Header Ads



நல்லிணக்கம் தெற்கில் மாத்திரம் ஏற்படாது - விக்னேஸ்வரனை கண்டிக்கிறார் வடமாகான ஆளுநர்

நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் ஏற்படத்தப்படாது வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால்  நல்லிணக்கதை தடுக்கும் வகையிலான கருத்துக்களையே விக்னேஸ்வரன் முன்வைத்து வருகின்றார். தான்  முன்வைக்கும் கருத்தக்கள் தொடர்பில் விக்கினேஸ்வரன் கூடிய கவனம் எடுக்க வேண்டும்  என வடமாகான ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். 

கொழும்பு ராஜகிரியவில்  அமைந்துள்ள வடமாகாண ஆளுனர் காரியாலையதில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் பேசுவது பொருத்தமற்றது. வடக்கிலும் நல்லிணக்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலும் இனவாத கருத்துக்கள் பலமடைவதை போலவே நல்லிணக்கமும் இரண்டு தரப்பில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர், நல்லிணக்கத்தை விரும்புகின்றனர். சிங்களவர்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் ஒரு சிலர் தமது அரசியல் சுயநலத்தை கருத்தில்கொண்டு இனவாதமாக செயற்படக்கூடாது. 

வடக்கில் இராணுவமயமாக்கல் இருப்பதாக தொடர்ந்தும் வடக்கு முதலமைச்சர் குற்றம்சுமத்தி வருகின்றார். உண்மையில் இன்றும் வடக்கில் மக்களின் உதவிக்கு இராணுவமே உள்ளது. வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்திகள், பாதுகாப்பு இரண்டுக்கும் இராணுவம் துணை நிற்கின்றது. புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் விசஊசி போடப்பட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. வடக்கு முதல்வர் இந்த கருத்தை சர்வதேசம் வரையில் கொண்டு சென்றார். ஆனால் இன்று அந்தக்கதையை மறந்துவிட்டனர். இந்த கருத்தை முன்வைத்த போது  வடக்கில் மக்கள் மத்தியில் தவறான ஒரு நிலைப்பாடு எழுந்தது. ஆனால் இன்று மக்களே விளங்கிக்கொண்டுள்ளனர்.

அதேபோல் வடக்கில் தமிழ் மக்களை அழிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உண்மையில் தலைவர் ஒருவர் முன்வைக்கும் கருத்துக்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகவும் அதன் தாக்கம் தொடர்பில் அறிந்தும் முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதன் விளைவுகளை நன்கு அறிந்தும் விக்கினேஸ்வரன் செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும் என்றார்.

5 comments:

  1. துப்பாக்கி முனையில் நல்லீணக்கம் உருவாக்க முடியாது.
    நாட்டில் எல்லா பிரதேசங்களிலும்அபிவிருத்தி நடைபெறுகிறது அங்கெல்லாம் இராணுவமா அபிவிருத்தி செய்கிறது.
    ஆவா குழு கோத்தாவின் அருசொரணையில் உருவாக்கப்பட்டதென்பதை தங்கள் அரசஅமைச்சர்.,ஜாதிக கெலஉறுமய என்பன ஒப்புகொண்ட பின்பும் இவர் சிறுபிள்ளைபோல செயற்படுகிறார்.

    ReplyDelete
  2. காலி முதல் கொழும்பு வரை உள்ள வீதியில் பயணிக்கும் ஓர் தமிழரால், அவ்வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் அரசு சம்பந்தப்பட்ட பெயர்ப் பலகைகளில் காணப்படும் தமிழ்க் கொலைகளை வைத்தே தெற்கின் நல்லிணக்கம் அளவிடப்படுகிறதே தவிர வெறும் வார்த்தைகளால் அல்ல, மதிப்புக்குரிய ஆளுநர் அவர்களே!

    ReplyDelete
  3. ஐயா ஆளுனரே,
    இந்த விக்னேஸ்வரனை ஏன் முதலமைச்சர் ஆக்கினோம் என சம்மந்தன் ஐயாவும், சுமந்திரனும் தலையில் கை வைத்துக்கொண்டிருப்பது உங்களுக்கு புரியவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. @Abdulla
      நேற்று (06.11.2015)
      யாழ்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடை பெற்ற காலைகதிர் பத்திரிகையின் "விடியல் "சஞ்சிகை வெளியீட்டுவிழா நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இரா.சம்பந்தன் அவர்கள் தனது உரையில்
      "விக்னேஸ்வரன் ஐயா தமிழர்களுக்கு பக்கபலமாக செயற்படுவதாகவும் தான் அவருக்கு கையளித்த கருமங்களை செவ்வனே நிறைவேற்றியுள்ளார் எனவும் 2013 ம்ஆண்டு தான்அ வரை தெரிவு செய்தமை சரியான தீர்மானம் என்றும் தனது கணிப்பு தப்வில்லை என்று கூறியிருந்தார்."
      இன்று காலை வெளிவந்த அனைத்து பத்திரிகையிலும் இது வெளிவந்துள்ளது நீர் ஜப்னா முஸ்லீமுடன்காலம் தள்ளினால் இப்படி மூக்கு உடைபட வேண்டியதுதான்.பாவம் நீர்.

      Delete
  4. ஓணான்,பச்சோந்தி, டபல் கேம்,
    அதான் சம்பந்தன் சொல்றாரே ராஜ தந்திரப்போராம்!
    இமிலயாவது ஜெயுச்சா சரி!

    மனநோயாளி இன்றைக்குத்தான் 06ம் தேதி

    ReplyDelete

Powered by Blogger.