Header Ads



மன்னர் சல்மான், டிரம்புக்கு வாழ்த்து - இஸ்ரேலின் உண்மையான நண்பராம் டிரம்ப்

இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு எதிராக அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபட்டிருக்கும் மத்திய கிழக்கு தொடர்பாகவும், இரானுடன் தொடர்ந்து நிலவும் பதற்ற நிலை தொடர்பாகவும் உள்ள வெளியுறவு கொள்கைதான் டொனால்ட் டிரம்ப் முன்னுரிமை அளிக்கும் வெளியுறவுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கும்.

எந்தவொரு நாடும் இதுவரை மேற்கொண்ட ஒப்பந்தங்களியே மிகவும் மோசமான ஒப்பந்தமாக இருப்பதாக கடந்த ஆண்டு இரானோடு மெற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஆனால், ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி, இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய கிழக்கில் பாதுகாப்பையும், ஸ்திரதன்மையையும் கொண்டு வருவதில் வெற்றியடைய இரானின் பிராந்திய போட்டி நாடாக இருக்கின்ற சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான், டிரம்புக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, இஸ்ரேலின் உண்மையான நண்பர் டிரம்ப் என்று விவரித்திருப்பது உற்சாகமான மறுமொழியாக அந்நாட்டிலிருந்து வந்திருக்கிறது

No comments

Powered by Blogger.