Header Ads



விபத்தில் நாய் பலி - பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

வவுனியா, இரட்டைகுளம் பொலிஸில் சேவையில் ஈடுபட்டிருந்த நாய் நேற்று உயிரிழந்துள்ளது.

உடற்பயிற்சி நடவடிக்கைக்காக குறித்த பொலிஸ் நாய், அதன் பொறுப்பதிகாரியுடன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

வீதியில் பயணித்த லொன்றி ஒன்றில் மோதுண்டமையினால் இந்த நாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ நாயை பாதுகாப்பதற்கு தவறியமையினால் பொலிஸ் நாய்களுக்கு பொறுப்பான அதிகாரிக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் குற்றவாளியாகினால் அவரது பதவி இடைநீக்கம் செய்யப்படுவதோடு, நாய் பெறுமதியும் அவரிடம் அறிவிடப்படும் என வவுனியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Far batter than the human life.

    ReplyDelete
  2. When you are ready implement such punishment to the death of an official DOG, Why not punish the Killer of Lasantha, Tajudeen so on human lives.

    POLICE ? PARLIAMENT ? MINSTERS ? PRIM and PRESID..?

    ReplyDelete

Powered by Blogger.