Header Ads



முஸ்லிம்களிடம் காணப்படும், கவலை நீடிக்கக்கூடாது - பாராளுமன்றத்தில் சம்பந்தன்

வடக்கு, கிழக்குக்கென விரிவான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காணிகளை கையளித்தல், மீள்குடியேற்றம், வீடமைப்பு, வாழ்க்கைத்தரம், பண்ணைகள், மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட விடயங்களுக்காக விரிவான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுவதுடன், இவ்வாறான வேலைத்திட்டம் விரைவில் தயாரிக்கப்படுவதற்கான அழுத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும். இதில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாவது நாள் விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

வடக்கு கிழக்கிலிருந்து 18 தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், இது 90 வீதத்துக்கும் அதிகமானதாகும். மக்கள் தம்மை பிரதிநிதித்துவம் செய்யுமாறு எம்மைத் தெரிவுசெய்துள்ளார்கள். நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. எனினும், இலக்கை அடைவதற்காக நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை வைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வரைபொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டும். அரசாங்கம் வடக்கு, கிழக்கிற்கென விரிவான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாட வேண்டும். விரைவில் இவ்வாறான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிப்படுத்தும்.

அதேநேரம், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றங்களைத் தட்டிக்களிக்க முடியாது. இது தொடர்பில் அண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்ததுடன், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்திருந்தோம். தமது மீள்குடியேற்றம் நிராகரிக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் மத்தியில் கவலையொன்று காணப்படுகிறது.

அவர்களுடைய கவலை நீடிக்கக் கூடாது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதே தமிழ் மக்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கொள்கையாகும். இவர்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, நாட்டிலுள்ள வசதி குறைந்த மக்கள் மீது மேலும் வரிச் சுமைகள் சுமத்தப்படக் கூடாது. நாடு கடனில் மூழ்கியிருந்தாலும் அந்தத் தரப்பினரின் மீது சுமைகளை சுமத்தும் வகையில் வரி அதிகரிப்புக்கள் காணப்படக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. This is the best time that all minorities and all muslim groups should unite to overcome challenges

    ReplyDelete
  2. I am paying 2/3% tax for Rs.100 prepaid dialog card. Is it good governance economy?

    ReplyDelete
  3. நல்ல விடயம் ஜயா ஆனால் பேச்சில் மட்டும் இருந்தால் ோதாது

    ReplyDelete
  4. ஆனால் வடக்கு, கிழக்கை இணைக்க மட்டும் கனவு காணக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.