November 10, 2016

பெரும்பான்மையினர் நினைத்தால் எதுவும் நடக்கும், தேங்காய் உடைத்தவர் இளநீரை குடிக்கட்டும் - கோத்­தா

அமெ­ரிக்காவின் பெரும்­பான்மை மக்கள் குழு­வினர் ஒன்­றி­ணைந்து டொனால்ட் டிரம்பின் வெற்­றியை உறு­தி செய்­துள்­ளனர். எனவே இலங்­கையின் பெரும்­பான்மை மக்­களும் இதனை பாட­மாகக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அதே­நேரம், ஒபா­மாவின் காலத்தில் ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வை­யினால் இலங்கை மீது விடுக்­கப்­பட்ட  அழுத்­தங்கள் குறை­வ­தற்கும் டிரம்பின் வெற்றி பங்­க­ளிப்புச் செய்யும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

பேரா­சி­ரியர் நவீன் டி சில்­வாவின் எனது உல­கத்தில் 30 வரு­டங்கள் என்று நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அதி­தி­யாக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலின் போது தனது வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்­துக்­கொண்­டி­ருந்த டொனால் ட்ரம்­பிற்கு தடை­யாக எதி­ரணி வேட்­பா­ன­ள­ருடன் தொக்கி நின்ற சிறு­பான்­மை­யி­னரே இருந்­தனர். அதனால் அவர் வெற்றி பெரு­வாரா என்­பது கேள்­விக்­கு­ரி­யாக இருந்­தது.

இருப்­பினும் தற்­போது அவர் வெற்றி பெற்­றுள்ள நிலையில் அவ­ரது கொள்­கை­களை வெ ளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அவரின் அர­சியல் கொள்­கைகள் வர­வேற்­கத்­தக்­கவை. குறிப்­பாக இலங்கை போன்ற சிறிய நாடு­க­ளுக்கு இதனால் எந்த பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாது.

இந்­நி­லையில் இலங்கை சந்­தர்ப்­பத்தில் உரிய விதத்தில் பய­ன­டைய வேண்­டி­யது காலத்தின் தேவை­யா­கும். ஆனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் வெளிநாட்டு கொள்கை இந்த சந்­தர்ப்­பத்தில் பய­ன­டையும் வகையில் அமை­யுமா என்­பது கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது.

அத்­துடன் அமெ­ரிக்க வாக்­க­ளர்­களின் பக்­கத்­தி­லி­ருந்து பார்க்­கை­யிலும் அந்­நாட்டு புத்­தி­ஜீ­விகள் கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போதும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த பராக் ஒபா­மாவின் ஆத­ரவு ட்ரம்­பிற்கு கிடைக்­க­வில்லை. எனவே அவர் தோல்வி அடை­யப்­போது உறுதி என்று குறிப்­பி­டப்­ப­டி­ருந்­தது. அதே­நேரம் கறுப்­பினத்­த­வர்­களின் ஆத­ரவும் இவ­ருக்கு கிடைக்­காது என்ற கருத்­துக்கள் மிகவுத் வலுப்­பெற்­றி­ருந்­தன.

ஆனால் அந்­நாட்டு வெள்ளையின பெரும்­பான்­மை­யினர் ஒன்று திரண்டு டொனால் ட்ரம்­பிற்கு வாக்­க­ளித்தன் கார­ண­மாக அவர் சுல­ப­மாக வெற்­றி­பெற்றார். இதனை இந்­நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் ஒரு பாட­மாக கொள்ள வேண்டும். இதனால் உரு­வாக்­கப்­பட்ட கருத்­தி­யலே மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

பெரும்­பான்மை ஆத­ர­வினால் மாத்­திரம் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்டார். அது சிறு­பான்­மை­யி­னரின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது என்­பதை நாம் உணர்ந்­துக்­கொள்ள வேண்டும். பெரும்­பான்மை வலுப்­பெற்றால் மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யி­னரும் வலுப்­பெ­றுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்­போது அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்ள முடிந்­துள்­ளது.

அதே­நேரம் ட்ரம்ப் என்­பவர் சாதா­ர­ண­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் போக்­கி­லி­ருந்து விடு­பட்ட ஒருவர். அமெ­ரிக்­கா­விலும் மக்கள் அர­சியல் வாதி­க­ளிடத்­தி­லி­ருந்து தூரம் செல்­கின்­றனர். காரணம் அர­சியல் தலை­வர்கள் மக்­களை ஏமாற்றி ஆட்­சியை கைப்­பற்ற முனை­கின்­றனர். மக்­களை முட்­டா­ளாக்­கி­வி­டு­வது இல­கு­வா­னது என்று எண்ணி அடுக்­காக பொய்­களை கூறி வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

இன்று எமது நாட்­டி­லுள்ள அமைச்­சர்கள் கூறும் கருத்­துக்­களும் கூட எந்த வித அடித்­த­ள­மற்­ற­தா­கவும் வேடிக்­கை­யா­ன­தா­க­வுமே உள்­ளன.அதனால் மக்கள் அர­சியல் வாதிகள் என்­றாலே வெறுப்­ப­டையும் நிலை தோன்­றி­யுள்­ளது.

மேலும் மனித உரிமை தொடர்பில் மாறு­பட்ட கருத்­துக்கள் பேசப்­ப­டு­கின்­றன. மனித உரி­மைகள் என்­பதை மக்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்க தேவை­யில்லை. எமது நாட்டு மக்­க­ளி­டத்தில் மனித உரி­மைகள் இயல்­பாவே நிறைந்­துள்­ளன. ஆனால் ஐ.நா மனித உரி­மைகள் பேரவை இல்­லாத பல விட­யங்­களை மனித உரி­மைகள் என்ற பேரில் எமது நாட்­டினுள் புகுத்த பார்க்­கின்­றது. அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க கூடாது.

அத்­துடன் இன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால் ட்ரம்பின் வெற்றி அமையும். ஒபாமாவின் காலத்தில் மனித உரிமை விவகாரம் பெரிதாக இருப்பதற்கும் ட்ரம்பின் வெற்றிக்கு தடையாக இருந்தவர்களே காரணம். அதனால் ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்த கூட்டமைப்பினர் தற்போது தேங்காய் நீரை குடிக்கட்டும் என்றார். 

8 கருத்துரைகள்:

So you are 1000% INVAATHI you have proofed

இனத்துவேசத்தின் தெளிவான பக்கம் இப்போது கோதபாயாவிடம் இருந்து வெளிப்படுகின்றது. பெரும்பான்மை வெள்ளையர்களின் வாக்குகள் மூலமாக ட்ரம் வெற்றி பெற்றிதாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மை அப்படியில்லை. ட்ரம்பின் வெற்றிக்குப்பின்னால் இரண்டு மிகப் பெரிய விளம்பர கம்பனிகள் கடுமையாக உழைத்தன. அவற்றின் விளைவுதான் ட்ரம்மின் வெற்றி. அதே சாதனத்தைத்தான் இந்தியாவில் மோடியும் கையாண்டார். மக்களின் உண்மையான மனநிலையை இந்த தேர்தல் பிரதிபலிக்கவில்லை. இன்றைய பெரும்பாலான உலக மக்களை இயக்குவதும் சிந்திக்கவைப்பதும் உலகை ஆட்டிப்படைக்கும் விளம்பரக் கம்பனிகள்தான் இதற்கு சிறந்த உதாரணம் இந்தியாவும் இப்போது அமெரிக்காவும்தான். இதன் வெளிப்பாடு இன்னும் கொஞ்சம் நாட்கள் செல்ல தெளிவாகும்.

Hard to believe Gotabaya is a vetaran in politics.

Does he know anything about the Demography of the US and how its Constitution work?

Does he know Hillary got 59,814,018 popular votes which is more than Trump's(59,611,678)?

Does he know Hillary underperformed with Black and Hispanic voters?

Wow!

Anyways, the point is, Muslims in Sri Lanka can still learn their lesson: The two major parties trying to outsmart the minority, yet the minority(like Muslims) can outsmart them if they join hands and stand with JVP.

Thats why anti trump protest rocks across US never been in history. Let us see how these racist chemistries are going to mix.

GOTABAYA JATHIWADIYEK KIYALA MULU RATATAMA OPPUKALA.MUWA JANADIPATI KALOTH MULU LANKAWAMA KAPOTHI.SATHTHAR ASWER MUBARAK MAULAVI MEWA KIWALA TERUM GANIYAW..idiet3

மிஸ்டர் கோட்டா!
இப்ப நீங்க வீட்டிலிருக்கிறீர்கள் அதற்கு அல்லாஹ்வின் நாட்டம்தான் காரணம்
குர்ஆனில் 3:189 வசனம் உங்கள் கம்பனிக்கு மிகவும் பொருத்தம்

கோட்டா அடியே நீ எப்பவோ ஓட்டாவாயிட்ட இப்ப நீ போடா ...
உனக்கு எப்பேக்கும் இருக்கு தோட்டா அதனை உன்காதுக்கு நீ போட்டா கூடயசீக்ரம் இருக்கிடி உனக்கு டாட்டா
இப்பேக்கு நாங்க போய்டு வரட்டா

இதில் இருந்து என்ன விளங்குகிறது சிறு பான்மையினரின் வாக்கு தேவை இல்லை என்பவைதான் செரல்கிறார்.

Post a Comment