November 13, 2016

பள்ளிகளை, பாதுகாக்குமா நல்லாட்சி..?

-ARA.Fareel-

சம­யங்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்கே உரு­வா­கின. அனைத்துச் சம­யங்­களும் அன்பு, கருணை, சகோ­த­ரத்­துவம், நல்­லி­ணக்கம், மனி­தா­பி­மானம் என்­ப­வற்­றையே போதிக்­கின்­றன.   சமய வணக்­கஸ்­த­லங்கள் இந்த நற்­ப­ணி­யினை முன்­னெ­டுக்­கின்­றன. இவற்றை பள்­ளி­வா­சல்கள், பன்­ச­லைகள், கோயில்கள், ஆல­யங்கள் என்று வகைப்­ப­டுத்­தலாம். 

அப்­ப­டி­யென்றால் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும், நல்­லி­ணக்­கத்­தையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் போதிக்கும் கல்விக் கூடங்­க­ளாக செயற்­படும் பள்­ளி­வா­சல்கள் ஏன் தாக்­கப்­ப­டு­கின்­றன? எமது நாட்டில் பெரும்­பான்மை  இனத்தைச் சேர்ந்த சிலரால் பள்­ளி­வா­சல்கள் மீது ஏன் கை வைக்­கப்­ப­டு­கி­ன்றன? பள்­ளி­வா­சல்­களின் போத­னை­களை சகோ­த­ரத்­து­வத்தை பேரி­ன­வா­திகள் விரும்­ப­வில்­லையா? என்ற கேள்­விகள் இன்று மக்­க­ளி­டையே விடை­கா­ணாது, ஸ்தம்­பித்துப் போயுள்­ளன. 

எமது  நாட்டில் 2012 ஆம் ஆண்டு தம்­புள்ளை  ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் தாக்­குதல் முதல் சங்­கிலித் தொட­ராக தொடரும் தாக்­கு­தல்கள் ஏன் தடுத்து நிறுத்­தப்­ப­ட­வில்லை? இதன் பின்­னணி என்ன? என்ற கேள்­வி­க­ளுக்­கெல்லாம் உரிய பதிலை மக்கள் தேடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலே பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் அதி­க­ரித்துக் காணப்­பட்­டன.  அக்­கா­லத்தில் பொது­பல சேனா, ராவண பலய, சிங்­கள ராவய போன்ற பெளத்த அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­தி­ருந்­த­மையே இதற்குக் காரணம் எனக் கூறலாம். 

பள்­ளி­வா­ச­லுக்­கெ­தி­ரான செயற்­பா­டு­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்­திலும்  தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சி­யிலும்  பெளத்த குரு­மார்­களே பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டுள்­ளார்கள், செயற்­பட்டு வரு­கி­றார்கள் என்­பதை எவ­ராலும் மறுக்க முடி­யாது. 

அன்­று­தொட்டு இன்று வரை பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பள்­ளி­வா­ச­லுக்­கெ­தி­ரான சவால்­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்கு தொடர்ந்து போராடி வரு­கின்­றன. இதற்கு உதா­ர­ண­மாக தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தைக் குறிப்­பி­டலாம். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் நான்­கரை வரு­டங்­களைக் கடந்து விட்ட நிலையில் தீர்­வின்றி கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் அமைச்­சர்கள் விரைவில் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும், ஜனா­தி­ப­தி­யு­டனும்  பிர­த­ம­ரு­டனும்  கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம் என்று நாட்­களைக்  கடத்தி வரு­கி­றார்கள். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட பள்­ளி­வாசல் விவ­கா­ரங்­களைத் தீர்த்து வைப்­பதில் அச­மந்தப் போக்­கி­னையே கடைப்­பி­டித்து வரு­கிறார்.  தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று சில வாரங்­களில் நிகழ்வொன்றின்போது அவரைச் சந்­திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தது. அப்­போது அவ­ரிடம் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சினை இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. இதற்கு எப்­போது தீர்வு பெற்­றுக்­கொ­டுக்கப் போகின்­றீர்கள்? என்று நான் அவ­ரிடம் வின­வினேன். பொதுத் தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது. பொதுத் தேர்தல் நடந்து முடிந்­ததும் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்குத் தீர்வு பெற்­றுக்­கொ­டுப்போம் என்று அவர் எனக்கு பதி­ல­ளித்தார்.

பொதுத் தேர்­த­லொன்று நடந்து முடிந்து இரண்டு ஆண்­டுகள் நிறை­வினை நாம் எதிர்­பார்த்­தி­ருக்­கிறோம். ஆனால் இது­வரை தம்­புள்ளை பள்­ளி­வா­சலைப் பற்றி ஜனா­தி­பதி வாய்­தி­றக்­க­வில்லை? ஏன் இந்த மௌனம்? பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்கு அவர் பயப்­ப­டு­கி­றாரா? என்ற கேள்­வி­க­ளுக்கும் நாம் விடை­காண வேண்­டி­யுள்­ளது.

தெலி­யா­கொன்ன பள்­ளி­வாசல் தாக்­குதல்
அண்­மையில் ஒரு வார­கா­லத்­துக்குள் இரண்டு பள்­ளி­வா­சல்கள் ஒரே மாவட்­டத்தில் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. முன்­னெப்­பொ­ழுதும் இல்­லா­த­வாறு ஒரு பள்­ளி­வாசல் வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு தாக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்த பள்­ளி­வாசல் திங்­கட்­கி­ழமை அதி­காலை தாக்­கப்­பட்­டுள்­ளது. குரு­நாகல் நகர எல்­லைக்குள் அமைந்­தி­ருக்கும் ஜும்ஆ பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் கடந்த 4 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு 11.23 மணி­ய­ளவில் தாக்­கப்­பட்­டுள்­ளது.

தாக்­குதல் சம்­பவம் இரவு 1.30 மணி­ய­ளவில் குரு­நாகல் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸார் உடன் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களைப் பெற்று விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டன. சி.சி.ரி.வி. கமரா பதி­வு­களின் படி தாக்­கு­தல்­தா­ரிகள் மகேந்­திரா ரக கெப் வண்­டி­யொன்­றிலே வருகை தந்­துள்­ளனர். கெப் வண்­டியில் வந்த மூவரில் இருவர் இறங்கி கற்­க­ளினால் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளனர். அவர்கள் ரீ சேர்ட்டும் தலையில் தொப்­பி­ய­ணிந்தும் இருந்­துள்­ளனர். இவ்­வி­ப­ரங்கள் சி.சி.ரி.வி. கம­ராவில் பதி­வா­கி­யுள்­ள­தாக குரு­நாகல் பொலிஸார் தெரி­வித்­துள்­ளார்கள். எனவே இந்தத் தாக்­குதல் திட்­ட­மிட்டே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றமை தெளி­வா­கி­றது. பள்­ளி­வாசல் மூடும் நேரம் போன்ற விப­ரங்­களை அறிந்தே தாக்­கு­த­லுக்கு அவர்கள் சென்­றுள்­ளனர். தாக்­குதல் நடத்­திய கற்­க­ளையும் அவர்கள் தம்­மு­டனே கொண்டு வந்திருந்தனர்.

நிக்­க­வ­ரெட்­டிய நகர் பள்­ளி­வாசல் தாக்­குதல்
குரு­நாகல் மாவட்­டத்தில் தெலி­யா­கொன்ன ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு இரு தினங்­களின் பின்பு அதே மாவட்­டத்தில் திங்­கட்­கி­ழமை அதி­காலை நிக்­க­வ­ரெட்­டிய நகர் ஜும்ஆ பள்­ளி­வாசல் பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யமை முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மல்ல அனைத்து மக்­க­ளையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­னார்கள்.  பெற்றோல் குண்டுத் தாக்­கு­தல்­களால் எவ­ருக்கும் காயம் ஏற்­ப­டாத போதும் பள்­ளி­வா­சலின் பொருட்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ளது. தாக்­குதல் சந்­தேக நபர்­களைக் கைது செய்­வ­தற்கு நிக்­க­வ­ரெட்­டிய பொலிஸ் அத்­தி­யட்­சகர் சஞ்­சீவ பண்­டா­ரவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் மூன்று பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளன.

சம்­பவ தினம் இஷாத் தொழு­கையின் பின்பு பள்­ளி­வாசல் மூடப்­பட்­டது. பள்­ளி­வாசல் தினம் இரவு 10 மணிக்கு மூடப்­பட்டு அடுத்த நாள் அதி­காலை 4.30 மணிக்கே திறக்­கப்­ப­டு­கின்­றமை வழக்­க­மாகும்.  சம்­பவ தினம் அதி­காலை 1.30 மணிக்கும் 2.10 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பள்­ளி­வா­சலின் வாயிலும் கேட்டும் மூடப்­பட்­டி­ருந்த நிலையில் யன்­ன­லுக்கு மேல் பகுதி யன்னல் உடைக்­கப்­பட்டு 5 பெற்றோல் குண்­டுகள் பள்­ளி­வா­ச­லுக்குள் எறி­யப்­பட்­டுள்­ளன. ஒரு பெற்றோல் குண்டு எறியும் போது வெடித்­துள்­ள­துடன் நான்கு குண்­டு­களில் மூன்று வெடிக்­காத நிலையில் பள்­ளி­வா­ச­லுக்­குள்­ளி­லி­ருந்து பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளன. மற்­றைய குண்டு பள்­ளி­வாசல் உட்­சு­வரில் வீழ்ந்து வெடித்­துள்­ளது. 

இப் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் அதி­காலை 4.30 மணிக்கு பள்­ளி­வா­சலைத் திறப்­ப­தற்குச் சென்ற முஅத்­தி­னி­னாலே கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பின்பே நிக்­க­வ­ரெட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் பிர­தான நுழை­வா­யி­லுக்கு மேலால் உள்ள கண்­ணாடி உடைக்­கப்­பட்டு அங்கு இடப்­பட்­டி­ருந்த புடை­வை­யி­லான திரை நீக்­கப்­பட்டே குண்டு எறி­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸ் தட­ய­வியல் பிரிவில் தட­யங்கள் ஊடாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். விசா­ர­ணை­க­ளுக்­காக இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்கை மற்றும் குற்­ற­வியல் தர­வுகள், உளவுத் துறை­யி­னரின் தக­வல்­களும் பெற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பள்­ளி­வா­சலில் சி.சி.ரி.வி.கமரா பொருத்­தப்­பட்­டி­ருக்­கா­மை­யினால் அறி­வியல் ரீதி­யான சான்­று­களைப் பெற்றுக் கொள்­வதில் தடைகள் இருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். எனினும் சந்­தேக நபர்கள் தாக்­கு­த­லுக்கு வருகை தந்த பாதை­களில் உள்ள கண்­கா­ணிப்பு சி.சி.ரி.வி.கம­ராக்­களின் பதி­வு­களை பொலிஸார் பெற்றுக் கொண்­டுள்­ளனர். 

புதிய பள்­ளி­வா­சலே தாக்­கப்­பட்­டது
நிக்­க­வ­ரெட்­டிய நகரில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு திறந்து வைக்­கப்­பட்ட புதிய பள்­ளி­வா­சலே தாக்­கப்­பட்­டது. இப்­பள்­ளி­வாசல் பழைய பள்­ளி­வா­ச­லுக்கு அடுத்தே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.  புதிய பள்ளிவாசலில் இரவில் எவரும் தங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிவாசலின் முஅத்தீன் பழைய பள்ளிவாசலிலே இரவில் தங்குவது வழமையாகும். புதிய பள்ளிவாசல் இரவு 10 மணிக்கு பூட்டப்பட்டால் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கே திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

0 கருத்துரைகள்:

Post a Comment