா­லேயே இதற்குப் பல வரு­டங்­களைச் செல­விட வேண்­டி­யேற்­பட்­டது.

கால­தா­ம­தத்­திற்­கான கார­ணங்கள்  நாம் சமர்ப்­பிக்­க­வுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என முஸ்லிம்  விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார். 

ஓய்வு பெற்ற  நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள  குழு முஸ்லிம்  விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்குப் பல  வரு­டங்கள் எடுத்­து­விட்­டன.

நான் நீதி­ய­மைச்­ச­ராக  இருந்த காலத்தில்  சிபா­ரி­சு­களை விரை­வு­ப­டுத்­தும்­படி  கோரியும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ள கருத்து  தொடர்பில் வின­வி­ய­போதே குழுவின்  தலைவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.

சலீம் மர்சூப்  தலை­மை­யி­லான  குழு 2009 ஆம் ஆண்டு அப்­போதை நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் நிய­மிக்­கப்­பட்­ட­தாகும். 

தொடர்ந்தும் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப்  கருத்து  தெரி­விக்­கையில்;
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய  திருத்­தங்கள் தொடர்­பான அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது. எதிர்­வரும் 27 ஆம் திகதி அறிக்­கையில் குழு உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­படும். 

அறிக்­கையை  நீதி­ய­மைச்சர் விஜே­தாச 
ராஜபக் ஷவிடம் கைய­ளிக்கும்  திகதி இது­வரை  தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.  முஸ்லிம்  சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எமது அறிக்­கையைப் பார்­வை­யிட வேண்­டு­மென கோரி­யி­ருக்­கிறார். அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம்  கைய­ளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில்   மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் பற்­றிய எமது சிபா­ரி­சு­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அறிந்­து­கொள்ள விரும்­பு­கி­றார்கள்.

அதனால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பின் பின்­னரே அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­படும். 

முஸ்லிம் விவாக,விவா­க­ரத்து சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்று  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சரவை உப குழுவிலுள்ள முஸ்லிம்  அமைச்சர்கள் குறிப்பிட்ட  சட்டத்தில்  மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை சலீம் மர்சூபின் அறிக்கையை ஆராய்ந்த பின்பே சிபாரிசு செய்யவுள்ளனர். 

3 comments:

  1. Are there any good scholars involved in this work? Who would have made correction fearing Allah.

    Corrections are to be welcome if they were against to shareea Rules, But I hope there will not by any changes on things that were accord to shareea rules already.

    May Allah Guide us in correct path followed by salaf us saliheens.

    ReplyDelete
    Replies
    1. brother.. Corrections are to be welcome if they were in conformity with Sharia rule (not against). Please review your sentence.

      Delete
  2. Mr. Saleem....
    We can believe this report, when you explore after the Minister Saagala informed to the Media....
    But you late and waked up after the SLTJ did that event...then How we can trust this and any issues will take this much years....to do some correction in the law available so long...?
    Don't joke the public...pls....!

    ReplyDelete

Powered by Blogger.