Header Ads



தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக, அறிக்கை விடுவோர் சாதித்தது என்ன..?

-ஹிபா மாவனல்லை-

பொது பல சேனாவுக்கு எதிராக தௌஹீத் ஜமாஅத் பேசுகிறது என்பதை கண்டித்து நேற்றைய தினம் இலங்கையின் 23 முஸ்லிம் அமைப்புகள் (தௌஹீத் ஜமாஅத் – SLTJ தவிர) இணைந்து ஒரு அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளன. இந்த அமைப்புகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் நாம் தெளிவான சில செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.

23 அமைப்புகள் இன்று இணைந்ததைப் போல் இதற்கு முன்பாகவும் இணைந்து இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த அத்தனை அறிக்கைகளும் தௌஹீத் ஜமாஅத் என்கிற ஒரு அமைப்புக்கு எதிராக வெளியிடப் பட்டவைகள் தான். மற்றபடி பொது பல சேனாவை கண்டித்து எந்த அறிக்கையுமோ அல்லது ஞானசார தேரரை கண்டித்து எந்த அறிக்கையுமோ இவர்கள் இது போல் கூட்டு சேர்ந்து 23 அமைப்புகள் வெளியிட்டதில்லை.

இதற்கு காரணம் என்ன? இவர்களின் நோக்கம் என்ன? இவர்கள் இதனால் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?

தௌஹீத் ஜமாஅத் என்கிற அமைப்பு கடந்த 03.11.2016 அன்று கொழும்பில் GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து ஆயிரக் கணக்கான மக்களை ஒன்று சேர்த்து மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினமும் (11.11.2016) சம்மாந்துரை நகரிலும் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தௌஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்த ஆர்பாட்டங்களின் பின்னர் தான் GSP+ சலுகைக்காக தனியார் சட்ட திருத்தம் செய்யக் கூடாது என்று உலமா சபை கூட அறிக்கை விட்டுள்ளது. அதுவும் வெரும் அறிக்கை மாத்திரமே அன்றி வேறு எந்த நகர்வும் இல்லை.

இன்று தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விட்ட 23 அமைப்புகள் கூட GSP+ சலுகைக்காக தனியார் சட்ட திருத்தம் செய்யக் கூடாது என்று கோரி எந்த ஆர்பாட்டத்தை செய்யவும் இல்லை. எந்தவொரு அறிக்கை கூட விட வில்லை. நிலைமை இவ்வாறிருக்கும் போது தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விடுவதற்கு மாத்திரம் இவர்கள் ஒன்று சேர்வது ஏன்?

ஒன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் GSP+ க்காக கை வைப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் குரல் கொடுக்கும் தௌஹீத் ஜமாஅத்தை போன்ற அமைப்புகளுக்கு துணையாக இருக்க வேண்டும். துணையாக இல்லா விட்டாலும் பரவாயில்லை. மௌனமாகவாவது இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் விட்டு விட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைப்பவர்களை எதிர்த்து ஆர்பாட்டம் செய்யும் தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விட்டு இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? அல்லது யாதை திருப்திப் படுத்த நினைக்கிறார்கள்? அரசாங்கத்தையா? ஐரோப்பிய ஒன்றியத்தையா? அல்லது அல்லாஹ்வை கேவலப்படுத்தும் பொது பல சேனாவையா? யாருக்காக தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து இந்த அறிக்கை?

இன்றும் சரி என்றும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் வந்த போதெல்லாம் தைரியமாக முன் வந்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தது தௌஹீத் ஜமாஅத் தான் என்பதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்க முடியாதே! யார் எந்த அமைப்பையும் சார்ந்திருக்கலாம் ஆனால் நல்லவைகள் யார் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இன்று தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விட்ட இந்த 23 அமைப்புகள் இது வரை என்ன சாதித்தார்கள்? இந்த சமுதாயத்திற்கு இவர்களினால் நடந்த நன்மைகள் என்ன? இவர்கள் செய்த நல்லவைகளையும் தௌஹீத் ஜமாஅத் செய்தவற்றையும் உரசிப் பாருங்கள் அப்போது யார் இந்த சமுதாயத்திற்காக பாடுபடுபவர்கள் என்பது தெரியும்.

தம்புள்ளை பள்ளி உடைக்கப்பட்டது அப்போதும் இவர்கள் வெரும் அறிக்கை போராளிகளாகவே இருந்தார்கள். ஆனால் தௌஹீத் ஜமாஅத் பள்ளி உடைப்புக்கு எதிராக கொழும்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது. இனசென்ஸ் ஒப் முஸ்லிம் – என்ற பெயரில் நபியவர்களை கேவலப்படுத்திய திரைப்படம் வெளியிடப்பட்டது அப்போது இவர்கள் மௌனம் காத்தார்கள். தௌஹீத் ஜமாஅத் அதற்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டத்தை கொழும்பில் நடத்தியது. பலஸ்தீன் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள் அந்த நேரம் இந்த 23 அமைப்புகள் எங்கிருந்தன. எந்த திருமண விருந்தில் இருந்தார்கள்? தௌஹீத் ஜமாஅத் மாபெரும் ஆர்பாட்டத்தை அறிவித்து நடத்தியது. இறுதியில் நடந்தது என்ன? இஸ்ரேலுக்கு எதிராக அப்போதைய மஹிந்த அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தது.

அது மட்டுமா? ஆர்பாட்டம் நடந்து வெரும் 2 மணித்தியாளங்களில் 10 மில்லியன் பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் என்று அப்போதைய இலங்கை அரசு அறிவித்தது. இதற்கெல்லாம் யார் காரணம் 23 அமைப்புகளா? அல்லது தௌஹீத் ஜமாஅத் என்கிற ஒரு அமைப்பா? இன்றும் இலங்கையில் இரத்த தானத்தில் முதல் இடத்தில் இவ்வமைப்பே இருக்கிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் பல இடங்களில் இவ்வமைப்பின் இரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த 23 அமைப்பில் எத்தனை அமைப்புகள் இரத்த தானத்தில் தௌஹீத் ஜமாஅத்தின் அளவுக்கு முன்னிற்கிறார்கள்?

அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது ஒரு இரத்த தானத்தை செய்வது. அதிலும் இந்த 23 அமைப்பில் சில அமைப்புகளின் கருத்துப்படி இரத்த தானம் செய்வது ஹராம். இந்த நிலையில் இருந்து கொண்டு தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விடலாமா? நாட்டின் சக வாழ்வு பற்றி இவர்கள் தங்கள் அறிக்கையில் பேசியிருக்கிறார்கள். இந்த சக வாழ்வு விஷயத்தில் இவர்கள் என்ன முன்னெடுப்புகளை செய்தார்கள்? சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் செய்திகளை இவர்கள் கொண்டு சேர்த்தார்களா? அதற்கு இவர்கள் செய்த முயற்சி என்ன?

தௌஹீத் ஜமாஅத் சிங்கள் மக்கள் மத்தியில் இஸ்லாத்தை கொண்டு சேர்ப்பதற்கு செய்யும் முயற்சியில் 10 வீதத்தையாவது இவர்கள் செய்தார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். இவ்வாறான நிலையில் இவர்கள் எப்படி தௌஹீத் ஜமாஅத்தை குறிவைத்து அறிக்கை விட முடியும்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான பதில்களை இவர்கள் முன்வைத்து வருகிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் இது கடும் வரவேற்பைப் பெற்றுள்ளது. (பார்க்க…)

கடந்த வருடம் கொழும்பில் சிங்கள மொழியில் அல்-குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிட்டதின் மூலம் சிங்கள் மக்கள் மத்தியில் குர்ஆனின் செய்திகளை கொண்டு சேர்க்க பெரிதும் பாடுபட்டார்கள். குர்ஆனின் மொழியாக்கம் மாத்திரமன்றி சுமார் 500க்கும் அதிகமான விளக்க குறிப்புகளையும் அதில் இணைத்திருக்கிறார்கள். இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் அனைத்து குற்றச்சாட்டுக்குமான பதில்கள் அதில் அடங்கப் பெற்றிருக்கின்றன. தினமும் கிளைகள் மூலம் அரச அதிகாரிகள் முதல் சாதாரண மாற்று மத பொது மக்கள் வரை சிங்கள குர்ஆனை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அறிந்த வரை இதுவரைக்கும் சிங்கள மொழி பேசும் மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமான சுமார் 18 க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். ஆகவே, சக வாழ்வு பற்றிய அறிக்கைகளை மாத்திரம் வெளியிட்டு விட்டு தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பேசி விட்டோம் என்ற நிம்மதி பெருமூச்சு விடுவதினால் இந்த சமுதாயத்திற்கு எந்த நலவும் ஏற்படப் போவதுமில்லை. உங்கள் அறிக்கைகளினால் அவர்களின், தௌஹீத் ஜமாஅத்தினரின் பயனத்தில் தடை ஏற்படப் போவதுமில்லை.

மாறாக நீங்கள் யார்? என்பதை இப்போது சாதாரண மக்கள் புரிந்து கொண்டார்கள். உங்கள் இயக்கம் சார்ந்த ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் உங்கள் அறிக்கையை ஆரோக்கியமானதாக சொல்ல வில்லை. வெரும் அறிக்கை போராளிகளாக மாத்திரம் இராது 23 அமைப்புகளும் சேர்ந்து முடிந்தால் GSP+ சலுகைக்காக அரசு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைப்பதை எதிர்த்து போராடுங்கள். தௌஹீத் ஜமாஅத்திற்கு முறையாக ஆர்பாட்டம் செய்யத் தெரியாது என்று பேசுவதை விடுத்து இந்தப் பிரச்சினையில் 23 அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு ஆர்பாட்டத்தை முறைப்படி செய்து காட்டுங்கள். உங்கள் ஒற்றுமையும், பலமும் இவ்வுலகுக்கே வெளிப்பட்டு விடும்.

தம்மால் முடியாத ஒன்றை இன்னொருவனால் செய்ய முடியும் என்றால் அதனால் சமுதாயத்திற்கு நலவுகள் கிடைக்கிறது என்றால் இயக்க வேறுபாட்டை தவிர்த்து அதனை ஆதரியுங்கள் இல்லையென்றால் எதிர்த்து கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாகவாவது இருந்து விடுவதே சமுதாய தலைவர்களுக்கு நல்லது என்பது எனது பணிவான வேண்டுகோள் ஆகும்.

23 comments:

  1. எடுத்ததுக்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் என்று இருந்தா யாரும் மசுருக்கும் கணக்கு எடுக்கமாட்டங்கள்.பிரச்சினை எதுவும் வந்தால் அதற்கு சில முறைகள் இருக்கின்றன அந்த முறைகளை அணுகி அவற்றுக்கான தீர்வை காணவேண்டும்.இந்த தௌஹீதிகாரங்கள் மாதிரி பெண்களையும் பிள்ளைகளையும் பாதைக்கு இழுத்து கொண்டு கத்தினாள் அந்நியர்கள் எங்களையும் வெறுத்து எம் சமூகமும் வெறுப்பார்கள்.

    We no need thowheed group any help.

    ReplyDelete
    Replies
    1. சஹோதரரே எடுத்ததற்கெல்லாம் எங்கு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்? இங்கு பிரச்சினை ஆர்ப்பாட்டம் அல்ல அதை செய்த தவ்ஹீத் ஜமாஅத் தான் இவர்களின் கொள்கை பிடிக்காத இந்த லெட்டர் பேட் இயக்கங்கள் சமூக நலனுக்காக எப்போதுமே ஒன்று சேராவிடினும் சக முஸ்லிம் இயக்கம் என்று பாராமல் எதிர் பார்த்து காத்திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது என்று சந்தோசத்தில் இவர்களை பிர மத சஹோதரர்களிடம் காட்டிக் கொடுத்து அவர்கள் நல்லவர்கள் போல வேசம் போடுகின்றனர். Sltj ஆர்ப்பாட்டம் செய்ய முன்னாளே அசாத் சாலி இந்த தலைப்பிலான ஒரு ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் நடாத்தினார் ஆனால் அதற்கு எதிராக எவரும் வாய் திறக்க முடியவில்லை, sltj வின் ஆர்ப்பாட்டத்தில் மாற்று மத போதகரை விமர்சித்த விதத்தை குறை கண்டால் அதை திரித்துக் கொள்ளுமாறு கூறி அறிவுரை செய்யும் விதமாக ஏதாவது ஒரு தலைமை அறிக்கை விட்டிருக்கலாம் அல்லது அவர்களை அழைத்து கண்டித்திருக்கலாம், மியன்மார் முஸ்லிம் சமூகம் எந்த குற்றமும் செய்யாமல் புத்தர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் ஆனால் அவை உலகிற்கு வெளிக் காட்டப்படுவதில்லை காரணம் அவர்களுக்கு என்று எந்த மீடியாக்களோ சக்தி வாய்ந்த வெளிப்படையாக இயங்கக்கூடிய பிரச்சினை குறித்து வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் எந்த இயக்கங்களும் இருக்க வில்லை நாங்கள் அடங்கி அடங்கிப் போனால் எங்கள் சமூகத்திற்கும் அதே நிலமை வெகு தூரத்தில் இல்லை, அதற்கான சில சேம்பல்கள் தர்கா தவுன் கொழும்பு போன்ற இடங்களில் ஒத்திகை பார்த்து விட்டார்கள் அதனால்தான் சிறுபான்மை மக்களாகிய நாம் எமது பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இப்படியான ஆர்ப்பாட்டங்களை நடாத்தி நாங்கள் விழித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று இந்த இனவாதக் குழுக்களுக்கு விளங்க வைக்க வேண்டும். நீங்கள் எதுவும் செய்யாமல் நாங்கள் நல்லவர்கள் அமைதியாக இருக்கிறோம் என்று சொன்னாலும் காவிகள் விடமாட்டார்கள் துரத்திக் கொண்டே இருப்பார்கள்.

      Delete
  2. Buddhist community in Sri Lanka, they love to hit the streets and engage themselves in demonstrations.

    Tamils went a step further and battled for decades only to lose blood and lives and they still believe that their 'Ealam' is on the way.

    We Muslims are different from them, we follow a totally different faith and we don't hit the streets and do all that nonsense. We 'battle' for our rights differently. Battle for the rights- not like a donkey that demonstrates on the street!

    The whole world out there is on a mission to exploit Islam/Muslims and drag them into mud for political gains and we all keep falling for that so pathetically.

    The more we recognize these agendas and ignore, the better we are going to perform, especially in a country like Sri Lanka where Muslims make only about 10%. By the way, what do these 10% of Muslims return to their country- a question every Muslim needs to ask themselves.

    SLTJ has been doing a wonderful job, however, they have fell off the track with all that demonstrations lately, I suppose.

    ReplyDelete
  3. Yes, the brother outlines many things to review about current Muslim groups in Srilanka.

    ReplyDelete
  4. Children below 10 years old holding banners.what the hell is this.does those fellows know what they have written

    ReplyDelete
  5. Iwarhal enna jihaad seydawarakal pola pesukirakal. Ungalay Wida BBSum wayaala kilikkiraarkal. Wella niwaraanaththayum iraththa kaththatheyum waiththu theeya warkalay nallawarkal enru sonnal BBS aday saydu nallawarkalaaki viduwaarkal. Ungalay vida Dhajjal suwarkaththeyye konduwaruwaan. Awanum nallawana?

    ReplyDelete
    Replies
    1. ஜிஹாத் என்றால் என்ன என்பதை முதலில் படியும். வாள் ஏந்துவது மட்டும்தான் ஜிஹாதா?
      என்ன சொல்ல தஃலீம் கிதாபில் fairy tale stories வாசித்தால் இப்படித்தான்.

      Delete
  6. ஹிபா அவர்களே, முஸ்லீம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேணும் என்கின்ற விடயம் மிக நீண்ட காலமாக முஸ்லிம்களாலேயே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சில முஸ்லீம் பெண்கள் அமைப்புக்களே இந்த சட்டத்தில் பெண்களின் உரிமை மீறப்படுகிறது என்று ஐ நா பிரதிநிதியிடமும் வேறு பல அமைப்புக்களிடமும் முறையிடப்பட்டுள்ளது. இது தவிர்ந்த முஸ்லீம் துவேஷ அமைப்புக்களாலும் முஸ்லீம் தனியார் சட்டத்தினால் அல்லது அதை அமுல் படுத்துபவர்களினால் பெண்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இப்படியான பின்னணியெல்லாம் உள்ள ஒரு விடயத்தை அரசாங்கம் ஆராயுமாறுதான் ஒரு குழுவை அமைக்க முயட்சி செய்துள்ளது. ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களின் மீதி இன்னும் நல்லெண்ணத்துடன் இருப்பதகாவே பெரும் பான்மை முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இப்படியான சூழ்நிலை இருக்கும் போது; நீங்கள் எந்த அடிப்படையில் வீதியில் இரங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்?? இந்த விடயம் தொடர்பாக அரசுடன் ஒரு கலந்துரையாடலுக்கு முயட்சி செய்தீர்களா? முஸ்லிம்களின் உணர்வை உரசி, தூண்டி உங்களது கட்சியை வளர்க்க முயட்சிக்கிறீர்களா?, உங்களது தலைவர் செய்லுனாப்தீன் அவர்களுக்கு இலங்கை வருவதட்கு இந்த அரசு அனுமதிக்காததட்கான ஒரு பாடம் புகட்டும் ஒரு முன்னெடுப்பா, உங்களது இந்த ஆர்ப்பாட்டங்கள்?

    இறைவனை பயந்து கொள்ளுங்கள். உங்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இலங்கை வாழ் முஸ்லிம்களை பிளவு படுத்தாதீர்கள். வேற்றுமையிலும் ஒற்றுமையை தேடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்நினைப்பது போன்று அவ்வளவு இலகுவான விடயம் அல்ல பொத்து மக்கள் அரசுடன் கலந்துரையாடுவது என்பது. அரசியல் வாதிகள் மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்பகளுக்கும் செய்ய முடியாத விடயத்தை தைரியமாக முஸலீம்களின் உறிமைக்காக ஆர்பாட்டம் செய்து அரசுக்கு வலி உருத்தியதை பாறாட்டுங்கள் . அது இல்லாம நல்லது செய்தவர்களை தவராக அரத்தம் சொல்லி இனவாதிகளை நீங்களே தூண்டாமல் இருங்க. தவகீத் ஜமாத் செய்ததை பிழை என்று சொல்பவர்களும் bbs உம் ஒரே கூட்டனியோ என நினைக்க தோன்றுகிறது

      Delete
  7. Bullbulli
    பிரச்சினை எதுவும் வந்தால் அதற்கு சில
    முறைகள் இருக்கின்றன அந்த முறைகளை ொல்ல முடியுமா. உங்களை ோன்ற அப்பவி மக்களால்தான் இன்று அதிகமானவர்கள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் அல்லாவை பயந்து ொள்ளட்டும்

    ReplyDelete
  8. http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_173.html?m=1
    பொது பல சேனாவுக்கு சார்பாக எங்கு அறிக்கை இடப்பட்டுள்ளது...

    ReplyDelete
  9. 23gruops are totally educated and professonal teams.we have our country LAW .RULES. POLICE.COURTS ANY PROBLEMS COME WE SHOULD FOLLOW KIND OF WAY.NOT PROTEST AT ALL.IN HUDAYBBIYA AGREEMENT BY PROTEST???OR KIND OF YOUR WAY???NOT AT ALL.WE SHOULD SHOW OUR AHLAQ BY ENTIRE WORLD.23GROUPS ALSO HAVE SAME PAINING AND FEELING.THEY ARE TRY TO SOLVE THE PROBLEM BY DIPLOMATIC WAY.WE HAVE DISCUSSION WITH GOVT MEMBERS AND POLUCE COURTS.PLEASE BE UNITY WITH OUR SOCEITY

    ReplyDelete
  10. You guys activities and blind approach heading our community to great threats you people wouldn't realize it ciz u all emotional ppl, norrow thinkers so why should they support u ppl

    We shame of your reperentation on behalf of our community on these kind of issue

    What the hell you achive by protesting, only our religious value damaging rather to gaining

    Understand the religion properly without spread poison opinion amoung the society.

    You ppl don't know how to respect religion, religious leaders, approaching a problem, don't have any etichs in public programes ( some of ulamas) , deviding the community in to pieces this can't be islam you all following something eles

    Islam is all ways promoting peacful and harmony

    Think about hudaibiya agreement world ever diplomatic agreement

    So don't try to make our country another Myanmar better you kept quit

    You ppl don't have any capacity and diplomacy to deal our community national issues.

    ReplyDelete
  11. 'Obey Allah and obey the Messenger, and those of you who are in authority' here it is ACJU that we as Muslims should obey.

    ReplyDelete
  12. Kuruvi
    Your statement is very silly

    ReplyDelete
  13. குருவி நீங்கள் 40 நாள் 3 நாள் என சில்லா போகிறவர் என்பது தெளிவாக விளங்குகிறது்so உண்மை எது என்மதை முதலில் உணருங்கள்

    ReplyDelete
  14. பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினாலும் இந்த கீழ்தரமானSLTJயின் வேலையை சரிகான முடியாது., ஒரு ஒழுங்கான பன்புள்ளவன் ஒரு போதும் இப்படி கீழ்தரமாக இன்னொருவனை தூற்ற மாட்டான். இவ்வளவு காலமும் இஸ்லாத்தை தான் குழி தோன்டி புதைத்துக்கொண்டிருந்தனர்., இதன் பின்னர் இஸ்லாமியர்களையும் குழி தோண்டி புதைக்க வழி செய்கின்றனர்.அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி அழிப்பானாக.

    ReplyDelete
    Replies
    1. ஒழுங்கான பன்புள்ளவன் கீழ்தரமாக இன்னொருவனை தூற்ற மாட்டான் என்பதை நீங்களே கூறி உள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் செய்திருப்பது என்ன????????? First நீங்க திருந்துங்க baaaas

      Delete
  15. Yaruda inda sltj

    O pj pullaihala awanunga awanungada talaiwara madiri tan netru ondru indru ondu naalai ondu mottattil zeeeeeero

    Pawam enna seydalum putti ullawarhala awangada iyakkattukku ilukka mudiyadu

    Muslimgalin sattam muslimgalin urimai muslimgal muslimgal endru yaarai solranunga inda kunjunga ellarayyum mushrik pattam kuduttu kuruttu fatwa pin alayum inda pj wanangihal weru wali illamal kadaisiyil muslimgalai wittu polaikka paakkuranwal

    Adu mattum nadakkadu tambihala

    ReplyDelete
    Replies
    1. Mr தப்லீக் குஞ்சி அமீரசாப் சும்மா தாலிம் வாசிர மாதிரி வாய்க்கு வாரதெல்லாம் பேசாதிங்க புரிஞ்சி பேசுங்க.

      Delete
  16. azees azaath
    உங்களுக்கு ஏன் தப்லீக் ஜமாஅத்துடன் வெறுப்பு?

    ReplyDelete
  17. Voice SL
    தாலீம் கிதாபை நீங்கள் எப்போது கடைசியாக வாசித்தீர்கள்?

    ReplyDelete
  18. அணைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உண்டாகுவதாக கோழைகளுக்கு தினமும் மரணம் அது தான் ஒப்பாரி வைக்கின்றன

    ReplyDelete

Powered by Blogger.