Header Ads



பள்­ளி­வா­சல்கள் தொட­ராக தாக்­கப்படுவது குறித்து, முஸ்லிம் அமைச்சர்கள் சந்தேகம்

-ARA.Fareel-

குரு­நாகல் மாவட்­டத்தில் தொட­ராக அடுத்­த­டுத்து பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருப்­பது பல்­வேறு  சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதனால் குரு­நாகல் மாவட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கும் விசேட திட்­ட­மொன்­றினை அமுல்­ப­டுத்­து­மாறு சட்­டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார். 

தெலி­யா­கொன்ன மற்றும் நிக்­க­வ­ரெட்­டிய பள்­ளி­வா­சல்­களின் தாக்­கு­தல்கள் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் ஹலீம் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் அண்­மைக்­கா­ல­மாக பள்­ளி­வா­சல்கள் மீதான அசம்­பா­வி­தங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

இதன் பின்­ன­ணியில் யார் செயற்­ப­டு­கி­றார்கள் என்­பதை அறிந்து கொள்­வதில் அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. இது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

மீண்டும் நாட்டில் இன முறு­கல்­களை ஏற்­ப­டுத்தி அர­சியல் லாபம் தேட முயற்­சிக்­கப்­ப­டு­கி­றதா? என்­பது பற்­றியும் ஆராய வேண்­டி­யுள்­ளது. குரு­நாகல் மாவட்­டத்தில் அடுத்­த­டுத்து இரு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டி­ருப்­பது மக்கள் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் குரு­நாகல் மாவட்ட பள்­ளி­வா­சல்­களை தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்குவிசேட வேலைத்­திட்­ட­மொன்­றினை வகுக்­கு­மாறு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறேன் என்றார். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

பள்­ளி­வா­சல்கள் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர் திட்­ட­மிடல் அமைச்சர் ரவூப் ஹக்­கீமை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்­டது. அவர் பின்­வ­ரு­மாறு கருத்து தெரி­வித்தார். 

பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளாகி வரு­கின்­றமை முஸ்­லிம்கள் மத்­தியில் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சிரில் விக்­கி­ர­ம­ரத்­னவை தொடர்பு கொண்டு புலன்­வி­சா­ர­ணை­களை மேற்­கொண்டு குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்தும் படி கோரியுள்ளேன். 

வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரையும் தொடர்பு கொண்டு பள்ளிவாசல்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கோரியிருக்கிறேன். இது விடயத்தில் அரசாங்கத்திற்கும் அழுத்தங்களைக் கொடுப்பேன் என்றார். 

No comments

Powered by Blogger.