November 07, 2016

வசீம் தாஜுடீன் கொலை விசாரணை, மூடி மறைக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, வாகனம் தவறாக பயன்படுத்தியமை, கொடி கம்பம் கொள்வனவு செய்தமை, கரம் போட் பகிர்ந்தமை போன்ற சில்லறைத்தனமான குற்றசாட்டுகள் பின்னால் துரத்துவதனால் பாரிய மோசடியாளர்கள் தப்பித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வார இறுதி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுன்னார்.

பாரிய ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காகவே பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு உருவாக்கப்பட்டது. தனிப்பட்ட பிரச்சனை அல்லது நிறுவனங்களின் முகாமைத்துவ பிரிச்சினை, பணிப்பாளர் சபை பிரச்சனை, நிறுவனங்களின் நிதி நெருக்கடி ஆகியவை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவு உருவாக்கப்படவில்லை.

அந்த நிறுவனத்திற்கு தற்போது கிட்டத்தட்ட 400 சம்பவங்கள் விசாரிக்கப்படவுள்ளதாக நான் நினைக்கின்றேன். அரசாங்க நிதி மற்றும் சொத்துக்களை தவறாக பயன்பத்தியமை தொடர்பிலான விசாரணைகளுக்கு முதன்மை வழங்கப்பட வேண்டியதே எங்களுக்கு அவசியம். அதனை தான் அந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

எனினும் வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றமையினாலே எங்கள் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. ஏனைய நிறுவனங்களும் அதேபோன்று தான். இலஞ்ச மற்றும் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் நல்லவர்கள். அவர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுகின்றார்கள். எனினும் அதன் ஊழியர்கள் இதனை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நேர்மையாகவும் பக்கச்சார்பின்றியும் செயற்பட வேண்டும். அதுவே எனது விமர்சனம்.

கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திற்குள் பேசியுள்ளோம். கீழ் மட்ட அதிகாரிகள் அவ்வாறே செயற்பட வேண்டும். பாரிய ஊழல் மோசடி விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றே நான் இன்றும் கூறுகின்றேன்.

டுபாய் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான விசாரணை தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக எவன்கார்ட் கப்பல் அரசாங்கத்தின் பொறுப்பில் காலி முகத்திடலில் உள்ளது. அதில் உள்ள ஆயுதங்களின் இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எனினும் தற்போது அதற்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை. நாங்கள் கப்பலை பார்த்துக் கொள்வது மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. வசீம் தாஜுடீன் தொடர்பிலான விசாரணை மூடி மறைக்கப்பட்டுள்ளது. 27 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இடையில். எனக்கு மேலும் பல உதாரணங்களை வழங்க முடியும். மக்களுக்கு இவ்வாறான விடயங்களை அறிந்துக் கொள்வதே அவசியம்.

மக்கள் அறிந்துக் கொள்வதற்காக நான் இந்த விடயங்களை பகிரங்கமாக பேச வேண்டும். விசாரணை நிறுவனங்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பது எங்கள் அவசியம் அல்ல. நாங்கள் தான் அதனை உருவாக்கினோம். அவர்கள் பக்கசார்பின்றி செயற்படுவதே எங்களுக்கு அவசியம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

7 கருத்துரைகள்:

Correct Statement... But we have a question ! Yes can't the President Use his power to solve this ?

மைத்திரிபால இந்த நாட்டின் ஜனாதிபதியா அல்லது எதிர்க்கட்சி தலைவரா? என்ன பேச்சு இது ..

Yes you are correct but the biggest culprit in all this cases of Mig and Avenguard case is Gotabaya.Now he is your close friend and wanted to take to your party SLFP.Now you are going against those who are supported and want to protect those who wanted to defeat you.

இவர் எங்காவது போய் இடக்கு முடக்க பேசிட்டுதான் வருவார்.அது நாட்டில் ஒரு மாதம் ஓடும்.

Who has executive power? Since you are executive president why you can't use your power on these regards? This is called escaping politics...don't think that people are mad,blind,deaf and dumb...

He is a typical Grama Sevaka who has failed in all aspects (controlling his son, party and the country).

Post a Comment