Header Ads



களுத்துறை பள்ளி தாக்குதல், உடைந்த கண்ணாடியை திருத்துகிறது பொலிஸ்

களுத்­துறை ஹீனெட்­டி­கல ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கு­த­லை­ய­டுத்து சேத­ம­டைந்த கண்­ணா­டி­க­ளுக்குப் பதில் புதிய கண்­ணா­டி­களைப் பொருத்­து­வ­தற்கு களுத்­துறை பொலிஸார் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

நேற்று பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்த பொலிஸார் சேத­ம­டைந்த கண்­ணா­டியின் பரப்­ப­ளவை அள­விட்டுச் சென்­றுள்­ள­தாக பள்­ளி­வாசல் பரி­பா­லன சபையின் தலைவர் எம்.எஸ்.ஹம்ஷா தெரி­வித்தார்.

தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன் பள்­ள­ி­வா­ச­லுக்கு வழங்கும் பாது­காப்பும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு பொலிஸார் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இத்­தாக்­குதல் சம்­பவம் ஹீனெட்­டி­கல பகு­தியைச் சேர்ந்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க முடி­யாது. இதன் பின்­ன­ணியில் வெளி­ந­பர்­களே சம்­பந்­தப்­பட்­டி­ருக்­க­லா­மென பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 


கல் வீச்சு சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர். -விடிவெள்ளி-

1 comment:

  1. இனவாதிகள் உடைக்க போலீஸ் சரிப்படுத்தினால் தொடர்கதையாகி விடுமா?

    ReplyDelete

Powered by Blogger.