Header Ads



இலங்கையர்கள் குறித்து, தீவிர அவதானம் செலுத்தப்படுகிறது - பூஜித்த

வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுடன் இலங்கையர்கள் இணைகின்றார்களா என்பது குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். காவல் துறையின் 85வது பொதுச் சபை கூட்டம் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இலங்கையர்கள் இணையக்கூடிய அபாயம் குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் சிரியாவில் இலங்கையர் ஒருவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைத்துக்கு கொள்ளப்பட்டமையே இதற்கான காரணம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதம் தொடர்பில் அனைத்து நாடுகளுக்கும் ஒர் பொதுவான நிலைப்பாடு இருக்க வேண்டியது இன்றியமையாத ஒன்று எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் மற்றும் ஏனைய முரண்பட்ட காரணிகளின் அடிப்படையில் பயங்கரவாதம் குறித்து நாடுகளுக்கு இடையில் மாற்றுக் கருத்து நிலவினால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் பலவீனப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, 2009ஆம் ஆண்டில் இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. I will join with Sri Lankan military to fight against terrorism if found any threatening from the terrorists (ISIS, Al Kaida,Thaliban, LTTE or any other) because I'm a Muslim.

    ReplyDelete

Powered by Blogger.