Header Ads



காபிர்களிடம், முஸ்லிம்களை காட்டிக்கொடுக்காதீர்கள்..!

சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை சிறையிடைப்பதில்   காபிர்களின் ஆர்வத்தை விட முஸ்லீம்களின் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இலங்கையில் இருக்கும் ஒரு முஸ்லீம் அரசியல் கோமாளி ஒருவர், தன்னைப் பகிரங்கமாக எப்போதோ விமர்சித்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்தியதைப் பெயராக வைத்துப் பழிதீர்த்திருக்கிறார்.

இயக்க வெறி எங்களுக்குள் தலைவிரித்தாடுகிறது. நாம் மட்டும்தான் சரி என்ற அகங்காரம் எங்களின் சிந்தனைத்திறனை சிதைத்து சீரழித்துவிடுகிறது. சரியும் பிழையும் எங்களை விட்டுத்தூரமாகிவிடுகிறது. எமது கொள்கையோடு இணங்கிப்போகாத இன்னொரு முஸ்லிமை எதிரியிடம் மாட்டிவிடுவதற்கு எமது இதயம் ஏங்கித்தவிக்கிறது. எதிரியிடம் அந்த முஸ்லிம் மாட்டிக்கொள்ளும் பொழுது எங்கள் உள்ளம் துள்ளிக்குதிக்கிறது.

பல சமுதாயங்கள் எதிரிகளால் அழிந்ததை விட துரோகிகளால் அழிந்ததே அதிகம்.அறிஞர் அண்ணா ஒரு முறை கூறினார்.”நெஞ்சுக்கு நேரே பாய்ந்துவரும்  சிறுத்தையிடமிருந்து நாம் தப்பித்துவிடலாம்.ஆனால் பச்சைப் புற்தரையில் நடந்து செல்லும்போது பச்சையோடு பச்சையாக ஊர்ந்து வந்து காலைத்தீண்டும் பச்சைப் பாம்பிடம் இருந்து காத்துக்கொள்வது கடினம்” என்று.

சிறிலங்கா தௌஹீத் ஜமாதின் கொள்கைகளின் பகிரங்க விமர்சகன் நான். அவர்களின் தலைகளுக்குள் எல்லாம் இஸ்லாத்தை விட தத்துவமும்,தர்க்கமும் புகைமூட்டமாய் மண்டிக்கிடக்கிறது.அவர்களின் நிதானமில்லாத நடத்தை,விவேகமில்லாத விவாதங்கள், அனாவசியமான விடயங்களைக் கொண்டு சமூகத்தைப் பிரித்து சல்லடையாக்கும் செயற்பாடுகள் என்று அவர்களின் எத்தனையோ விடயங்களுக்கு, பலரைப் போல் நானும் பகிரங்க விமர்சகனாக இருக்கிறேன். அவர்களின் தலைவரையும், இயக்கத்தையும் இறைவனுக்காக வெறுப்பவன் நான்.

அவர்கள் மீதிருக்கும் இத்தனை கோபமும் அல்லாஹுக்காக மட்டுமே என்றால் இஸ்லாம், முஸ்லீம் என்ற எல்லைக்கோட்டை விட்டு அவை தாண்டி விடக்கூடாது. அந்த அழகான கோபங்களை வக்கிரமாக மாற்றி காபிரின் கைகளில் கொடுத்து பழிதீர்ப்பது ஒரு பெரிய பாவம். இந்த வேறுபாடு தெரியாமல் எமது பல முஸ்லீம்கள் அவரின் கைதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அவர்கள் எங்கள் கொள்கைகளில் வேறுபட்டவர்கள் மாத்திரமே.இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்ல. அவர்கள் எங்கள் சகோதரர்கள்தான். அவர்களை நாம்தான் கண்டிக்கவேண்டும். அவர்கள் பிடரியைக் குனியவைத்து நான்கு குட்டுக்குட்டவேண்டும். கதவை மூடிக்கொண்டு சண்டை பிடிக்கவேண்டும். பின்னர் கைகளைக் குலுக்கிக்கொண்டு பிரியவேண்டும். இது எங்கள் உள்வீட்டுச் சண்டை. அதை அயல் வீட்டுக்காதுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.

ஒரு முஸ்லிமின் கண்ணியம் கஃபாவை விட புனிதமானது என்பது நபிமொழி.ஒரு சிலைவணங்கியின் கிரீடத்தை விட ஒரு சுஜீது செய்பவனின் செருப்பு எவ்வளவோ மேலானது. நாளை எங்கள் வீடுகள் வெள்ளத்தால் அடிபட்டால் ஒரு காபிர் அரிசி மூட்டையைத் தூங்கிக்கொண்டு வரமாட்டான்.ஒரு முஸ்லீம் வருவான்.எமது சகோதரனுக்கு ரத்தம் தேவைப்பட்டால் நரம்பைக்காட்டிக்கொண்டு ஒரு காபிர் வரமாட்டான். ஒரு முஸ்லீம் வருவான்.எமது தந்தையின் சந்தூக்கைத் தூக்க ஒரு சோமபால வரமாட்டான். ஒரு சக்கீ முஹமட் வருவான்.

அவர்களுக்கு தௌஹீத் தம்பிலா, தப்லீக் தம்பிலா என்றெல்லாம் தெரியாது.தம்பிலா என்று மட்டும்தான் தெரியும். இதனை எம்மால் புரிய முடியாமல் இருக்கிறது. எதில் பிரிந்து நிற்க வேண்டும் எதில் சேர்ந்து நிற்கவேண்டும் என்ற வேறுபாடு தெரியாமல் எல்லாவற்றிலும் பிரிந்தே நிற்கிறோம். எங்களை எதிர்ப்பதில் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையின் ஒரு கயிறு கூட எங்களைச் சேர்ப்பதில் எங்களுக்குள் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

வீதியில் விளையாடும் குழந்தையைப் பார்த்து ‘வீட்டுக்கு வா.பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறும் ஒரு தந்தையின் நாகரீகத்தில் ‘வீட்டுக்கு வா’ என்பதில் உள்ள அன்பும்,’பார்த்துக்கொள்கிறேன்” எனபதில் இருக்கும் கண்டிப்பும்தான் நாம் முரண்படும் ஒரு முஸ்லீமிடம் நடந்து கொள்ளவேண்டிய முறை.ஆனால் வாகனத்தை நிறுத்தி விட்டு நடுவீதியில் எமது சகோதர்களுக்கு அடித்துக்கொண்டிருக்கிறோம்.எனது மகளை நீ கற்பழி நான் பார்த்து ரசிக்கிறேன் என்று கூறும் ஒரு தந்தையின் கீழ் மனம்தான் ஒரு முஸ்லீம் காபிர்களால் சிறைப்படுத்தப்படும்போது மகிழ்ச்சியடைவது.

முஸ்லீம் சட்டத்தை அகற்றாதே என்று ஆர்ப்பாட்டம் செய்ததற்காக ஒரு சகோதரர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.அவர் ஆர்ப்பாட்டத்தில் பிரயோகித்த வார்த்தைகளில் தவறிருக்கலாம். அதை விட முஸ்லீம்களின் இறைவனுக்கெதிராக மோசமாகப் பேசியவர்கள் எல்லாம் வெளியில்தான் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கைதுசெய்யாமல் விட்டிருக்கும் காபிர்களிடம் போய் ஒரு முஸ்லிமைக் கைது செய்யச் சொல்லியிருக்கும் அந்த ஈமான்தாரர்கள் எத்துணை துரோகிகள். அவரை பிடித்துக்கொடுத்த, பிணை எடுக்கத் தடையாக நின்ற முஸ்லீம்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.

அவர் வீடு வரும் வரைக்கும் அவரோடு நிற்போம். வீடு வந்ததன் பின்னர் முரண்பட்டுக்கொள்வோம்...

-வட்ஸப் மூலம் வந்தது-

45 comments:

  1. May Allah grant jannah for the writer.

    ReplyDelete
  2. Learn your good lesson brothers and sisters(Muslims). Never think of protesting in the future ever again. Sinhalese/Tamils are not our enemy. Our own Muslims are our enemy.

    Your problems in the future- try to get them solved by the Ministers/MPs(Muslims), if they are not doing their job- you know what to do instead of protesting and earning the displeasure of the fellow citizens.

    Imagine the difference between going to jail by being "complained by a Buddhist monk/Sinhalese" and being "complained by a politician that got his face/car/house broken by his people"

    FIRST ONE WILL CAUSE A RACIAL TENSION IN THE COUNTRY BUT THE SECOND ONE WILL GET YOU THE ATTENTION AND THAT WILL PAVE WAY FOR THE SOLUTION.

    ReplyDelete
    Replies
    1. Tamil racist sheds crocodile tears here.

      Delete
  3. இயக்க வெறி எங்களுக்குள் தலைவிரித்தாடுகிறது. நாம் மட்டும்தான் சரி என்ற அகங்காரம் இந்த இரண்டும்தான் இந்த நிலைக்கு காரணம்...

    ReplyDelete
  4. Whoever said it, very well said... Alahamdhulillah!

    Allah said:

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

    O you who believe, be persistently standing firm for Allah as witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just, for that is nearer to righteousness. Fear Allah, for verily, Allah is aware of what you do.

    Surat Al-Ma’idah 5:8                                                        

    ReplyDelete
  5. Kabur vanangi kaluku bbs i vida sltj than apaththu so all kabur vanagis....

    ReplyDelete
  6. Well thought out thought provoking article .Let's fight in but certainly not out .

    ReplyDelete
  7. இலங்கையில் காப்பியர்கள் என ஒருவரும் இல்லையே.

    ReplyDelete
  8. WE HAVE AN ACJU SHOORA COUNCIL MUSLIM CULTURAL AFFAIRS MUSLIM CONUCIL THEY ARE VERY UNITY THEY HAVE ALWAYS MEETINGS SO FAR.ISLAMIC PARTYS DONT NEED TO INVOLVED SUCH A GOVT OR POLITICAL MATTER.

    ReplyDelete
    Replies
    1. Of course there are very unity in keeping silent when Muslims have problems and after some time they will wake up and will have media conference... This is what happening since Halal to now...

      Delete
  9. Islam mean PEACE NOT ARGUING OR DEBAT WITH OTHER RELIGION???No NOT AT ALL.PLEASE PRECTICE VIA OUR LIFE.

    ReplyDelete
  10. All makes perfect sense. but I have few more unanswered questions.

    1. TJ has long been a cause of disharmony among Muslims in Sri Lanka and I've witnessed that they were causing physicals fights with ours Ulemas. Why those who sympathize for Razik now didn't do enough to stop them from doing so.

    2. When they took the street merely on a press meet announcement by a minister, they've broken all the above norms you've said and brought family fight to streets isn't it. Hope you're aware of the faults in the Muslim Personal Act and the committee long working on amending it. Why they act so immature. In fact protesting is not at all a way of resolving problem in islam.

    3. I've seen their spiritual leader, preaching about a mistake in Al Quran. I don't think any of us would even consider such thing acceptable, as it would open a whole door of doubt that the Al Quran what we have now as the full text of divine revelation. (in fact this is exactly what has happened to prior religions also) Do you understand that in such case millions and billions of Muslims across that globe including you and me could be considered living in Jahiliya as we have not got the divine revelation. I see this as a major issue in considering them as "Muslims brother with difference of opinion".

    4. Many many not be able to digest what Azad Sali did. I think it's inevitable at this juncture, isn't it. TJ has become a group which doesn't listen to anyone including ACJU. It's was a question that who would tie the bell on the cat. (On a side note before anyone start blaming me, that I'm no way attached to Azad Sali or their practices. I always avoid places with Ziyarams for my prayers)

    5. in fact the followers of TJ are very good at using filth/derogatory language on fellow Muslims in SM when others don't agree with them, also they would deny using filth later, isn't it also falling within the same logic of taking family problem to streets.

    My opinion is what SLTJ did caused irreparable damage to the Muslims as community and portrait a very negative image. When some action is being taken, I find it justifiable.

    ReplyDelete
    Replies
    1. Superb writing, Buddhists in our country, they don't know Islam. We have to explain the sharia law which is 100% relevant to human life.otherwise there are no meaning to fight with the majorities.

      Delete
  11. Well statement, I agree with.

    ReplyDelete
  12. bro: what if we already tried so many times and they did not change?
    now that the situation has come that if we dont take action this will create big consequences in the minority muslims. I still think Mr razik could have thought twice before acting , because whatever he does will afffect the total muslims. the media and public were sarting to neglect BBS and when they were seeking publicity this guy gave way to create it. these types of short sighted view is not healthy and hopefully he learn the lesson and do things more responsibly next time around.
    By the way they always talk about quran and sunna, Do you still think the way they behaved was acceptable in the view of Quran and Sunna?

    ReplyDelete
  13. bro: what if we already tried so many times and they did not change?
    now that the situation has come that if we dont take action this will create big consequences in the minority muslims. I still think Mr razik could have thought twice before acting , because whatever he does will afffect the total muslims. the media and public were sarting to neglect BBS and when they were seeking publicity this guy gave way to create it. these types of short sighted view is not healthy and hopefully he learn the lesson and do things more responsibly next time around.
    By the way they always talk about quran and sunna, Do you still think the way they behaved was acceptable in the view of Quran and Sunna?

    ReplyDelete
  14. மிகவும் முக்கியமானதும் நிலமைக்கு ஏற்ற பாராட்டப்பட வேண்டிய கட்டுரை

    அல்லாஹ் அவரை காப்பாற்றுவான்

    எமது சில முஸ்லீம்களின் கீழ் தரமான வக்கிர குணத்தை இந்த விடயத்தில் அறியலாம்.

    சரி சாதாரன மக்கள் இருக்கட்டும் குர்ஆன் ஹதீசை நெஞ்சில் சுமக்கும் உலமாக்கள் கூட இந்த விடயத்தை பற்றி இதுவரைக்கும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை எந்த அளவு கவலைப்பட வேண்டிய விடயம் இது. இந்த அப்துல் ராசிக் அவருடைய வீட்டுப் பிரச்சினைக்காகவா நடு வீதியிலே நிண்டு கத்தி இப்ப ஜெயில் ோய் ொண்டாட்டி பிள்ளைகளை பிரிஞ்சி இருக்காரு உங்களுக்காக நமக்காக நம் மார்க்க விஷயத்துக்காகத்தானே இந்த நண்றி கூட இல்லாத நாய்களாடா நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Take it easy brother. Time will solve the problem

      Delete
  15. Muslimaana Kudikaaranum kafeerkalidaththil adivaanguwadai yaarum virumba maattarkal. Anaal thawkkaararkal eraalamaana appaawi muslimgalay oorpiriththu police court waliya iluththu siraliththu irukkirarkal

    ReplyDelete
  16. இயக்க வெறியை வக்கிரமாகக் கொண்டவர்கள் யார் என்பது தான் கேள்விக் குறி? ஆனால் ஒன்று மட்டும் யதார்த்த உண்மை, SLTJ, தோன்றியதன் பின்னரான இயக்க வெறியும் வன்மமும் அளப்பெரியது. இவர்களுக்கு முன்னர் தனக்கென ஒரு மஸ்ஜித் தமக்கென ஒரு கொடி என்று எந்த இயக்கமும் இத்தனை வெறித்தனமாய் இருந்ததில்லை, சகோதர இனத்தவரும் இத்தனை வன்முறையாய் நம் சமுகத்தை நோக்கவுமில்லை. இனவெறியையும், இயக்கவெறியையும் இஸ்லாத்தின் பெயரால் வளர்த்து விட்ட பெருமை SLTJ வையே சாரும்.
    [[“ஒரு முஸ்லிமின் கண்ணியம் மக்காவின் ஆலயத்தை விட புனிதமானது..... நாளை எங்கள் வீடுகள் வெள்ளத்தால் அடிபட்டால் ஒரு காபிர் அரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு வரமாட்டான்]]
    நீ சக சமுகத்தை நேசித்துப்பார் அவனே உனக்கு உதவுவதில் முதன்மையானவனாய் இருப்பான் .
    [[எமது சகோதரனுக்கு ரத்தம் தேவைப்பட்டால் நரம்பக்காட்டிக்கொண்டு ஒரு காபிர் வரமாட்டான்]]
    அப்படிப்பார்த்தால் இன்று நம் நாட்டு இரத்த வங்கிகளில் முஸ்லிம்களின் இரத்தம் மட்டுமே இருக்க வேண்டும்? சாதீய, மத வேறுபாடுகளைத்தாண்டி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உறைந்து கிடப்பது இரத்தம் மட்டுமே மதம் அல்ல, அதற்கு நீ உன் அண்டை வீட்டானிடம் நல்லுறவைப் பேணவேண்டுமே?.
    [[எமது தந்தையின் சந்தூக்கைத் தூக்க ஒரு சோமபால வரமாட்டான்]]
    தவறு ! ஒன்பது சோமபாலாக்கள் வருவார்கள் அதற்கு நீ சோமபாலாக்களுடன் நட்புடனும் நல்ல பண்புடனும் இருந்திருக்க வேண்டும். உன்னால் முடியுமா?
    யஹூதியின் ஜனசாவுக்கும் மரியாதை செய்தவர்கள் நபி (ஸல்) அவர்கள், ஏன் பயத்தினாலா? தன் மீது சேற்றை வாரி இறைத்த மூதாட்டியையும் நோய் விசாரிக்கச் சென்றார்கள் ஆனால் நீ?
    வேடிக்கையாக இருக்கின்றது ... உங்கள் மகன் என்ன தான் குற்றம் செய்தாலும் அதனை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும் எனும் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது. அடங்காத பிள்ளையைத் திருத்துவற்கு சிறுவர் சீர் திருத்தப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்கிறீர்களா? அல்லது சீழ் பிடித்த உறுப்பை சீர்ப்படுத்த அறுவை சிகிச்சையை அடுத்தவர்கள் செய்யக் கூடாது நீங்கள் தான் செய்ய வேண்டும் என்கிறீர்களா?
    நபி வழியையும் குர்ஆனையும் மட்டுமே பின்பற்றுவோம், இதற்கு முன் வாழ்ந்தவர்களும் இப்போது வாழ்பவர்களும் வழிகேட்டில் இருகின்றார்கள் என்று கூறி, சமூகத்தைப் பிரித்து, ஊரை இரண்டு படுத்தி, உறவுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, நாங்கள்தான் இஸ்லாத்தின் காவலர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டவர்கள். தவறுக்கு தவறுதான் பரிகாரம் என்று எங்கே கற்றுக் கொண்டார்கள்? பெண்களையும் குழந்தைகளையும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு களமிறக்க எங்கிருந்து ஆதாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்?
    பெண்களையும் குழந்தைகளையும் ஆர்ப்பாட்டம் செய்வதற்க்கு களமிறக்கும் கண்ணியவான்கள் இதனையும் சிந்தித்ததுண்டா?
    மது அருந்துவதில் தவறில்லை என்ற அடுத்த சமூகத்திலுள்ள யாராவது ஒருவர் மது போதையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை [ அல்லாஹ் பாதுகாப்பானாக]] தொட்டுவிட்டால்... அது எங்கு போய் முடியும்?
    குறிப்பிட்ட குற்றம் நடை பெறாமலிருக்க காத்திரமான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்த பின்னர்தான் இஸ்லாம் ஒரு குற்றத்தின் தண்டனையை கடுமையாக்கியது; உ+ம் திருட்டு [[ பொருளை பாதுகாப்பில்லாத இடத்தில் வைத்து திருட்டுக் கொடுத்தால், திருடியவரின் கையை வெட்ட முடியாது என்பது திருட்டுக் குற்றத்தில் உள்ள பல நிபந்தனைகளுள் பிரதானமான நிபந்தனையாகும். விபச்சாரத்தை தவிர்ப்பதற்கான அத்துணை நடவடிக்கைகளையும் எடுத்து விட்டுத்தான் அதன் தண்டனையை கடுமையாக்கி உள்ளது. ஆனால் பெண்களை இஸ்லாத்தின் பெயரால் வீதியில் இறக்கி... இது யாருடைய வழி முறை, யாருடைய பின் பற்றுதல்?
    இலச்சியங்கள் உயர்வாக இருந்தால் மட்டும் போதாது அதனை அடையும் வழிகளும் உயர்வாக இருக்க வேண்டும்.
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Brother நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இலங்கையில் இயக்கங்கள் அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 100-150 வருடங்கள் இதற்கு முன் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் காபிர்களா?

      Delete
    2. Well said gee thank you very much

      Delete
    3. Well said gee thank you very much

      Delete
    4. Good brother. Appreciated. This article have some controdictions. Anyhow, we will pray and Dua for Rasik to release him and give good sense to him and his groups. We will unite under Quran and sunnah to destroy every groups in the world.

      Delete
  17. By the way I want to say(ask)something to my fallow brother's. If Sri Lanka is majority of Muslims country what will happen in this situation? Just thinking about it. Nothing wonder what happening around the (Muslim's) world.what you....think ......?

    ReplyDelete
  18. i agree totally with GEE article. jazakallhu kayra.....

    ReplyDelete
  19. காபிர்களிடம், முஸ்லிம்களை no sltj Vai avarkal sltj anra name illamal Muslims anru vivathathil Kalam irangi irundal mulu nattu Muslimkalum kalathil nichayama irangi iruparkal iniyavathu Muslims anra pothuvana urimaikaha kural kodukkum pothu please sltj vendam Srilankan Muslims anru vandal alla Muslims um ungalukku pakkabalamaha iruparkal nichayama athil iyakka verupadu kattamattarkal ungaludaya meetingalil sltj OK no problem but Muslims anginra pothu kattayam thavirkanum

    ReplyDelete
  20. Well said GEE im agree with you

    ReplyDelete
  21. யார் இந்த மக்கு Gee ? அட SLTJ வர முன்னர் ஏதோ முஸ்லீம் சமுகம் ஒன்றுபட்டு அடிபடாமல் ஒன்றாக இருந்ததாகக்கூறுகிறானே.......... எங்கட இருந்து நீ வாரே...... என்னமோ ஒலகத்துக்கு இப்பதான் எறங்கி வந்த மாதிரியல்ல கதைக்கிறே.............. ஒன்னக்குடுத்துர.......... நீயும்......... ஒன்னோட விளக்கமும்...........

    ReplyDelete
    Replies
    1. Iyakkaveriyaal suvarkkam kidaikaathu

      Delete
  22. Gee ஜீ, உங்கள் விமர்சனம் SLTJ கொள்கை சார்ந்தது. இக்கட்டுரை சமுதாய இருப்பு குறித்த கண்ணோட்டம். யார் உமிழ்தலும் நம்மை நோக்கித் தான் வரும். அசாத் சாலி போன்ற கப்ர் வணங்கிகள் தமது சுய லாபங்களுக்காக (அரசியல் மற்றும் கொள்கை சார்ந்த) செய்த முட்டாள்த்தனம். SLTJ புகாரில் ஒரு இனவாதக் கோமாளி உள்ளே போனான், அதனால் ஆத்திரம் கொண்ட அசாத் சாலி SLTJ செயலாளரை உள்ளே அனுப்பினார். இன்னும் அரசியல் பலம்மிக்க இனவாதிகள் வெளியே தான் பாதுகாப்பாக உள்ளனர் . இது தான் நடந்த கதை. இயக்க விமர்சனங்களை நமக்குள் வைத்துக் கொள்வோம் என்பது தான் எமது நிலைப்பாடு.

    ReplyDelete
  23. Good article but not very practical unfortunately. In a
    DEMOCRACY people are more democratic than religion and
    that is one reason why we have so many religious groups
    among us . Don't forget that Thowheed wanted too much in
    too little time and it was not purely RELIGIOUS !However,
    Razik's arrest is questionable because Gnanasera is a
    bigger threat and is still at large. A rogue's arrest can
    not be balanced by the arrest of a religious leader simply
    because he blasted another well known rogue monk ,in
    public. Action of Razik arrest is clearly BIASED. This
    could only be corrected by the arrest of Gnanasara and then
    keeping all of them off public eye from rudeness . Allowing
    Gnasara to speak filth against other communities and
    arresting when someone from other community counter it in a diluted tone, is not JUSTICE DONE. This govt must correct
    its mistake or Razik arrest will speak a volume against it.
    I don't agree with any of these new or old religious groups
    about the way they function but democracy has allowed them
    to work and it should protect them too. I watched Razik
    speech and his rhetoric was nothing and nothing to match
    with that of Gnanasara and Dan Priyasad a new racist
    street gangster .

    ReplyDelete
  24. சகோ.Gee நல்லது சொன்னீர்கள்.அவனுகளுக்கு விளங்க வேண்டுமே.அதுகள் விளங்கிற கூட்டம் அல்ல விளங்கின அறப்படிச்சதுகள்.அதுக்கு எப்படி சொன்னாலும் ஏறாது.

    ReplyDelete
  25. இலங்கைக்கு தவ்ஹீத் சகோதரா்களின் தியாகத்தின் நிமித்தமே ஐாஹிலியத்தில் இருந்துகொண்டிருந்த பல மக்கள் தெளிவடைந்தை மரக்கமுடியாது.
    ஒரு சில சந்தர்ப்பவாதிகள் அமைப்புக்களை சுயநலத்திக்கு பாவிப்பதையிட்டு தவ்ஹீத்தை குரைகூரவேண்டாம்
    பல கப்புருவணங்கி தேர்வுபெற்றும் சில அமைப்புக்கள் நாங்கள்தான் எங்கள் அமைப்புதான் நேர்வழி என ஒப்பாரி....
    அவர்கள் நரி மாதிரி சாப்பாடு சமைக்கமாட்டார்கள் but சாப்பிடும்போது ஓடிவந்து முடிச்சுபோட்டிடுவாங்க தீனும்வேனும் தீனும்வேனும்

    ReplyDelete
  26. நல்ல ஆதாரம் இந்த sltj காறனுகளுக்காக பேசுகின்றவர்கள் எப்படி பேசுகின்றனர்.வார்த்தையில் ஒழக்கத்தை கானோமே ஆகவே எல்லாம் அப்படித்தான் தூ.....

    ReplyDelete
  27. Mohamed Raffi Aboothahir:
    Bro: ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான கருத்துச்சுதந்திரம் இருக்கின்றது. எனது கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களை நிற்பந்திக்கவில்லை. உங்கள் கருத்தை நாகரீகமாக பதிவிடலாமே? ஒரு இஸ்லாமியனின் பண்பு அதுதானே, ஏன் இத்தனை ஆக்ரோஷம்? SLTJ யும் உங்களைப் போன்று உணர்ச்சி வசப்பட்டு நாகரீகத்திற்கு அப்பால் சென்றதால் தான் நமது சமுகம் இப்போது தடுமாறி நிற்கின்றது. உங்கள் பினூட்டத்தில் உள்ள அநாகரிகத்தின் மூலம் உங்களை நீங்கள் அடையாளப்படுத்தி இருக்கின்றீர்கள் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  28. என்னப்பா கீ யா பீ யா அப்துல் ராசிக் போன்றவர்கள் ஒழிந்து கொண்டும் வீட்டில் படுத்துக்கொண்டும் சமோகத்துக்காக போராடவில்லை, என்னப்பா பீ வெளியே வருவீர்களா? தைரியம் உண்டா? பெயர் போடுவதக்கே பயந்த நீர் எல்லாம் சமூகம் பற்றி கதைக்க வந்துட்டானுகள் த்தூ

    ReplyDelete
  29. Mr Gee I like the way you thinking. well said.

    ReplyDelete
  30. Slippery of tongue with filthy expression might create un-expected result sooner than expected. Islam also teaches to preach in a diplomatic way within the Islamic boundaries.

    ReplyDelete
  31. வஹியை மறுத்து முழுமையான வழிகேட்டில் செல்லும் பீ ஜாஹிளையும் அவன் அடிமைகளையும் ஒருவன் வெறுக்கவில்லை என்றால் அவன் முஸ்லிமே இல்லை அப்படி அவரை பின்பற்றாமல் அவர்களுக்கு ஆதரவு தெறிவிப்பவர்களும் முஸ்லிமில்லை அவர்களின் பத்வாவின் படி

    ReplyDelete
  32. مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
    எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
    (அல்குர்ஆன்: 30:32)

    ReplyDelete
  33. SakurA sayed:
    நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
    நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
    தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
    குலத்து அளவே ஆகும் குணம்.
    [[குலத்து அளவே ஆகும் குணம்]] என்பதிலிருந்து நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ள முடியும். [[எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்: மெய்ப்பொருள் காண்ப தறிவு]]. கூறுவது யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும் அவர் கூறும் விசயமும் வழியும் நல்லாதாக இருந்தால் சரி. வீரம் என்பது விவேகத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதனால் தனக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் துன்பமே நிகழும். புரிந்து கொண்டால் சரி.

    ReplyDelete
  34. bro gee 100% சரி ماشاء الله

    ReplyDelete

Powered by Blogger.