Header Ads



யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின், பணியகம் திறக்கப்படுகிறது


வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பணியகத்தை (கொன்சூலர்) யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முன்னர் இது வவுனியாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. 

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை உதவிகளை வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக வவுனியாவிலும், மாத்தறையிலும் இரண்டு தூதரக சேவை பணியகங்களை அமைப்பதற்கு ஏற்கனவே சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும், யாழ். மாவட்டத்திலேயே அதிகளவு மக்கள் வெளிவிவகாரச் சேவையின் தூதரக உதவிகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய, வவுனியாவில் அமைக்கப்படவிருந்த தூதரக சேவை பணியகத்தை  யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்திருந்தார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.